7TH-TAMIL-TERM2-NOTES OF LESSON -UNIT-2- PEYSUM OVIYANGAL

 

மாதம்               :        நவம்பர். டிசம்பர்

வகுப்பு             :       ஏழாம் வகுப்பு

பருவம்             :       இரண்டாம் பருவம் – இயல்-2    

 பாடம்              :       தமிழ்                      

பாடத்தலைப்பு   :        பேசும் ஓவியங்கள்

                                                                        

அறிமுகம்                    :

Ø  ஓவியங்களின் பல்வேறு வகைப்பட்ட படங்களை மடிக்கணினி வாயிலாக காண்பித்து அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக் கருவிகள்           :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                       :

Ø  ஓவியக் கலையின் மேன்மையும், அது மனித வாழ்வோடு  இணைந்துள்ள நுட்பத்தையும் உணர்ந்து போற்றுதல்

ஆசிரியர் குறிப்பு            :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்

Ø  உரையாடல் வடிவில் அமைந்துள்ள பாடப்பகுதியினை மாணவர்களை பங்கேற்க வைத்து நடிக்க வைத்தல்

Ø  ஓவியங்களின் தன்மையைக் கூறல்

Ø  ஓவியங்கள் எவ்வாறு மனித வாழ்வியலோடு இணைந்துள்ளது என்பதனை நடைமுறை உதாரணங்களைக் கூறி ஒப்பிடல்

நினைவு வரைபடம்         :

பேசும் ஓவியங்கள்

விளக்கம்    :  ( தொகுத்தல் )

பேசும் ஓவியங்கள்

Ø  ஒரு கருத்தைப் பேச்சாலும் எழுத்தாலும் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் ஓர் ஓவியத்தால் மிக நுட்பமாகப் புரிய வைத்துவிட முடியும்

Ø  ஓவியக்கலை நுண்கலைகளுல் ஒன்று

Ø  குகை ஓவியல் – கோட்டோவியம்

Ø  சுவர் ஓவியம் - தஞ்சைப் பெரியகோயிலில் சுவர் ஓவியங்கள் ஏராளமாகக் காண முடியும்.

Ø  துணி ஓவியம் - துணியை எழினி, திரைச்சீலை, கிழி, படாம் என பல பெயர்களில் அழைக்கப்படும்.

o    தற்காலத்தில் துணி ஓவியம் “ கலம்காரி ஓவியங்கள் “ என தமிழகத்திலும், ஆந்திராவிலும் வரையப்படுகிறது.

Ø  ஓலைசுவடி ஓவியம் – கோட்டோவியமாகவும், வண்ணப்பூச்சாகவும் வரையப்பட்டது.

Ø  செப்பேட்டு ஓவியம் – வரைகோடு ஓவியம்

Ø  தந்த ஓவியம், கண்ணாடி ஓவியம், தாள் ஓவியம், கருத்துப்பட ஓவியம், நவீன ஓவியம்

காணொளிகள்               :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

o  ஆசிரியர் குறிப்பு பற்றி அறிதல்

o  புதிய சொற்களை அடையாளம் கண்டு பொருள் அறிதல்

o  பாடப்பகுதியினை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்

o  ஓவியங்களை தன்மையை அறிதல்

o  பங்கேற்று நடித்தல்

o  நிறுத்தற் குறி ஏற்றாற் போல் உணர்வுடன் பேசுதல்

o  ஓவியங்களை நடைமுறை வாழ்வில் எவ்விதம் பயன்படுகிறது என்பதனை உணர்தல்

மதிப்பீடு                       :

                          LOT :

Ø  ஓவியம் என்பது யாது?

Ø  கோட்டோவியம் என்பதனை பிரித்துக் கூறுக

MOT

Ø  கலம்காரி ஓவியங்கள் என்பது யாது?

Ø  செப்பேடுகளில் எவ்வாறு ஓவியம் வரையப்பட்டது?

HOT:

Ø  கண்ணாடிகளில் எவ்வாறு ஓவியம் வரைய இயலும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

Ø  தந்த ஓவியங்கள் கேரளாவில் மட்டும் அதிகம் காணப்படுவதேன்?

குறைதீர் கற்றல்            :

Ø  மதிப்பீட்டின் அடிப்படையில் பாடத்தின் கடினப் பகுதியினை எளிமையாக சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து குறைதீர் கற்றலை மேற்கொள்ளுதல்

வலுவூட்டல்         :

Ø  பாடப்பகுதியினை மீண்டும் கற்பித்து பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

கற்றல் விளைவுகள்         :

Ø  702 – ஒன்றைப் படிக்கும் போது அந்தப் படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தலும் அக்கருத்துகளைத் தமது சொந்த கருத்துகளுடனும் அனுபவங்களுடனும் ஒப்பிட்டு, தமது குறிப்பிட்ட கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும், மாறுபடுதலையும் அறிதல்.

தொடர் பணி          :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  உனக்கு பிடித்த ஓவியம் ஒன்றை வரைந்து வருக

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post