மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பிற்கினிய மாணவர்களுக்கும் வணக்கம். வருகின்ற பொங்கல் விடுமுறை முடிந்து வந்தவுடன் பத்தாம் வகுப்பு மாணவர்கள் முதலில் எதிர் கொள்வது திருப்புதல் தேர்வு அதுவும் தமிழ் பாடம். எனவே மாணவர்கள் பொங்கல் விடுமுறையில் பொங்கலுக்கு சிறிது நேரம் ஒதுக்கி கொண்டாடி விட்டு, மீதம் உள்ள உள்ள நேரங்களில் படிப்புக்கான நேரமாக செலவிடவும். இதனால் வரும் திருப்புதல் தேர்வில் நாம் அதிகபட்ச மதிப்பெண் பெற இயலும். திருப்புதல் தேவர்வானது பொதுத் தேர்வு போல விடைத் தாள்கள் பள்ளி அளவில் மாற்றி திருத்தப்படும் என கூறப்பட்டுள்ளமையால் மாணவர்கள் அதற்கு தகுந்தாற் போல தம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களை நீங்கள் தயார்ப்படுத்திக் கொள்ள இந்த வலைதளம் உங்களுக்கு பெரும் உதவி புரியும்.
இந்த வலைதளத்தில் மாணவர்கள் பயிற்சிபெற ஏதுவாக முதல் மூன்று இயல்கள் மற்றும் அணி, அலகிட்டு வாய்ப்பாடு, படிவம் ஆகியவற்றைக் கொண்டு மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் இங்கே உங்களுக்காக உருவாக்கி வழங்கியுள்ளோம். மாணவர்கள் இவற்றை பதிவிறக்கம் செய்து பொங்கல் நன்னாளில் இதற்கான நேரம் ஒதுக்கி வினாத்தாளினை பயிற்சி செய்யவும். ஏனெனில் பொங்கல் முடிந்து வந்ததும் உங்களுக்கான திருப்புதல் தேர்வு தயாராக உள்ளது என்பதனை மறவாதீர்கள். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள கற்றல் வளங்கள் பயன்படுத்தி தமிழில் செம்மையாகப் பயிற்சி செய்து உயர்வான மதிப்பெண்ணை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இதனை உருவாக்கியவர் ஆசிரியர் திரு. அழகுராஜ், திருகண்ணபுரம், நாகப்பட்டிணம் ஆசிரியருக்கு தமிழ்விதை வலைதளத்தின் நெஞ்சார்ந்த நன்றி.
வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய 20 நொடிகள் காத்திருக்கவும்.