SLM-9TH-TAMIL-1ST MID TERM - ANSWER KEY-25-26

 

 சேலம் – முதல் இடைத் மாதத் தேர்வு  -2025

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                              மதிப்பெண் : 50

பகுதி – 1

மதிப்பெண்கள் - 8

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

இ) சிற்றிலக்கியம்

1

2.

ஆ) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

1

3.

ஈ) புலரி

1

4.

இ) வளம்

1

5.

ஆ) புறநானூறு

1

6.

இ) புறநானூறு

1

7.

அ) குடபுலவியனார்

1

8

ஆ) உடம்பு

1

4பகுதி – 2

9

இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால்  

  தொடுக்கப்படும் செய்யுள் வகை.

2

10

தமிழ்            மலையாளம்

கன்னடம்      துளு

2

11

அளபெடை இரண்டு வகைப்படும்

 1 ) உயிரளபெடை             2) ஒற்றளபெடை

2

12.

குளம், குட்டை, ஏரி, கிணறு

2

13

வாளை மீன்கள் துள்ளி எழுந்து பாக்கு மரத்தில் பாய்வதற்கு ஒப்பிடுகிறது.

2

14

அ) குழந்தைகள் அனைவரும் சுற்றுலா  சென்றனர் ( செல் )

 ஆ) உலகில் மூவாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. ( பேசு )

2

15.

அ) செந்தமிழும் நாப் பழக்கம்       ஆ) இடமெல்லாம் சிறப்பு

2

16

அ) உயிரொலிகள்       ஆ) நீர் மேலாண்மை

2

இ) எவையேனும் நான்கு வினாவிற்கு விடையளி ( 4*3=12 )

17

Ø  தமிழ், அமுதை விட மேலானது.

Ø  இனிக்கும் சுவையான கனியை விட சிறப்பானது

Ø  முத்தமிழாகவும் விளங்குகிறது.

Ø  அறிவுக்கு தேனாகவும் விளங்குகிறது.

Ø  தமிழின் சிறப்பு அறிந்து குறவஞ்சி, பள்ளு என நூல்கள் இயற்றி சிறப்புச் செய்துள்ளனர் புலவர்கள்.

Ø  தாழிசை, துறை , விருத்தம் என மூவகை பாவினங்களைக் கொண்டுள்ளது தமிழ்மொழி

Ø  என்றும் சிந்தா மணியாய் தமிழ் விளங்குகிறது.

3

18

மூன்று – தமிழ்

          மூணு – மலையாளம்

          மூடு – தெலுங்கு

          மூரு – கன்னடம்

          மூஜி – துளு

3

19

Ø  நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலைகளைப் பெருகச் செய்தல் வேண்டும்.

Ø  நிலத்துடன் நீரைக் கூட்டியோர் மூவகை இன்பத்தையும், நிலைத்த புகழையும் பெறுவர்

3

20

Ø  மழைக்காலங்களில் ஏரிகள் நிரம்பும் போது நீரினைத் தூர் வார  நீந்துபவர் கழிமுகத்தை அடைந்து, குமிழித்தாம்பினைத் தூக்குவர்

Ø  நீரோடி துளையிலுருந்து நீரும், சேறோடி துளையிருந்து சேற்று நீரும் வெளியேறும்.

Ø  நீரைத் தூர் வார வேண்டி பயன்படுத்தப்பட்டது.

3

21

பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்

பகுதி, விகுதி, சந்தி, சாரியை, விகாரம், இடைநிலை

3

22  

அ) தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்குள்

 உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில்

குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு

உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ – திறம்எல்லாம்

வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்த உனைச்

சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே*   -யார் என அறியப்படவில்லை

ஆ)காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன

 நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்*  - சேக்கிழார்

3

எவையேனும் இரண்டனுக்கு விடையளி ( 2*5=10 )

23

v  காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன.

v  நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து. இதனைக் கண்ட உழவர் இது தான் களை பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.

v  காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன.

v  வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.

v  சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன.

v  பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.

v  கரை எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன.

v  குளங்கள் எல்லாம் கடல் போல் பெரிதாக உள்ளன.

v  அன்னங்கள் விளையாடும் நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு  மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது.

v  செந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள் ,முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றைத் திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர்.

v  தென்னை, செருந்தி, அரசமரம், கடம்பமரம்,பச்சிலை மரம், குராமரம், பனை,சந்தனம், நாகம், வஞ்சி,காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கும் நிறைந்தது  இந்த திருநாட்டில்.

5

24

நாள், இடம் விளித்தல்.

கடிதச் செய்தி

இப்படிக்கு உறைமேல் முகவரி

5

25

காட்சிக்குப் பொருத்தமாக கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

உ) ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க ( 1*8=8 )

25.

முன்னுரை

கிராமத்தின் நிலை

இரயில் நீர்

இந்திரா

மக்கள் தேடல்

திரும்பிய இந்திரா

முடிவுரை

இது போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

8

26.

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

தமிழின் தொன்மை

தமிழின் தனித்தன்மைகள்

முடிவுரை

இது போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

8

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி,  வளைய செட்டிப்பட்டி www.tamilvithai.com                                                                        www.kalvivithaigal.com

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post