பத்தாம்
வகுப்பு
மாதிரி
அரையாண்டு மற்றும் பொதுத் தேர்வு-4- 2025
மொழிப்பாடம் – தமிழ்
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
அறிவுரைகள்
:
1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச்
சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே
எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்
பயன்படுத்தவும்.
குறிப்பு
: I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல்
வேண்டும்.
பகுதி
– I ( மதிப்பெண்கள் : 15 )
i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத்
தேர்ந்தெடுத்துக்
குறியீட்டுடன்
விடையினையும் சேர்த்து எழுதவும்.
அ) சரியான விடையைத் தேர்வு
செய்க. 15×1=15
1. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற
தொடர்___________
அ) இகந்தால் என்மனம் இறந்துவிடாது ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம் ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
2. “ வளிமிகின் வலி இல்லை “ என காற்றின் ஆற்றலைக் கூறுபவர்
அ) இளநாகனார் ஆ) ஐயூர் முடவனார் இ) தனிநாயகம் ஈ) இளங்கோவடிகள்
அ) குப்பையிலே ஆ) மருந்தும் மூன்று நாள்
இ) சோற்றுக்கு ஒரு சோறு பதம் ஈ) உள்ளளவும்
நினை
4. கொடுப்பதூஉம்
துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் - இக்குறளில் வந்துள்ள அளபெடை_____
அ) ஒற்றளபெடை ஆ) சொல்லிசை இ) உயிரளபெடை ஈ) இன்னிசை
5. “ இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர் “ என்று கூறினார்.
இத்தொடரில் இடம் பெற்ற வழுவமைதியைக்
காண்க __________
அ) திணை ஆ) மரபு இ) பால் ஈ) காலம்
6. கூற்று
1 : போராட்டப்
பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.
கூற்று 2 : அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது
உதவியது
அ)
கூற்று
1 சரி 2 தவறு ஆ) கூற்று 1 மற்றும்
2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி ஈ) கூற்று
1 மற்றும் 2 சரி
7. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன்
காரணம்
அ) நாட்டைக்
கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல்
ஈ) கோட்டையை முற்றுகையிடல்
8. பூக்கையைக் குவித்துப்
பூவே புரிவோடு காக்க என்று ___,___ வேண்டினார்.
அ) கருணையன் எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத் தமக்காக
இ) கருணையன் பூக்களுக்காக ஈ)
எலிசபெத் பூமிக்காக
9. பின் வருவனவற்றுள் முறையான தொடர் –
அ) தமிழர் பண்பாட்டில்
தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
ஆ) தமிழர் வாழை
இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
இ) தமிழர் பண்பாட்டில்
வாழை இலைக்கு தனித்த இடமுண்டு
ஈ) தமிழர் வாழை
பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
10. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில்
படைக்கப்பட்டது?
அ) திருக்குறள் ஆ)
கம்பராமாயணம் இ) கலித்தொகை ஈ) சிலப்பதிகாரம்
11.
எந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது?
அ) 1956 ஆ) 1965 இ) 1971 ஈ) 1986
பாடலைப் படித்து
வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-
“உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்!
பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்”
1) இப்பாடலை இயற்றியவர்
அ) கண்ணதாசன் ஆ) பாரதியார் இ) வண்ணதாசன் ஈ) பாரதிதாசன்
2) இப்பாடலில் கவிஞருக்கு உவமையாகக் கூறப்பட்டதைத் தேர்க.
அ) வண்டு ஆ) காற்று இ) அன்னம் ஈ) மழை
3). பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களைத் தேர்க
அ) தருவேன் - தட்டுவேன் ஆ) உண்டா - வண்டா
இ) இல்லா – இல்லம் ஈ) சொல்லா
- சொல்லிட
4) பாடல் இடம்பெற்றுள்ள கவிதையின் பெயர்_____
அ) பிரும்மம் ஆ) காலக்கணிதம் இ) பூத்தொடுத்தல்
ஈ) மேகம்
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு
வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
4×2=8
(21 ஆவது வினாவிற்கு
கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)
16. விடைக்கேற்ற
வினா அமைக்க.
அ. சமயக் கலப்பில்லாத மானிட
அறம் இயல்பாக நிலவிய காலம், சங்க காலம்.
ஆ. இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத்
தென்மேற்குப் பருவக் காற்றுக் கொடுக்கிறது.
காற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் – இது
போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
18. தஞ்சம் எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய அசைகளையும்
வாய்பாடுகளையும் எழுதுக.
19. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ – இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும்
சொற்கள் யாவை?
20. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல்
வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
21. கண் – என முடியும் குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
5×2=10
22. சொல்லுதல் என்னும் சொல்லிற்கு
வழங்கக்கூடிய பல்வேறு பெயர்கள் யாவை?
23. தண்ணீர் குடி,தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக்
கண்டறிந்து விரித்து எழுதுக.
24. பகுபத
உறுப்பிலக்கணம் தருக : அறியேன்
25. அயற்கூற்றாக
எழுதுக.
“ கலைஞர் பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல்
கொண்ட எழுத்தாளர்” – பேராசிரியர் அன்பழகனார்.
26. தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்து கொண்டு தொடர்களை முழுமை செய்க:-
1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் ______யாவும் அரசுக்கே சொந்தம்.நெகிழிப்
பொருள்களை மண்ணுக்கு அடியில் ___ __ நிலத்தடி நீர் வளத்தைக் குன்றச் செய்யும்.
(புதையல்,புதைத்தல்)
2. காட்டு விலங்குகளைச் _______தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச்
___________திருத்த உதவுகிறது.(
சுட்டல், சுடுதல் )
27. படிப்போம்;பயன்படுத்துவோம்!
அ) Translation ஆ) Aesthetics
குறிப்பு :- செவி
மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
தொடரைப்
படித்து
விடையைத்
தேர்ந்தெடுத்து
எழுதுக.
அ) நூலின்
பயன் படித்தல் எனில், கல்வியின் பயன _________
ஆ) குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து
_________
( சோறு, கற்றல், எழுத்து, கரு)
28. வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக.
காண், சிரி
பகுதி – III ( மதிப்பெண்கள்
-18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. ‘இன்மையிலும் விருந்தோம்பல்’ குறித்துப் புறநானூற்றுப்
பாடல் தரும் செய்தியை எழுதுக.
30. உரைப் பத்தியைப் படித்து
வினாக்களுக்கு விடை தருக.
ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழி
பெயர்க்கப்படுகின்றன. புள்ளி விவரப்படி அதிகமான தமிழ் நூல்கள் பிறமொழிகளில் மொழி
பெயர்க்கப்பட்டுள்ளன. அவ்வரிசையில் முதலிடம் ஆங்கிலம், இரண்டாமிடம் மலையாளம்.
மொழிபெயர்ப்பினால் புதிய சொற்களை உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.
அ. ஜெர்மனியில் ஓர் ஆண்டில் எத்தனை நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன?
ஆ. தமிழ் நூல்கள் எந்த மொழியில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
இ. மொழிபெயர்ப்பின் பயன் என்ன?
31. வாய்மை பற்றி
சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை எழுதுக.
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
(
34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)
32. மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன்
எழுதுக.
33. தமிழன்னையை
வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
34. அ) “ புண்ணியப்
“
எனத் தொடங்கும் திருவிளையாடற்புராணம் பாடலை எழுதுக. (அல்லது )
ஆ) “ அள்ளல் ” எனத் தொடங்கும் முத்தொள்ளாயிரம்
பாடலை எழுதுக.
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான் – இக்குறளில் வஞ்சப் புகழ்ச்சி அணி இடம்பெற்றுள்ளதை
விளக்குக
36. .”அறிந்தது, அறியாதது, தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது, பிறந்தது, பிறவாதது”
இவை அனைத்து யாம் அறிவோம்.இக்கூற்றில் தடித்த எழுத்துகளில் இருக்கும்
வினைமுற்றுகளை தொழிற்பெயர்களாக
மாற்றி எழுதுக.
37.
இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து - இக்குறளை அலகிட்டு வாய்பாடு தருக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.
5×5=25
38. அ) பொருள் செல்வம் குறித்து, திருவள்ளுவர் ‘ பொருள் செயல் வகை ‘ என்னும் அதிகாரத்தில்
கூறியுள்ளக் கருத்துகளைத் தொகுக்க. ( அல்லது )
ஆ) காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை;அறிக! - கண்ணதாசன்.
39. அ) குறிப்புகளைப் பயன்படுத்தி மதிப்புரை
எழுதுக.
பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/சிறுகதை/கவிதை
நூலுக்கான மதிப்புரை
எழுதுக
குறிப்பு – நூலின் தலைப்பு – நூலின் மையப்பொருள் – மொழிநடை- வெளிப்படுத்தும் கருத்து
- நூலின்
நயம் – நூல் கட்டமைப்பு - சிறப்புக்கூறு – நூல் ஆசிரியர். ( அல்லது )
ஆ. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ என்ற
உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம்
எழுதுக.
40. அ) காட்சியைக்
கண்டு கவினுற எழுதுக
41. மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, வள்ளுவர் நகர், எண் 19 இல் வசித்து வரும் பழனி, தந்தை
பெயர் சிவன் மேலூர் கிளை நூலகத்திற்குச் சென்று நூலக அட்டை பெற விரும்புகிறார். தேர்வர்
தன்னை பழனியாக எண்ணி படிவத்தை நிரப்புக.
42. அ) அரசால் நிறுவப்படும் கட்டடங்களிலும் சிலைகளிலும் நிறுவியர் பெயர்,நிறுவப்பட்ட காலம்,
நோக்கம் சார்ந்த பிற செய்திகளும் தாங்கிய கல்வெட்டுகளைப் பார்த்திருப்பீர்கள்.இவை நமது
இன்றைய வரலாற்றைப் புலப்படுத்துபவை.அது போலவே கோவில்களிலும் பழமையான
நினைவுச் சின்னங்களிலும் கட்டியவர்கள் பெயர்களும் வரலாறும் இடம் பெற்றிருக்கும்.
அவை நம் பழம் பெருமையையும் வரலாற்றையும் அறியச் செய்யும் அரிய ஆவணங்கள் என்று
அறிவீர்கள் தானே?
கல்வெட்டுகள் நம் வரலாற்றைப் புலப்படுத்துபவை. இவற்றைப் பராமரிக்கவும்,பாதுகாக்கவும்
உங்களால் இயன்ற செயல்களை பட்டியலிடுக. ( அல்லது )
ஆ) மொழிபெயர்க்க.
1.
Education is what remains after one has forgotten what one has learned in
school – Albert Einstein
2. Tomorrow
is often the busiest day of the week – Spanish proverb
3. It is
during our darkest moment that we must focus to see the light – Aristotle
4. Success is not final,failure is not fatal.It is the courage to continue that counts – Winston
Churchill
குறிப்பு : செவிமாற்றுத்
திறனாளர்களுக்கான மாற்று வினா
உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
ஒரு மணித்துளிக்கு 12 முதல் 18 முறை மூச்சுக்காற்றாய் நீங்கள் வெளிவிடும் கரியமில
வளியை எடுத்துக்கொண்டு உங்கள் நுரையீரலுக்குத் தேவையான உயிர்வளியைத் ( ஆக்ஸிஜன்
) தரும் என் தோழர்களான மரங்களை வளருங்கள். நல்ல முறையில் குப்பை மேலாண்மையை
மேற்கொள்ளுங்கள்; பொதுப் போக்குவரத்துக்கு முன்னிரிமை தாருங்கள்; மின்னாற்றலால்
இயங்கும் ஊர்திகளை மிகுதியாகப் பயன்படுத்துங்கள்; கச்சா எண்ணெய், நிலக்கரி முதலிய
புதைவடிவ எரிபொருள்களைத் தவிருங்கள். வீட்டுச் சமையலுக்கு விறகுகளைப்
பயன்படுத்துவதைக் கைவிடுங்கள். நீங்கள் ஒவ்வோர் ஆண்டும் சூன் 15 ஐ உலக காற்றுநாளாகக்
கொண்டாடி வருகிறீர்கள்.
( I ) ஒரு மணித்துளிக்கு நாம் விடும் மூச்சுக்காற்றின்
அளவு யாது?
( ii ) நாம் விடும் மூச்சிலிருந்து வெளியேறும் வாயு எது?
( iii ) காற்று மாசடைய காரணங்கள் ஏதேனும் இரண்டு தருக
( iv ) காற்றினை மாசுபடாமல் காக்கும் வழிமுறைகள் இரண்டு கூறுக
( v ) உலக காற்று
நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
பகுதி
-V ( மதிப்பெண்கள் : 24)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.
3×8=24
43.அ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற
விவரித்து
எழுதுக (அல்லது)
ஆ) தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் –
அறிவியல் கருத்துகள்
– பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை
மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ‘ செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும்
மொழிபெயர்ப்புக் கலை ‘ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு
நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.
44.அ) குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.
மாணவன் – கொக்கைப் போல,கோழியைப் போல
– உப்பைப் போல – இருக்க வேண்டும்
– கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும்
– குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி
– கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும்
– ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி. (அல்லது)
ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக்
கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
45.அ) முன்னுரை- தமிழகம் தந்த தவப்புதல்வர் - மொழிப்பற்று - பொதுவாழ்வு - தூய்மை- எளிமை
-மக்கள் பணியே மகத்தான பணி – முடிவுரை . கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு
கட்டுரை வரைக. (அல்லது)
ஆ) குமரிக் கடல் முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர்
திருநாட்டிற்குப் புகழ் தேடித் தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில் சேர்
கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி
பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி, அழகூட்டி
அகம் மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.
இக்கருத்தைக் கருவாகக் கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ் “ என்னும் தலைப்பில் கட்டுரை
எழுதுக.
.png)
