7TH-TAMIL-TERM2-NOTES OF LESSON - ALIYA SELVAM

 




மாதம்                  :         அக்டோபர்

வகுப்பு                 :        ஏழாம் வகுப்பு

பருவம்                :        இரண்டாம் பருவம்

 பாடம்                  :        தமிழ் - இயல் -1                            

பாடத்தலைப்பு       :        அழியாச் செல்வம்

                                                                        

அறிமுகம்                    :

Ø   தமிழ்மொழியின் சிறப்புக் கூறும் பாடல் ஒன்றினைக் கூறுக

Ø  கல்வி குறித்து நீ அறிந்த செய்திகளை கூறுக

கற்பித்தல் துணைக் கருவிகள்           :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                       :

Ø  கல்வியே அனைத்திற்கும் அடிப்படை என்பதனை உணர்தல்

ஆசிரியர் குறிப்பு            :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்

Ø  சீர் பிரித்து வாசித்தல்

Ø  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø  பாடலின் பொருளை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடல்

Ø  கல்வியின் பெருமைகளைக் கூறல்

கருத்து வரைபடம்          :                         அழியாச் செல்வம்


விளக்கம்    :  ( தொகுத்தல் )

அழியாச் செல்வம்

·       கல்வி பொருள் போல் வைத்திருந்தாலும் பிறரால் கொள்ளப்படாது.

·       ஒருவருக்குக் கொடுத்தாலும் குறைவுபடாது

·       அரசராலும் கவர் முடியாது

·       தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டியச் செல்வம் கல்வி

காணொளிகள்                 :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

o  ஆசிரியர் குறிப்பு, நூற் குறிப்பு அறிதல்

o  செய்யுளினைச் சீர் பிரித்து வாசித்தல்

o  செய்யுளில் புதிய சொற்களுக்கான பொருள் அறிதல்

o  செய்யுளில் காணப்படும் கருத்தினை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடல்

o  மனப்பாடப் பகுதியினை மன்னம் செய்தல்

o  மனப்பாடப்பகுதியினை இனிய இராகத்தில் பாடுதல்

மதிப்பீடு                       :

                          LOT :

Ø  வேளாண் வேதம் என அழைக்கப்படுவது எது?

Ø  ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேன்டிய செல்வம் ________

MOT

Ø  கல்வி பெறுவதினால் கிடைக்கும் பயன்களைக் கூறுக

Ø  கல்வி செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறுவன யாவை?

HOT:

Ø  கல்வியின் சிறப்பினை விளக்கும் கதை அல்லது நீ அறிந்த கொண்ட நிகழ்வுக் குறித்துக் கூறுக

Ø  ‘ கல்விச் செல்வம் அழியாத செல்வம் எனப்படுவது ஏன்?

குறைதீர் கற்றல்    :       

·       மதிப்பீட்டின் மூலம் மாணவர்கள் கடினமாக உணரும் பகுதியைக் கண்டு எளிமைப்படுத்தி சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்

வலுவூட்டல்         :

Ø  பாடப்பொருளை மீண்டும் கற்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்.

கற்றல் விளைவுகள்         :

Ø  T716 – மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக் கூறுகளையும்.சொற்கள், சொற்றொடர்கள் போன்றவற்றின் பொருண்மை உணர்ந்து அவற்றையும் தமது உரையாடலில் பயன்படுத்துதல்

தொடர் பணி          :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

 

                          


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post