9TH-TAMIL-THIRAN-ANNUAL EXAM-ANSWER KEY-2026

 


9ம் வகுப்பு தமிழ் – முழுஆண்டுத் தேர்வு – திறன் 2026 விடைக்குறிப்பு

மொத்த மதிப்பெண் : 100

1. கட்டத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு உருவாகும் சொற்களை எடுத்து எழுதுக. (6 X 1 = 6)

·        சணல், பகல், குட்டை

·        சட்டை, நிழல், கலம்

·        மணல், குழல், மரம்

2. குறில் எழுத்துகளையும் அதற்குரிய நெடில் எழுத்துகளையும் நிரப்புக. (5 X 2 = 10)

·        அ) கல் குத்தியதால் கால் வலித்தது.

·        ஆ) குடையைக் கூடையில் வைத்தேன்.

·        இ) காலையில் மலைமீது ஏறி மாலையில் கீழே இறங்கினோம்.

·        ஈ) பல் வலித்ததால் பால் மட்டும் குடித்தான்.

·        உ) நீர் நிரம்பிய குடம் வீட்டின் கூடத்தில் இருந்தது.

3. சொல்லுக்குள் சொற்களை உருவாக்கி எழுதுக. (3 X 2 = 6)

·        அ) வைகாசித்திருவிழா: வை, காசி, திரு, விழா, வைகை.

·        ஆ) தொழில்நுட்பம்: தொழில், நுட்பம், நில், புல்.

·        இ) சொட்டுநீர்ப்பாசனம்: சொட்டு, நீர், பாசனம், நீர்ப்பாசனம்.

4. படத்திற்குத் தொடர்புடைய தொடர்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (3 X 2 = 6)

·        அ) சந்தையில் வியாபாரி ஒருவர் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்கிறார்.

·        இ) பெண் ஒருவர் காய்கறிக் கடையில் தக்காளி வாங்கிக் கொண்டிருக்கிறார்.

·        உ) சிறுவன் ஒருவன் தன் பெற்றோருடன் சந்தைக்கு வந்துள்ளான்.

5. சொற்களை முறைப்படுத்தித் தொடர் அமைத்து எழுதுக. (6 X 2 = 12)

·        ) மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.

·        ஆ) மக்கள் வாரச் சந்தைக்குச் சென்றனர்.

·        இ) முயல் காட்டில் வேகமாக ஓடியது.

·        ஈ) விடாமுயற்சியுடன் கூடிய உழைப்பு வெற்றியைத் தரும்.

·        உ) நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

·        ஊ) எறும்புகள் மழைக்காலத்திற்கு உணவைச் சேமிக்கும்.

6. உயர்திணை, அஃறிணைச் சொற்களை எழுதுக. (3 X 2 = 6)

·        அ) உயர்திணை: மயூரன்; அஃறிணை: தொலைக்காட்சி.

·        ஆ) உயர்திணை: கயல்; அஃறிணை: மரம்.

·        இ) உயர்திணை: சிறுவர்கள்; அஃறிணை: பந்து.

7. நிரப்புக. (5 X 2 = 10)

·        அ) மயில் தோகையை விரித்து அழகாக ஆடியது.

·        ஆ) தந்தை எனக்கு ஒரு புதிய மிதிவண்டி வாங்கித் தந்தார்.

·        இ) காற்றில் மரங்கள் அசைந்தன.

·        ஈ) இரவில் வானில் விண்மீன்கள் மின்னின.

·        உ) மழை பெய்ததால் குளம் நிரம்பியது.

8. உரிய வினாச் சொல்லை எழுதுக. (8 X 2 = 16)

·        அ) அண்ணன் எதனைத் தேடினார்? யார் வேலை செய்தார்?

·        ஆ) நாய் யாரைப் பார்த்து குரைத்தது? அது எங்கே ஓடி ஒளிந்தது?

·        இ) குருவி எப்படி கூடு கட்டியது? எதனைத் தின்றது?

·        ஈ) தோட்டத்தில் எத்தனை மரங்கள் உள்ளன? அத்தோட்டத்தின் உரிமையாளர் யார்?

9. பொருத்துக. (4 X 1 = 4)

·        அ) ஓங்கி - உயர்ந்து

·        ஆ) வளைந்து - நெளிந்து

·        இ) ஆடிப் - பாடி

·        ஈ) சுற்றி - வளைத்து

10. பொருத்தமான சொற்களை இணைத்து ஐந்து தொடர்கள் எழுதுக. (5 X 2 = 10)

1.    சிட்டுக்குருவி இரைதேடிப் பறந்து சென்றது.

2.   கழுகு வானில் பறந்து சென்றது.

3.   சிறுவர்கள் பூங்காவில் விளையாடினர்.

4.   வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பறந்து சென்றது.

5.   சிறுவர்கள் தண்ணீர் குடித்தனர்.

11. பிழை நீக்கி எழுதுக. (4 X 1 = 4)

·        அ) அதிகாலையில் கோழி கூவும்.

( இது வினா தவறு : அதிகாலையில் கோலி கூவும். எனக் கொடுக்கப்பட்டது. இங்கு இரு பிழைகள் உள்ளது 1. மயங்கொலி பிழை 2. மரபு பிழை ( கோழி கொக்கரிக்கும் / சேவல் கூவும் )

·        ஆ) மதியழகன் மரப் பலகையில் பலம் கொண்டு ஆணி அடித்தான்.

·        இ) ஓவியம் வரைய வண்ணங்களைக் குழை.

·        ஈ) வணிக வளாகத்தில் அபாய மணி ஒலித்தது.

12. வினாக்களுக்கு விடையளிக்க. (5 X 2 = 10)

1.    இப்போட்டியின் முக்கிய நோக்கம் அறிவுத்திறனை மேம்படுத்துவது ஆகும்.

2.   இப்போட்டியில் ஒரு போட்டியாளர் விடுகதை கூற, மற்ற போட்டியாளர்கள் அதற்கு விடை கூற வேண்டும்.

3.   போட்டியில் அதிக சரியான விடைகள் கூறுபவருக்குப் பரிசு வழங்கப்படும்.

4.   இப்போட்டியில் முன்பதிவு செய்து (அல்லது நேரடியாகச் சென்று) கலந்து கொள்ளலாம்.

5.   இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்குச் சிறப்புப் பரிசும் 'விடுகதை வேந்தன்' என்னும் பட்டமும் வழங்கப்படும்.


மொத்த மதிப்பெண்கள்: 100

WWW.TAMILVITHAI.COM | WWW.KALVIVITHAIGAL.COM

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post