ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த கொராணா காலக்கட்டத்தில் கற்றல் என்பது மிகவும் சாவலாக உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி அரசானது மாணவர்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளது. மாணவர்கள் இந்த விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் தாங்கள் கற்ற மற்றும் கற்காத பாடங்களை எடுத்துப் பயில மிகவும் உதவிகரமாக இருக்கும் நேரம் இது. இந்த வலைதளத்தில் மாணவர்கள் தேவையான கற்றல் வளங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி தங்களின் கற்றலுக்கு மேலும் வலு சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தில் தாங்கள் கற்ற பாடப்பகுதியினை நினைவுகூர்தல் விதமாக முதல் மூன்று இயல்கள் அடங்கிய ஒப்படைப்பு ( அலகுத் தேர்வு ) இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வினாத்தாளினை பதிவிறக்கம் செய்து இதனை ஒப்படைப்பாக A4 தாளில் தங்கள் வகுப்பு தமிழாசிரியரிடம் ஒப்படைக்கவும். மாணவர்கள் நினைவுத் திறனை சோதிப்பதற்காக இங்கு வினாக்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் இதனை வீட்டில் தேர்வாக எழுதி அதனை தங்கள் பள்ளி வாட்ஸ் அப் குழுவில் பகிரவும். பின் பள்ளி திறந்த பின் தாங்கள் எழுதிய விடைத்தாளினை தங்கள் பள்ளி தமிழாசிரியரிடம் சமர்ப்பிக்கவும். இது உங்களின் கற்றலை அளவிட உதவும் ஒரு மதிப்பீட்டு தாள். ஆகையால் இந்த வினாத்தாளை மாணவர்கள் இரு விதமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
1. ஒப்படைப்பாக கருதி எழுதினால் அனைத்து வினாக்களுக்கும் விடை எழுத வேண்டும். இதனால் வினாவானது எந்த பகுதியிலிருந்து கேட்கப்பட்டுள்ளது என அறியலாம். அந்த வினாக்களுக்கான விடைகளை எதிர் வரும் தேர்வுகளில் எழுதுவதற்கு ஒரு வாய்ப்பாக மாறலாம்.
2. இந்த வினாத்தாளினை தேர்வாக எழுதினால் தங்கள் பெற்றோரிடம் காண்பித்து அவர்களின் ஒப்பம் பெற்று சமர்ப்பிக்கலாம். இதனை தேர்வாக கருதும் போது இதுவரை தாங்கள் கற்ற பாடப்பொருண்மைகளை நம்மை நாமே அளந்தறிய உதவும்.
மாணவர்கள் எப்படி கருதினாலும், இந்த வினாத்தாளுக்கு விடை எழுதுவதனை முக்கிய நோக்கமாக கருதி எழுத வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த வினாத்தாளினை அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக இந்த வலைதளத்திற்கு தந்து உதவிய ஆசிரியருக்கு தமிழ்விதையின் சார்பாகவும், மற்றும் மாணவர்களின் சார்பாகவும் நன்றி நவில்கிறோம்.
நன்றி.
தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப் பள்ளி,
சாத்துக்கூடல்,
கடலூர் மாவட்டம்.