மாதம் : நவம்பர்,டிசம்பர்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பருவம் : இரண்டாம் பருவம் – இயல்-2
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : தமிழ் ஒளிர் இடங்கள்
அறிமுகம் :
Ø நீங்கள் சென்று வந்த சுற்றுலாத் தலங்கள் பற்றிக்
கூறுக
கற்பித்தல்
துணைக் கருவிகள் :
Ø
கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல்
அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்
நோக்கம் :
Ø தமிழக சுற்றுலா இடங்களையும்
அவை வெளிப்படுத்தும் கலை, பண்பாடுக் கூறுகளையும் படித்தறிதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை அறிமுகம்
செய்தல்
Ø விரிவானப் பகுதியினை
வாசிக்க வைத்தல்
Ø நிறுத்தற் குறி அறிந்து
வாசிக்க வைத்தல்
Ø சுற்றுலாத் தலங்கள்
பற்றிக் கூறல்
Ø சுற்றுலாத் தலங்களின்
தன்மைக் குறித்து கூறல்
கருத்து வரைபடம் : தமிழ்
ஒளிர் இடங்கள்

விளக்கம் : (
தொகுத்தல் )
தமிழ் ஒளிர் இடங்கள்
Ø இந்தியாவில்
உள்ள தொன்மையான நூலகங்களுள் தஞ்சை சரசுவதி மகால் நூலகமும் ஒன்று. இந்நூலகம்
கி.பி. (பொ.ஆ.) 1122 முதல் இயங்கி வருவதாகக் கல்வெட்டுச்
செய்திகள் கூறுகின்றன
Ø தமிழ்
பல்கலைகழகம் – தஞ்சாவூர்
o
தமிழக அரசால் கி.பி. (பொ.ஆ.) 1981 இல் தோற்றுவிக்கப்பட்டது.
Ø உ.வே.சா
– நூலகம் – சென்னை
o
1942 – இல் தொடக்கம்
o
2128 ஓலைச்சுவடிகளும், 2941 தமிழ் நூல்களும்
உள்ளன.
Ø கீழ்திசை
நூலகம் - சென்னை
o
1869 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Ø கன்னிமாரா
நூலகம் – சென்னை
o
1896 இல் தொடங்கப்பட்டது.
o
தமிழ்நாட்டின் மைய நூலகம்
Ø வள்ளுவர்
கோட்டம் – சென்னை
o
திருவள்ளுவரின் புகழை
உலகறியச் செய்யும் வகையில் சென்னைக் கோடம்பாக்கத்தில்
வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
o
இதன் கட்டுமானப் பணிகள்
கி.பி.(பொ.ஆ.) 1973 இல் தொடங்கி
1976 இல் முடிக்கப்பட்டன.
Ø திருவள்ளுவர்
சிலை – கன்னியாகுமரி
o
திருவள்ளுவர் சிலை
அமைப்பதற்கு மூன்று டன் முதல் எட்டு டன் வரை எடை உள்ள 3,681
கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
o
திருவள்ளுவர் சிலை மொத்தம் ஏழாயிரம் டன் எடை கொண்டது
Ø உலகத்
தமிழ்ச் சங்கம் – மதுரை
o
கி.பி. (பொ.ஆ.) 1981-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெ ற்ற உலகத்த மிழ் மாநாட்டில் மதுரையில் உலகத்
தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
Ø சிற்பக்
கலைக்கூடம் – பூம்புகார்
o
கி.பி.(பொ.ஆ.) 1973
ஆம் ஆண்டு பூம்புகார் கடற்கரையில் சிற்பக் கலைக்கூடம் ஒன்று
ஏற்படுத்தப்பட்டது.
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொளிகள்
மாணவர்
செயல்பாடு :
o நிறுத்தற்
குறி அறிந்து வாசித்தல்
o சுற்றுலாத்தலங்களை
அறிதல்
o சுற்றுலாத்
தலங்களின் பயன்பாடு அறிதல்
o சுற்றுலாத்தலங்களின்
அவசியம் மற்றும் தொன்மையை அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø நீ
அறிந்த சுற்றுலாத் தலங்கள் யாவை?
Ø பல்வேறு
மொழிகளின் ஓலைச்சுவடிகள் எங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது?
MOT
Ø தஞ்சை
தமிழ்ப் பல்கலை கழகத்தின் சிறப்புப் பற்றிக் கூறுக
Ø கன்னிமாரா
நூலகம் பற்றி கூறுக
HOT:
Ø சுற்றுலாத்
தலங்கள் மூலம் நீங்கள் எவற்றையெல்லாம் தெரிந்து கொள்வீர்கள்?
Ø நீங்கள்
கண்டு களித்த இடங்களைப் பற்றிக் கூறுக.
குறைதீர் கற்றல் :
Ø மதிப்பீட்டின்
அடிப்படையில் பாடத்தின் கடினப் பகுதியினை எளிமையாக சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து
குறைதீர் கற்றலை மேற்கொள்ளுதல்
வலுவூட்டல் :
Ø பாடப்பகுதியினை
மீண்டும் கற்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்.
கற்றல் விளைவுகள் :
Ø T702
– ஒன்றைப் படிக்கும் போது அந்தப் படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளைப்
புரிந்துகொள்ள முயற்சி செய்தலும் அக்கருத்துகளைத் தமது சொந்த கருத்துகளுடனும் அனுபவங்களுடனும்
ஒப்பிட்டு, தமது குறிப்பிட்ட கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும், மாறுபடுதலையும்
அறிதல்
தொடர் பணி :
Ø பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு
எழுதுதல்
_____________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை
