8TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 5 - KONGU NATTU VANIGAM

 

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       நவம்பர், டிசம்பர்

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  - இயல் - 5

தலைப்பு           :       கொங்கு நாட்டு வணிகம்


அறிமுகம்                    :

Ø  உங்கள் பகுதியில் நடைபெறும் தொழில்கள் பற்றி கூறுக

Ø  உன் தந்தை செய்யக் கூடிய தொழில் என்ன? அதை எவ்வாறு செய்கிறார்? என்பது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமூட்டல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·       காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                       :

Ø  தமிழரின் வணிகம் தொடர்பான செய்திகளை அறிந்து போற்றுதல்

ஆசிரியர் குறிப்பு            :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  நிறுத்தற்குறி அறிந்து படித்தல்

Ø  கொங்குப் பகுதிகளை கூறல்

Ø  கொங்குப் பகுதியில் நடைபெறும் தொழில்கள் பற்றி கூறல்

Ø  உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம் பற்றிக் கூறல்

கருத்துரு வரைபடம்                 :

 


 விளக்கம்   :   ( தொகுத்தல் )

கொங்குநாட்டு வணிகம்

Ø  சேரர்கள் ஆண்டப் பகுதி கொங்கு மண்டலமாகக் கருதப்படுகிறது

Ø  சேரர்களின் நாடு குட நாடு. தலைநகர் - வஞ்சி

Ø  கொங்கு மண்டலம் : கொங்கு மண்டலச் சதகம்

o   வடக்கு – பெரும்பாலை

o   தெற்கு – பழனி மலை

o   மேற்கு – வெள்ளி மலை

o   கிழக்கு – மதிற்கரை

Ø  கொங்கு மண்டல ஆறு : காவிரி, பவானி, நொய்யல், அமராவதி

Ø  கொங்கு மண்டலப்  பகுதிகளில் இன்றைய வணிகம்

o   நீலகிரி,கோவை,திண்டுக்கல், ஈரோடு,திருப்பூர்,நாமக்கல்,சேலம், கரூர்.

 

காணொளிகள்                         :

Ø        விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø        கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

மாணவர் செயல்பாடு :

Ø  பிழையின்றி வாசித்தல்

Ø   புதிய வார்த்தைகளை காணுதல்

Ø  புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø  நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø  கொங்கு மண்டலங்களை அறிதல்

Ø  கொங்கு மண்டல வணிகப் பகுதிகளை அறிதல்

Ø  கொங்கு மண்டல உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம் பற்றி அறிதல்.

Ø  இன்றைய வணிகங்களை ஒப்பிட்டு அறிதல்

மதிப்பீடு      :

         LOT :

·       சேர நாட்டின் எல்லைகள் எவை?

·       மாங்கனி நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?

MOT :

·       கொங்கு மண்டலத்தில் உள்ள ஊர்கள் யாவை?

·       மூவேந்தர்களின் காலம் குறித்துக் கூறுக.

HOT :

·       நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர்த்து வேறு எவையெல்லாம் உதவும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

·       கொங்குநாட்டின் உள்நாட்டு வணிகம் இன்றைய வணிகத்தோடு ஒப்பிட்டுக் கூறுக.

கற்றல் விளைவுகள்               கொங்கு நாட்டு வணிகம்

Ø  801 – மாணவர்கள் பல்வேறு வகையான பாடத் தலைப்புகளில்  பாடப் பொருள்களின் மீது எழுதப் பட்டவற்றைப் பற்றி கலந்துரையாடல்

Ø  808 – ஒரு கட்டுரையைப் படித்த பின் அதன் சமூக மதிப்புகளை கலந்துரையாடல். சில வினாக்களுக்கு விடை காண முற்படல்

குறைதீர் கற்றல்                  :  

                 மதிப்பீட்டின் அடிப்படையில் கடினப்பகுதியினை எளிமைப்படுத்தி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

வலுவூட்டம் :

         பாடப்பகுதியை மீண்டும் ஒரு முறை கற்பித்து பாடப் பொருளை வலுவூட்டல்

தொடர் பணி                            :

Ø  மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக


நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post