8TH-TAMIL-UNIT-6-COMPOSITION-2025-2026

 

எட்டா வகுப்பு - தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025-26

இயல் - 6

கட்டுரை

கட்டுரை எழுதுக

நாட்டின் வளர்ச்சியில் இளைஞரின் பங்கு

குறிப்புச் சட்டம்

முன்னுரை

இளைஞரின் சிறப்புகள்

நாட்டு வளர்ச்சி

இளைஞர்களின் பங்கு

முடிவுரை

முன்னுரை:

இனிவரும் காலம் இளைஞர்கள் காலம். எனவே இளைஞர்கள் நம்

 நாட்டின் வளர்ச்சிக்காகத் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள

 ஆயத்தமாகி வருகின்றனர். நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின்

 பங்குக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

இளைஞர்களின் சிறப்புகள்:

          விவேகானந்தர் என்னிடம் நூறு இளைஞர்களைக் கொடுங்கள். இந்த

 நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார். டாக்டர் அப்துல் கலாம்

 அவர்களும் நம் நாட்டு இளைஞர்களின் கையில்தான் நம் நாட்டின்

 எதிர்காலம் உள்ளது என்று கூறினார்.

நாட்டு வளர்ச்சி:

          ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கல்வி, பொருளாதாரம், தொழில்துறை

 முன்னேற்றம் ஆகியவற்றைச் சார்ந்து அமைகிறது. ஒரு நாட்டினுடைய

 வளர்ச்சி என்பது அந்த நாட்டு இளைஞர்களின் வளர்ச்சி என்றே கூறலாம்.

இளைஞர்களின் பங்கு:

          எண்ணற்ற தொழில்துறைகளில் நம் இளைஞர்கள் சிறந்து விளங்கி

 வருகின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் நம் நாட்டின் இளைஞர்கள்

 எண்ணற்ற புரட்சியினை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம்

 பொருளாதார முன்னேற்றம் அடைந்து நாட்டின் வளர்ச்சி மேலோங்கி

 நிற்கிறது.

முடிவுரை:

           "ஒரு நாட்டின் முதுசெலும்பு அந்த நாட்டு இளைஞர்கள்" என்றார்

 மகாத்னா காந்தி, அது முற்றிலும் உண்மையே! நாட்டின் வளர்ச்சிக்கு

 முதுகெலும்பாக செயல்பட்டு வருபவர்கள் இளைஞர்களே! என்பதை

 கண்கூடாகப் பார்க்க முடிகிறது.


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post