8TH-TAMIL-UNIT-5-COMPOSITION-2025-2026

 

எட்டா வகுப்பு - தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025-26

இயல் - 4

கட்டுரை

கட்டுரை எழுதுக.

உழவே உயர்வு

குறிப்புச்சட்டம்

முன்னுரை

உழவே தமிழர் பண்பாட்டு மகுடம்

தமிழர் வாழ்வில் உழவு

இலக்கியங்களில் உழவு

உழுவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்

சுழன்றும் ஏர் பின்னது உலகம்

முடிவுரை

முன்னுரை:

      ஏர் முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே

        என்ற திரைப்பாடல் உயர்த்திக்கூறுவது உழவுத்தொழிலைத்தான். தன்

 வயிற்றுப் பசி போக்க தொழில்களை மேற்கொள்ளும் மனிதர்களிடையே,

பிறர் பசி போக்க தொழில் புரிவோர் உழவர். உழவின் சிறப்புக் குறித்து

 இக்கட்டுரையில் காண்போம்.

உழவே தமிழர் பண்பாட்டு மகுடம் :

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

           தொழுதுண்டு பின்செல் பவர் “

          அனைத்து உயிர்களையும் காக்கும் உன்னத தொழில் ஒன்று

 உண்டென்றால் அது உழவுத் தொழில் மட்டுமே. அந்த உழவுத் தொழிலானது

 தமிழ்நாட்டில் சிறந்ததாகக் கருதப்பட்டது. உழவுத் தொழிலுக்கும்,

இயற்கைக்கும் வழிபாடு செய்து உலக உயிர்களை எல்லாம் காக்கின்றனர்.

தமிழர் வாழ்வில் உழவு

தமிழனின் உதிரத்தில் கலந்தது உழவு

        உழவன் இன்றி உலகோர்க்கு ஏது உணவு?”

       பழந்தமிழகத்தில் மக்களின் தலையாய தொழிலாக உழவுத்தொழில்

 விளங்கியது உழவர்கள் சமுதாயத்தில் மதிப்புள்ளவர்களாக வாழ்ந்தனர்.

 மனிதன் நிலங்களில் வரகு சாமை, தினை முதலியவற்றையும், உளுந்து, பயறு,

அவரை முதலியவற்றையும் விளைவித்தான். மருதநிலத்தில் வயல்களில்

 விளைந்த நெற்பயிரை பாதுகாத்தலில் உழவர்களில் ஆடவரும் மகளிரும்

 ஈடுபட்டனர்.

இலக்கியங்களில் உழவுத் தொழில்:

          உழவர்கள் உழுத உழவினை நல்லேர் நடந்த    

            நகைசால் விளை வயல்'

     என்கிறது சங்க இலக்கியம். 'நெல்மலிந்த மனை பொன் மலிந்த மறுகு'

என்கிறது புறநானூறு. 'ஏரின் உழாஅர் உழவர்' என்கிறது திருக்குறள்.

உழவின் சிறப்பு:

       உழவு அனைத்துத் தொழில்களுக்கும் மையமாக விளங்குகிறது.

 தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் காப்பாற்ற உழவுத் தொழிலை

 அறத்துடன் செய்தனர் உழவர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில்

 பெரும்பங்காற்றி வரும் இத்தொழிலே, உலகில் நடைபெறும் அனைத்து

 தொழில்களுக்கும் தலைமைத் தொழிலாகும்.' உழுவார் உலகத்தார்க்கு

 அச்சாணி' எனும் வள்ளுவர் வழி இதனை அறியலாம்.

உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்:

        உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் உலகமக்கள் சோற்றில் கை வைக்க

 முடியும் மழை வெயில் பாராமல் உழைக்கின்ற உழவரையும் உழவுத்

 தொழிலையும் நாம் வணங்கிப் போற்றினால் இவ்வுலகம் நிலைபெறும்.

சுழன்றும் ஏர் பின்னது உலகம்

        உலகமே உழவை நம்பித்தான் இருக்கிறது என்பதனை வள்ளுவரும் 

சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை “ எனக்

 குறிப்பிடுகிறார். சுழலும் உலகம் பலத் தொழில்களைத் தன்னகத்தே

 கொண்டிருந்தாலும் அத்தொழில்கள் யாவும் ஏர்த்தொழிலின் பின்

 நிற்கின்றன.

 

 

முடிவுரை:

      உழவையும், உழவரையும் அழிவிலிருந்து காப்பது நம் அனைவருடைய கடமையாகும். இயற்கையை வணங்குவோம்; உழவினைப் போற்றுவோம்.


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post