7TH-TAMIL-TERM2-NOTES OF LESSON -UNIT-1- VALVIKKUM KALVI

 

மாதம்               :        அக்டோபர்                                     

வகுப்பு              :       ஏழாம் வகுப்பு

பருவம்             :       இரண்டாம் பருவம் – இயல்-1    

பாடம்               :       தமிழ்                                      

பாடத்தலைப்பு   :       வாழ்விக்கும் கல்வி                           

  அறிமுகம்                          :

Ø   கல்வியின் முக்கியத்துகம் உணர்த்தும் சிறு கதை ஒன்றைக் கூறி அறிமுகம் செய்தல்./ சுற்றுபுறத்தில் கல்வி பயின்று நல்ல நிலையில் உள்ள நபர்களின் முயற்சியினை கலந்துரையாடல்

கற்பித்தல் துணைக் கருவிகள்          :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                             :

Ø  கல்வியே அனைத்திற்கும் அடிப்படை என்பதனை உணர்தல்

Ø  கல்வியின் பலவகைத் துறைகளைப் பற்றி அறிதல்

ஆசிரியர் குறிப்பு                  :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்

Ø  உரைப்பத்தியினை நிறுத்தற்குறி அறிந்து வாசித்தல்

Ø  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø  பாடப்பகுதியினை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடல்

Ø  கல்வியின் பெருமைகளைக் கூறல்

கருத்து  வரைபடம்               :                                          வாழ்விக்கும் கல்வி

விளக்கம்       :         ( தொகுத்தல் )

வாழ்விக்கும் கல்வி

Ø  உலகின் பல்வகையான செல்வங்களில் அழியாத செல்வம் கல்விச்செல்வம்

Ø  உலகில் மிகவும் அருமையானது காலம். போனால் வராது.

Ø  கேடில் விழுச்செல்வம் என்று கல்வியை அழியாச் செல்வமாக குறிப்பிடுகின்றனர்.

Ø  கல்வி ஓர் விளக்கு.

Ø  கல்வி அறிவு இல்லாதவர்களை  விலங்கு என்று திருவள்ளுவர் குறை கூறியவர்.

Ø  கல்வியும், பள்ளியும் : கல்வியை பள்ளியில் சென்று பயிலுதல் சிறப்பு

Ø  கற்க கசடற : நாம் படிக்க வேண்டிய நூல்களை கசடற கற்க வேண்டும்.

காணொளிகள்           :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

o  ஆசிரியர் குறிப்பு பற்றி அறிதல்

o  உரைப்பத்தி வாசித்தல்

o  புதிய சொற்களை அடையாளம் கண்டு பொருள் அறிதல்

o  பாடப்பகுதியினை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்

o  உரைப்பத்தி மேற்கோள் பற்றி அறிந்து கொள்ளுதல்

o  கல்வியின் முக்கியத்துவத்தை பாடப்பகுதியின் துணைக் கொண்டு அறிதல்

மதிப்பீடு                             :

                              LOT :

Ø  காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம்________

Ø  கல்வியில்லாத நாடு _______ வீடு

MOT

Ø  மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?

Ø  நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?

HOT:

Ø  கல்வியையும் விளக்கையும் திருவள்ளுவர் எவ்வாறு ஒப்பிடுகிறார்?

Ø  நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள் கருதுவன யாவை?

குறைதீர் கற்றல்    :       

·       மதிப்பீட்டின் மூலம் மாணவர்கள் கடினமாக உணரும் பகுதியைக் கண்டு எளிமைப்படுத்தி சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்

வலுவூட்டல்         :

Ø  பாடப்பொருளை மீண்டும் கற்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்.

கற்றல் விளைவுகள்    :

Ø  T704 – தாங்கள் படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து அவற்றின் மீதான  வினாக்கள் எழுப்புதல்,கருத்தாடலை தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்

தொடர் பணி              :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  கல்வித் தொடர்பான பாடல்வரிகளை தொகுத்து எழுதி வருக.

 

__________நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post