காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 27 - 01- 2022
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -7 - வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும்
அ.சரியான
விடைத் தேர்வு செய்க.
1. வல்லினம் மிக வேண்டிய
இடத்தில் மிகாமல் எழுதுவதும்,மிகக்கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும்
_________ பிழை
அ. வாக்கியப்பிழை ஆ. எழுத்து
பிழை இ. சந்திப்பிழை
ஈ. இலக்கணப் பிழை
2. சுட்டுத் திரிபுகளை அடுத்து
வல்லினம் மிகும் என்பதற்கு சான்று தருக.
அ. எந்தத் திசை
ஆ. எந்தச் சட்டை
இ. தலையைக் காட்டு
ஈ. இந்தப் பக்கம்
3. இரண்டாம் வேற்றுமை உருபு
“ ஐ “ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும் என்பதற்கு சான்று தருக.
அ. இந்தக் கவிதை
ஆ. எந்தச் சட்டை
இ. தலையைக் காட்டு
ஈ. இந்தப் பக்கம்
4.நான்காம் வேற்றுமை உருபாகிய
“ கு “ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம்
மிகும் என்பதற்கு சான்று தருக.
அ. பாடத்தைப் படி ஆ.
எழுதாப்பாடல் இ. அப்படிச்செய்
ஈ. அவனுக்குக் கொடு
5. உருவகத்தில் வல்லினம்
மிகும் என்பதற்கு சான்று தருக.
அ. மலர்ப்பாதம் ஆ.
எப்படித் தெரியும்? இ. வாய்ப்பவளம் ஈ. வட்டப்பாறை
6. உவமைத் தொகையில் வல்லினம்
மிகும் என்பதற்குச் சான்று தருக.
அ. மலர்ப்பாதம் ஆ.
எப்படித் தெரியும்? இ. வாய்ப்பவளம் ஈ. வட்டப்பாறை
7. ஈறு கெட்ட எதிர்மறைப்
பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும் என்பதற்கு சான்று தருக_____________
அ. பாடத்தைப் படி ஆ.
எழுதாப்பாடல் இ. அப்படிச்செய்
ஈ. அவனுக்குக் கொடு
8. இவற்றில் எது சரியானது?
அ. இதுப்பெரியது ஆ. எழுதும் படிச் சொன்னேன் இ. தாய்த்தந்தை ஈ.
எட்டுப்புத்தகம்
9. எழுவாய்ச் சொற்களின் பின்
வல்லினம் மிகாது என்பதற்குச் சான்று தருக.
அ. எழுதிய பாடல் ஆ. எழுதாத
பாடல் இ.
வெற்றிலைபாக்கு
ஈ. யானை பிளிறியது
10. வினைத் தொகையில் வல்லினம்
மிகாது என்பதற்குச் சான்று தருக.
அ. தாய் தந்தை ஆ. வெற்றிலை
பாக்கு இ.
அண்ணன் தம்பி ஈ. சுடுசோறு
இணைய வழித் தேர்வு
பணித்தாள் - PDF