10th-Tamil-1 mark - Book Inside Questions - Thirukkural -Unit - 3 @2026

 

பத்தாம் வகுப்பு
தமிழ் - திருக்குறள்
புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்
உள் வினாக்கள்

திருக்குறள் – ஒரு மதிப்பெண் வினாக்கள்

இயல் - 3

1. ஒழுக்கம் விழுப்பம் ________ ஒழுக்கம்

  உயிரினும் ஓம்பப் _____ இக்குறளில் விடுபட்ட இடத்தில் வரும் சீர்களை நிரப்புக.

 தரலான், படும்

 

2. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு – இக்குறளில் உண்மைப் பொருள் என உணர்த்தக் கூடிய சீரைக் காண்க – மெய்ப்பொருள்

 

3.வேலோடு நின்றான் இடுவென் றதுபோலும்

  கோலோடு நின்றான் இரவு – இக்குறளில் இடம் பெற்றுள்ள உவம உருபு – போலும்

 

4. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்

   கண்ணோட்டம் இல்லாத கண் – இக்குறளில் பயின்று வரும் அணி – எடுத்துக்காட்டு 

   உவமை அணி

 

5. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்

   குரிமை உடைத்திவ் வுலகு – இக்குறளில் கடமை என்பதைக் குறிக்கும் சீரைக் காண்க –

    கருமம்

 

6. ஊழையும் உப்பக்கம் ________ உலைவின்றித்

  தாழா ________பவர் – இக்குறளில் விடுப்பட்ட இடத்தில் வரும் சீர்களை நிரப்புக. காண்பர்,

  துஞற்று

 

7. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய

  கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் பயின்று வரும் அளபெடை – இன்னிசை அளபெடை

 

8. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்

   நச்சு மரம்பழுத் தற்று – இக்குறளில் பயின்று வரும் அணி – உவமை அணி

 

9. பெருநாவலர், முதற்பாவலர், பொய்யில் புலவர் முதலிய சிறப்பு பெயர்களைக் கொண்டவர் –

   திருவள்ளுவர்.

 

10. திருக்குறளில் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் – 38

 

11. திருக்குறளில் பொருட்ப்பாலில் உள்ள அதிகாரங்கள் – 70

 

12. திருக்குறளில் இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் – 25

 

13. பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என நான்கு இயல்களைக் கொண்ட பால் – அறத்துப்பால்


14. அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என மூன்று இயல்களைக் கொண்ட பால் –     

      பொருட்பால்

15. களவியல், கற்பியல் என இரண்டு இயல்களைக் கொண்ட பால் – இன்பத்துப்பால்

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post