7TH-TAMIL-THIRAN-CLO-EVALUATION-NANAEY SEYVEN


 

📘 ஏழாம் வகுப்பு – தமிழ் திறன் – 2025

வகுப்புநிலைத் திறன்கள் – மதிப்பீடு : நானே செய்வேன்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க (10 × 1 = 10)

1️⃣ சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) துறைமுகம், திரையரங்கு, தீப்பொறி, தாய்மொழி, தலைக்கவசம்
ஆ) முதுகெலும்பு, மின்தூக்கி, மீன்தொட்டி, மாலை நேரம், மருந்துக் கடை
இ) பேருந்து நிலையம், பயண அட்டை, பாய்மரம், பிற்பகல், பொருள்கள்
ஈ) கணிப்பான், காவலாளி, கீழடி, குறும்படம், கேழ்வரகு ✅

2️⃣ ஒரு செயல் நடந்து முடிந்ததைக் குறிக்கும் சொல் எது?
அ) படி   ஆ) படித்தான் ✅   இ) படிப்பான்   ஈ) படிக்கின்றான்

3️⃣ மாணவர்கள் கதை எழுதுகின்றனர் — இதற்கேற்ற வினாவைத் தேர்வு செய்க.
அ) மாணவர்கள் என்ன செய்கின்றனர்? ✅
ஆ) மாணவர்கள் ஏன் செய்கின்றனர்?
இ) மாணவர்கள் எங்கே செய்கின்றனர்?
ஈ) மாணவர்கள் எதனால் செய்கின்றனர்?

4️⃣ “கிளி அரண்மனையின் அவையில் இருந்தது.” — இது எந்த காலம்?
அ) நிகழ்காலம்   ஆ) எதிர்காலம்   இ) இறந்த காலம் ✅   ஈ) முக்காலம்

5️⃣ “நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை; அது குறித்து மேலும் விளக்கம் சொல்லுங்கள்.” — அடிக்கோடிட்ட சொற்கள் குறிக்கும் இடங்கள் யாவை?
அ) படர்க்கை, தன்மை   ஆ) முன்னிலை, படர்க்கை   இ) தன்மை, முன்னிலை   ஈ) முன்னிலை, தன்மை ✅

6️⃣ உயர்திணைச் சொல் அமையாத தொடர் எது?
அ) கண்மணி வாங்கிய பை
ஆ) அகிலன் செய்த பொம்மை
இ) விண்மீன் தந்த ஒளி ✅
ஈ) கயல் கூறிய புதிர்

7️⃣ வினாச் சொற்கள் மட்டும் அமைந்த தொகுப்பு எது?
அ) எங்கள், எப்போது, யார், எப்படி, என்ன
ஆ) எங்கு, எப்போது, யார், அவர்கள், யார், எதற்கு
இ) எங்கு, எப்போது, என்ன, எதற்கு, எப்படி, ஏன், யார் ✅
ஈ) எப்போது, இவர்கள், என்ன, எதற்கு, யார், ஏன்

8️⃣ சரியான மயங்கொலிச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
கவின் வழுக்கி விழுந்ததால் _________ யால் துடித்தான்.
அ) வலி ✅   ஆ) வழி   இ) வளி   ஈ) வரி

9️⃣ பிழையில்லாத தொடரைத் தெரிவு செய்க.
அ) கிழியின் அலகு பார்ப்பதற்கு அழகு
ஆ) கிளியின் அழகு பார்ப்பதற்கு அலகு
இ) கிலியின் அலகு பார்ப்பதற்கு அளகு
ஈ) கிளியின் அலகு பார்ப்பதற்கு அழகு ✅

🔟 மகிழினி பாட்டு _______
அ) பாடினாள் ✅   ஆ) பாடின   இ) பாடினான்   ஈ) பாடியது


📄 PDF பதிவிறக்கம் சில நொடிகளில் துவங்கும்...

10
👉 PDF ஐ திறக்க

🌸 தமிழ்விதை & கல்விவிதைகள் – மாணவர்களின் கல்விக் களஞ்சியம் 🌸

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post