7TH - KALVI TV - 31-01-2022 -TAMIL - PUDUMAI VILAKKU

    https://tamilrk-seed.blogspot.com

காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           31  - 01- 2022            

வகுப்பு                    ஏழாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :     புதுமை விளக்கு

காணொளி
7-ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் QR CODE VIDEO 




பணித்தாள்

அ.சரியான விடைத் தேர்வு செய்க.

1. உள்ளத் தூய்மையோடு நன்னெறியில் நடப்பது _______________ இயல்பு

அ. முதியோர்                         ஆ. ஆட்சியர்            இ. சான்றோர்       ஈ. குழந்தைகள்

2 . இறைவழிபாட்டில் _____________ விட உள்ளத் தூய்மையே முதன்மையானது.

அ. அபிஷேகம்        ஆ. அன்னதானம்                     இ. சடங்கு                  ஈ. கற்பூரம்

3. வையம் என்பதன் பொருள் _______________

அ. நெருப்பு                     ஆ. வானம்                             இ. உலகம்                ஈ. காற்று

4. ஆழி என்பதன் பொருள்_______________

அ. ஆறு                       ஆ. குளம்                         இ. கடல்                                 ஈ. குட்டை             

5. எதனை அகல் விளக்காக ஒப்பிடுகிறார் பொய்கை ஆழ்வார்_______________

அ.  வானம்                      ஆ. பூமி                         இ. கடல்                                 ஈ. காற்று

6.  கடலை என்னவாக கருதுகிறார் பொய்கை ஆழ்வார்_______________

அ) தீபம்              ஆ) சுடர்                        இ) நெய்                          ஈ) அடித்தளம்

7 பொய்கை ஆழ்வார் வழிபடும் தெய்வம்_______________

அ) சிவன்            ஆ) துர்க்கை                    இ) பெருமாள்                  ஈ) விநாயகர்

 8. கதிரவனை என்னவாக கருதுகிறார் பொய்கை ஆழ்வார் ______________

அ) தீபம்              ஆ) சுடர்                        இ) நெய்                          ஈ) அடித்தளம்

9. பொய்கை ஆழ்வார் பிறந்த மாவட்டம்_____________________

            அ) திருவண்ணாமலை                   ஆ) திருச்சி          இ) காஞ்சிபுரம்     ஈ) கன்னியாகுமரி

 10 . பொய்கை ஆழ்வார் பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் எத்தனையாவதாக உள்ளது?

அ. முதல் திருவந்தாதி        ஆ. இரண்டாம் திருவந்தாதி           இ. ஐந்தாம் திருவந்தாதி      ஈ. எட்டாம் திருவந்தாதி

இணைய வழித் தேர்வு


பணித்தாள் - PDF


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post