7TH-TAMIL-TERM2-UNIT-1-NOTES OF LESSON - THEY ILAI THOTTA PATTU

 

மாதம்               :        அக்டோபர்

வகுப்பு              :       ஏழாம் வகுப்பு

பருவம்             :       இரண்டாம் பருவம் – இயல்-1    

 பாடம்              :       தமிழ்                             

பாடத்தலைப்பு   :       தேயிலைத் தோட்டப் பாட்டு

                                                                        

அறிமுகம்                    :

Ø   நீங்கள் காலையில் எழுந்ததும் அருந்துவது நீரா? தேநீரா?

Ø  வீடு மாறும் போது நாம் எவ்வகையான சூழ்நிலையை அனுபவிக்கிறோம் எனக் கூறுக;

கற்பித்தல் துணைக் கருவிகள்           :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                       :

Ø  தமிழரின் புலம்பெயர் வாழ்வையும் அதற்கான காரணங்களையும் அறிய முற்படுதல்

ஆசிரியர் குறிப்பு            :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்

Ø  சீர் பிரித்து வாசித்தல்

Ø  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø  பாடலின் பொருளை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடல்

Ø  தேயிலைத் தோட்ட, கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாக மாறிய காரணம் அறிதல்

Ø  தொழிலாளர்களாக அவர்கள் படும் துன்பம் குறித்துக் கூறல்

Ø  புலம் பெயர்தல் பற்றியும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் கூறல்

கருத்து வரைபடம்          :                         தேயிலைத் தோட்டப்பாட்டு



விளக்கம்    :  ( தொகுத்தல் )

தேயிலைத் தோட்டப் பாட்டு

·       இந்திய நாடு வளங்கள் நிறைந்த நாடு

·       வெளிநாட்டினர் வந்து புகுதல்.

·       சொந்த நாட்டில் அடிமைகளாக வேலை செய்தல்

·       ஆயிரம் கணக்கில் கணக்கெழுதி கடனாளி ஆக்கி வெளிநாடுகளில் வேலை செய்ய அனுப்பினர்.

·       தொழிலாளர்கள் துன்படக் காரணம் கல்வி, ஒழுக்கம், நாகரிகம் ஆகியவை இல்லாமையே

காணொளிகள்                 :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

o  ஆசிரியர் குறிப்பு, நூற் குறிப்பு அறிதல்

o  செய்யுளினைச் சீர் பிரித்து வாசித்தல்

o  செய்யுளில் புதிய சொற்களுக்கான பொருள் அறிதல்

o  செய்யுளில் காணப்படும் கருத்தினை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடல்

o  தொழிலாளர்கள் நிலையை உணர்தல்

o  புலம் பெயர் தொழிலாளர்களின் வறிய நிலையை அறிதல்

o  கல்வி, ஒழுக்கம், நாகரிகம் எவ்வளவு முக்கியமானது என்பதனை பாடல் வழியாக உணர்தல்.

மதிப்பீடு                       :

                          LOT :

Ø  மக்களுக்கு வருமானம் கொடுத்து அவர்களைக் காப்பாற்றியது ___

Ø  லங்கைத் தீவு என்பது ______

MOT

Ø  மக்கள் விலங்குகளைப் போல வாழக் காரணம் என்ன?

Ø  இந்திய நாடு முன்பு எவ்வாறு இருந்தது?

HOT:

Ø  கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர நீங்கள் கூறும் வழிமுறைகள் யாவை?

Ø   கல்வி ஏன் இன்றியமையாதது?

கற்றல் விளைவுகள்         :

Ø  T715 – பல்வேறு கலைகளிலும், தொழில்களிலும் ( கைத்தொழில், கட்டடக் கலை, உழவு, நாட்டியம் முதலானவை ) பயன்படுத்தும் மொழி பற்றிய கருத்தை ஆர்வமாக வெளிப்படுத்துதல்

குறைதீர் கற்றல்    :       

·       மதிப்பீட்டின் மூலம் மாணவர்கள் கடினமாக உணரும் பகுதியைக் கண்டு எளிமைப்படுத்தி சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்

வலுவூட்டல்         :

Ø  பாடப்பொருளை மீண்டும் கற்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்.

தொடர் பணி          :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

 

                         


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post