7TH-TAMIL-TERM2-NOTES OF LESSON -UNIT-2- THOLIR PEYER

 

மாதம்               :       நவம்பர், டிசம்பர்

வகுப்பு                :        ஏழாம் வகுப்பு

பருவம்               :        இரண்டாம் பருவம் – இயல்-  2

பாடம்               :       தமிழ்                             

பாடத்தலைப்பு   :       தொழிற்பெயர்

                                                                       

அறிமுகம்                    :

Ø  நீங்கள் என்னென்ன செயல்களை செய்வீர்கள் என்பதனை ஒரு தாளில் எழுதி கூற வைத்தல்

கற்பித்தல் துணைக் கருவிகள்           :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                       :

Ø  தொழிற்பெயரின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்

ஆசிரியர் குறிப்பு            :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்

Ø  தொழிற்பெயர் பற்றிக் கூறல்

Ø  தொழிற்பெயரின் வகைகளைக் கூறல்

Ø  தொழிற்பெயரை வாழ்வியலோடு தொடர்புப் படுத்துதல்

கருத்து வரைபடம்          :                தொழிற்பெயர்

விளக்கம்    :        ( தொகுத்தல் )       தொழிற்பெயர்

Ø  ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர் எனப்படும்.

Ø  தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது.

Ø  படர்க்கை இடத்தில் மட்டும் வரும்.

Ø  விகுதி பெற்ற தொழிற்பெயர் : தல், அல், அம், , கை, வை, கு, பு, வு, தி, சி, வி, மை போன்றவை தொழிற்பெயர் விகுதிகளாக வரும்.

Ø  முதல்நிலைத் தொழிற்பெயர் : முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும

Ø  முதல்நிலை திரிந்த தொழிற்பெயர் - முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்

காணொளிகள்               :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

o  நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

o  சுற்றுலாத்தலங்களை அறிதல்

o  சுற்றுலாத் தலங்களின் பயன்பாடு அறிதல்

o  சுற்றுலாத்தலங்களின் அவசியம் மற்றும் தொன்மையை அறிதல்

o  தொழிற் பெயர் பற்றி அறிதல்

o  தொழிற்பெயரின் வகைகளை அறிதல்

o  விகுதி பெற்ற தொழிற்பெயர்களைப் பற்றி அறிதல்

o  முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் பற்றிக் கூறுதல்

o  தொழிற்பெயர்களை வாழ்வியலோடு தொடர்புப்படுத்துதல்

மதிப்பீடு                       :

                          LOT :

Ø  தொழிற் பெயர் என்றால் என்ன?

Ø  இவற்றில் எது தொழிற் பெயர்? வந்தான்,வருதல், வந்தவன்,

MOT

Ø  தொழிற்பெயர் எவற்றையெல்லாம் காட்டாது?

Ø  தொழிற்பெயருக்கும், வினைமுற்றுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

HOT:

Ø  நாம் அன்றாடம் செய்யும் செயல்பாடுகளில் காணும் தொழிற்பெயர்களைக் கூறுக.

Ø  முதல்நிலைத் தொழிற்பெயர், முதல் நிலை திரிந்த தொழிற்பெயர் வேறுபாடு தருக.

 

குறைதீர் கற்றல்            :

Ø  மதிப்பீட்டின் அடிப்படையில் பாடத்தின் கடினப் பகுதியினை எளிமையாக சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து குறைதீர் கற்றலை மேற்கொள்ளுதல்

வலுவூட்டல்         :

Ø  பாடப்பகுதியினை மீண்டும் கற்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்.

கற்றல் விளைவுகள்         :

Ø  T710 – பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்பு கூறுகளைத் தேடிக் கண்டறிதல்

Ø  T816 – மொழிப் பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றை தமது மொழியில் பயன்படுத்துதல்

தொடர் பணி          :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

_______________________________________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

 

                         

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post