👉 🔥 8th தமிழ் ஆண்டு தேர்வு 2026 Answer Key வெளியானது – உங்கள் Mark இங்கே தெரியும்! (FREE PDF)

 


 சேலம் – முழுஆண்டுத்  தேர்வு  -ஏப்ரல்-2026

எட்டாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  2.30 மணி                                                                              மதிப்பெண் : 100

பகுதி – 1

I) மதிப்பெண்கள் - 10

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ) வைப்பு

1

2.

ஆ. வனைதல்

1

3.

ஈ) வித்துகள்

1

4.

ஆ) வஞ்சி

1

5.

இ) காலாழி

1

6.

ஈ) கனகம் + சுனை

1

7.

ஆ) ஞாயிறு

1

8.

அ) ஒரு பைசாத் தமிழன்

1

9.

இ. விளி

1

10.

இ. மூன்று

1

II) கோடிட்ட இடம் நிரப்புக - 5

11.

கண்ணெழுத்துகள்

1

12 .

காவிய

1

13 .

திருப்பூர்

1

14 .

இலண்டன்

1

15

எட்டு

 

III) பொருத்துக - 5

16

பெரிய புராணம்

1

17.

சிலம்பு

1

18.

பாரியினது தேர்

1

19

சிரித்து மகிழ மட்டுமன்று

1

20

தோன்றல் விகாரம்

1

பகுதி - 2

IV) அடிமாறாமல் எழுதுக                     4 + 2 = 6

21.அ

*வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!

வாழிய வாழியவே!

வான மளந்தது அனைத்தும் அளந்திடு

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழியவே! *   - பாரதியார்

4

21ஆ

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மின்னே

படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே          -திருமூலர்

 

22

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு.

2

பகுதி - 3

V) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு குறுகிய விடையளி        5 X 2= 10

23

ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என  உருவான நிலையை ஒலி எழுத்து நிலைஎன்பர்.

2

24.

வெண்ணிலவு, சூரியன், மழை

2

25

v  மருந்தினால் நீங்கும் நோய்கள் .

v   எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள்

v   முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன.

1

1

26

தலைவர் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவருக்கு எந்தப் பழியும் ஏற்படாது.

2

27

அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில்முறையில் உருவாக்கும் கலையைக் கைவினைக் கலை எனலாம்.

1

1

28

பெருமழை                              சுழல் காற்று

2

29

Ø  மனிதர் அனைவரும் ஒரே இனத்தவர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே.

Ø   இக்கருத்துகளை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை.

2

VI ) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு குறுகிய விடையளி        5 X 2 = 10

30

க.இய,இயர், அல்

2

31

பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும்.

2

32

Ø  நான்கு வகைப்படும்.

Ø  பெயர்ச்சொல் , வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்

2

33

எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல், எழுவாய் தனித்து நின்று, இயல்பான பொருளைத் தருவது எழுவாய் வேற்றுமை என்பர்.இதனை 'முதல் வேற்றுமை' என்றும் கூறுவர்.     எடுத்துக்காட்டு: பாவை வந்தாள்.

2

34

நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும்.

    சான்று: தாய் மொழி

தாய்+மொழி = தாய்மொழி இரு சொற்களிலும் எந்த மாற்றமும் நிகழவில்லை, எனவே  இது இயல்பு புணர்ச்சி.

2

35

, , ந ல, , ள ர, ற ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

2

36

தன்வினை – தானே வினையைச் செய்தல்

 

VII) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி        5 X 3 = 15

37

Ø  எல்லா காலத்திலும் நிலைபெற்றது.

Ø  எல்லாவற்றையும் அறிந்துரைக்கிறது.

Ø  ஏழு கடல்களால் குழப்பட்ட நிலம் முழுவதும் புகழ்கொண்டது.

Ø  உலகம் உள்ளவரையிலும் வாழும்.

Ø  எங்கும் உள்ள அறியாமை இருள் நீக்கும்.

Ø  துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிர,  தமிழே! வாழ்க.

3

38

·        இயற்கையை விட்டு விலகியமை

·        மாறிப்போன உணவு முறை

·        மாசு நிறைந்த சுற்றுச்சூழல்

·        மன அழுத்தம்

3

39

v  கண்ணியம் தவறாது தன்னுடைய செயலில் திறமையைக் காட்டவேண்டும்.

v  கோபம் இல்லாமல் அறிவுடன் செயல்பட வேண்டும்..

v  பகைவனிடமும் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும்.

v  மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோயில் போன்றது. இது மறந்தவர் வாழ்க்கை தடம் தெரியாமல் போகும்.

v   வாழ்க்கை சில காலமே! அதற்குள் ஏன் அகம்பாவம்? இதனால் எந்த இலாபமும் கிடைக்காது.

v  அகம்பாவத்தைக் காட்டாமல் வாழ வேண்டும்.

3

40

Ø மேலான பொருளே! தம் தீய எண்ணங்களை அடியோடு அழித்தவர்கள் மனத்துள்ளே எழுந்தருளி இருக்கும் உண்மையான அறிவு ஒளி ஆனவனே!

Ø உன் திருவடிகளின்மேல் பற்று வைக்காமல், பணத்தின்மீது ஆசை வைத்ததால் நான் மனம் கலங்கி அலைகின்றேன்.

Ø நீ உண்மை அறிவினை உணர்ந்தவர்களின் உள்ளத்துக்குள் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக விளங்குகின்றாய்.

Ø மேலான பொருளே! ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அரிய செயலாகும். அப்பொறிகளின் இயல்பை உணர்ந்து நல்வழிப்படுத்தும் அறிவினை எனக்கு த்தந்து அருள்செய்வாயாக.

3

41

செய்யுளில் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்து, ஒரே பொருளைத் தந்தால் அது சொற்பொருள் பின்வருநிலை அணி ஆகும்.

            சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை

          வெல்லும்சொல் இன்மை அறிந்து

இக்குறளில் ‘ சொல் ‘ என்னும் சொல் ஒரே பொருளில் மீண்டும் மீண்டும் வந்துள்ளமையால் இதில் உள்ளது சொல் பொருள் பின்வருநிலையணி.

3

42

ஏழைவிவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனைப் பாதுகாக்கத்தேர்தலில் போட்டியிட அம்பேத்கர் விரும்பினார்; சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கித்தேர்தலில் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்றதுடன் அவரின் கட்சி வேட்பாளர்கள் பதினைந்து பேரும் வெற்றிபெற்றனர்.

3

43

ü  சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும்.

ü   விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள்.

ü  எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ü  கணினித்திரையிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்

3

VIII) பகுதி – 4 / கடிதம்                                  1 X 5 = 5

44அ

இடம், நாள்,

விளித்தல்

கடித விளக்கம்

இப்படிக்கு

உறை மேல் முகவரி

5

44ஆ

அனுப்புநர்

பெறுநர்

ஐயா, பொருள்

கடித விளக்கம்

இப்படிக்கு,                                                                     

இடம், நாள்

உறை மேல் முகவரி

5

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி                                           5 X 2 = 10

45

அ) கதாநாயகன்      ஆ) தொண்டு

2

46

அ) தனது                ஆ) தம்மால்

2

47

அ) அதைச் செய்தது நான் அல்லேன்

ஆ)  மல்லிகைகுளத்தில் பூக்கும் மலர் அன்று

2

48

அ) கொக்கரிக்கும்            ஆ) உண்

2

49

அ) உ            ஆ)

2

50

அ) வளைந்த கோடுகளால் அமைந்த தமிழ் எழுத்து வடடெழுத்து எனப்படும்.

ஆ) உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.

2

பகுதி - 5

IX ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி                    3 X 8 = 24

51

எழுத்து - தொடக்க நிலை :

v  மனிதன் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பி, அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான்.

v  இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.

ஓவிய எழுத்து :

v  தொடக்கக் காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ, வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.

ஒலி எழுத்து நிலை :

v  ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகியசொல்லைக் குறிப்பதாக மாறியது.

v  ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று.

v  ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை “ஒலி எழுத்து நிலை" என்பர்.

8

51ஆ

Ø  திரைப்படத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமைகொண்டவர் எம்.ஜி.ஆர்.

Ø  தாம் நடித்த திரைப்படங்களின் பாடல்கள் மூலம் உயரிய கருத்துக்களை மக்களிடம் விதைத்தார்.

Ø  வாழ்வின் உயர்நிலையை அடைந்த பின்னரும் எளிமையாக வாழ வேண்டும் என்பதைத்தன் பாடல்களில் கூறினார். அப்பாடலுக்கு ஏற்ப தாமும் வாழ்ந்தார்

Ø  பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு இலவச காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

Ø  எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர அரும்பாடுபட்டார்.

Ø  உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டுவசதித் திட்டம், ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித் திட்டம், முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் முதலிய எண்ணற்ற திட்டங்களை ஏழைகளுக்காகக் கொண்டு வந்தார்.

8

52அ

வெட்டுக்கிளியும் சருகுமானும் :

குறிஞ்சிப் புதரின் கிளையில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு வாயாடி.  ஒரு மாலை நேரம் கூரன் என்ற பெண் சருகுமானை வெட்டுக்கிளி பார்த்தது. "என்ன கூரன், பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாடகள் எங்கே போயிருந்தாய்? ஏன் இங்கும் அங்குமாய் வேகமாக ஓடுகிறாய்?' அதற்கு சருகுமான், இப்பொழுது உள்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்திக்கொண்டு வருகிறது. தலையை மட்டும் தூக்கி வெட்டுக்கிளியை எச்சரித்தது. பித்தக்கண்ணு உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே என்றது.

வெட்டுக்கிளியும் பித்தக்கண்ணும்:

    கூரனைத் தேடிக் கொண்டு பித்தக்கனானும் ஓடைப் பக்கம் வந்தது. வெட்டுக்கிளி அதன் கண்ணில் பட்டதும் அதைப் பார்த்து உறுமியது. 'கூரன் இங்கு வந்தாளா?" என்றது. வெட்டுக்கிளிக்கு உற்சாகம் தலைக்கு ஏறியது. பித்தக்கண்ணுவை இவ்வளவு  பக்கத்தில் பார்ப்பது இதுதாள் முதல்முறை, பித்தக்கண்ணுவைப் பார்த்ததால் ஏற்பட்ட பரவசத்தை அடக்க இயலாமல் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது. அதைக்கண்ட பித்தக்கண்ணு, கூரன் பதுங்கி இருந்த மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. அங்கு புனுகுப் பூனையின் துர்நாற்றமே எட்டியது.

உயிர்பிழைத்த கூரன் :

கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தை ஏறக்குறையக் காட்டிக் கொடுத்ததற்காக வெட்டுக்கிளி மீது அதற்குக் கோபமான கோபம், அதற்கு ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும் என்று எண்ணியது. 'இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் கால்களால் மிதித்து நசுக்கிவிடுவேன்' என்று கூறிக் காட்டுக்குள் ஓடியது.

வெட்டுக்கிளியின் பயம்

            அன்றிலிருந்து கூரனின் கூர்ப்பாதங்கள் எங்கே தன்மீது பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே வெட்டுக்கிளி வாழ்ந்து வருகிறது. இதனால் தாள் இன்றும் கூட வெட்டுக் கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன.

8

52ஆ

முன்னுரை:

    ''பால் மனம்' எனும் இக்கதை அ. வெண்ணிலா என்பவர் தொகுத்த 'மீதமிருக்கும் சொற்கள்” என்னும் நூலில் இடம் பெறுகின்றது. குழந்தை கிருஷ்ணாவின் பண்புகளை இனி காண்போம்.

கிருஷ்ணாவின் செயல்கள்:

   ராமுவின் அண்ணன் மகள் கிருஷ்ணா. அவள் அனைவரின் மீதும் அன்பும் இரக்கமும் உள்ளவள். ஒருநாள் தெரு நாயைப் பார்த்து பரிதாபப்படுகின்றாள்.அம்மா அதைத் தொடக்கூடாது, அப்பா திட்டுவார்கள் என்றாள். அப்பா சொன்னால் தொடலாமா? என்றாள் கிருஷ்ணா. தெருவில் கீரை கொண்டு வரும் பாட்டியைக் கண்டதும், அவளைத் தொடப் போகிறாள், அவள் உடம்பு சரியில்லாததால் அவளைத் தொடக்கூடாது என்றாள் அம்மா, சித்தப்பா, அப்பாவுக்கு உடம்பு சரியில்லாத போது நீங்கள் மட்டும் தொடலாமா? என்றாள். கிருஷ்ணா அடுத்து கைவண்டி இழுத்து வரும் ஒருவரைப் பார்த்து, அவரிடம் செருப்பு இல்லை உங்கள் செருப்பைக் கொடுங்கள் சித்தப்பா என்றாள். நன் தம்பிக்காக வைத்திருந்த பாலை எடுத்து கிருஷ்ணா ஆட்டுக்குட்டிக்குப் புகட்டுகிறாள். அம்மா என்ன மகள்? இப்படி இருக்கிறாளே! என்று புலம்புகிறார். ராமு, கிருஷ்ணாவின் மனிதநேயத்தைக் கண்டு வியக்கிறார்.

மனமாற்றம்:

    ராமு படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று, ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் திரும்புகிறார். இப்போது கிருஷ்ணாவிற்கு எட்டு வயது. அண்ணன் அண்ணியால் கிருஷ்ணா முற்றிலுமாக மாறி விட்டாள். சித்தப்பா, தம்பி தெரு நாய்க்குப் பால் சாதத்தைப் போடுகிறான் பாருங்க, டாமிக்கு தான் போடனும் என்கிறது, பிறகு ஆட்டுக்குட்டி மீது கல்லெடுத்து வீசுகிறாள். சாலை வேலை செய்யும் கூலியாள் தண்ணீர் கேட்டவுடன் கொடுக்க மறுக்கிறாள். கிருஷ்ணாவின் மன மாற்றத்தை ராமு உணர்கிறார்.

ஏமாற்றம்:     

   குழந்தைகளின் மனதை அவர்கள் வளர வளர இந்தச் சமுதாயமும் அவர்களின் பெற்றோரும் மாற்றுகின்றனர். இரக்க குணம் இல்லாமல் அவர்களை வளர்க்கும் செயல் ராமுவுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. நான் பார்த்த இரக்கமான கிருஷ்ணா இப்போது முற்றிலும் மாறி விட்டாள் என்று நொந்து கொண்டார்.

முடிவுரை:                                                  

   கடவுளின் உறுப்பினராக குழந்தை பூமியில் பிறக்கிறது. ஆனால் மனித நேயம் இல்லாத மனிதனின் உறுப்பினனாக உலகத்தை விட்டு நீங்குகிறது.

8

53

குறிப்புச் சட்டம்

முன்னுரை

இளைஞரின் சிறப்புகள்

நாட்டு வளர்ச்சி

இளைஞர்களின் பங்கு

முடிவுரை

முன்னுரை:

இனிவரும் காலம் இளைஞர்கள் காலம். எனவே இளைஞர்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்காகத் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர். நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்குக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

இளைஞர்களின் சிறப்புகள்:

            விவேகானந்தர் என்னிடம் நூறு இளைஞர்களைக் கொடுங்கள். இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார். டாக்டர் அப்துல் கலாம் அவர்களும் நம் நாட்டு இளைஞர்களின் கையில்தான் நம் நாட்டின் எதிர்காலம் உள்ளது என்று கூறினார்.

நாட்டு வளர்ச்சி:

            ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கல்வி, பொருளாதாரம், தொழில்துறை முன்னேற்றம் ஆகியவற்றைச் சார்ந்து அமைகிறது. ஒரு நாட்டினுடைய வளர்ச்சி என்பது அந்த நாட்டு இளைஞர்களின் வளர்ச்சி என்றே கூறலாம்.

இளைஞர்களின் பங்கு:

            எண்ணற்ற தொழில்துறைகளில் நம் இளைஞர்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் நம் நாட்டின் இளைஞர்கள் எண்ணற்ற புரட்சியினை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் அடைந்து நாட்டின் வளர்ச்சி மேலோங்கி நிற்கிறது.

முடிவுரை:

             "ஒரு நாட்டின் முதுசெலும்பு அந்த நாட்டு இளைஞர்கள்" என்றார் மகாத்னா காந்தி, அது முற்றிலும் உண்மையே! நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக செயல்பட்டு வருபவர்கள் இளைஞர்களே! என்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

8

53

நூலகம்

முன்னுரை

நூலகத்தின் தேவை

வகைகள்

நூலகத்திலுள்ளவை

படிக்கும் முறை

முடிவுரை

முன்னுரை:

நூலகம் அறிவின் ஊற்று

வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்

என்று கூறுகிறார் பேரறிஞர் அண்ணா. இக்கட்டுரையில் நூலகத்தின் தேவை குறித்தும், அதன் வகைகள் குறித்தும், அதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்தும் நாம் காண இருக்கிறோம்.

நூலகத்தின் தேவை:

சாதாரண மாணவர்களையும் 

            சாதனை மாணவர்களாக மாற்றுவது நூலகம்” 

 ஏழை மாணவர்களும், இளைஞர்களும் படிப்பதற்கு தேவையான நூல்களை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. சில நூல்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது .

நூலகத்தின் வகைகள்:

 மாவட்ட மைய நூலகம், மாவட்ட கிளை நூலகம், ஊரக நூலகம், தனியார் நூலகம், கல்லூரி நூலகம்,பள்ளி நூலகம், பல்கலைக்கழக நூலகம், நடமாடும் நூலகம், மின்நூலகம் என நூலகம் பலவகைப்படும்.

நூலகத்தில் உள்ளவை:

மொழி சார்ந்த நூல்கள், அறிவியல், வணிகம், நிர்வாகம், கதைகள், சட்டம் போன்ற எண்ணற்ற பிரிவுகளின் அடிப்படையில் நூல்களானது நூலகத்தில் இடம் பெற்றிருக்கும்.

 படிக்கும் முறை:

நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாக படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும் நூல்களைக் குறிக்கும் சேதப்படுத்துவது படித்த முடித்தவுடன் மீண்டும் உரிய இடத்தில் நூலை வைக்க வேண்டும்.

முடிவுரை:

 “என்னை தலைகுனிந்து படித்தால்,

   உன்னை நான் தலை நிமிரச் செய்வேன்

ன்று புத்தகம் மனிதர்களைப் பார்த்துக் கூறுவதாக புகழ் பெற்ற தொடர் உண்டு. நூலகமே என்றும் நிலையானது. அதன் மூலமே மனிதன் ஆழ்ந்த அறிவைப் பெறமுடியும் என்பதை நாம் உணர வேண்டும்.

5

விடைக்குறிப்பு தயாரிப்பு :

இளந்தமிழ் வழிகாட்டி - 8072426391

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

எட்டாம் வகுப்பு - இளந்தமிழ் வழிகாட்டி-2026-27

இளந்தமிழ் வழிகாட்டி 2026 – 2027 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தமிழ்ப் பாடததில் அதிக பட்ச மதிப்பெண் பெற உதவும் வழிகாட்டி. தொடர்புக்கு – 80724-26391

 PDF LINK

CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post