எட்டா வகுப்பு - தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025-26
இயல் - 4
கட்டுரை
மாதிரிக்
கடிதம்
குப்பைத் தொட்டி அமைத்து தர வேண்டி ஊராட்சி
மன்றத் தலைவருக்குக் கடிதம் எழுதுக.
அனுப்புநர்
மு.அறிவரசன்,
தெற்குத்
தெரு,
சிறுமணற்குடி,
கடலூர்
மாவட்டம்.
பெறுநர்
ஊராட்சி
மன்றத் தலைவர்,
சிறுமணற்குடி
ஊராட்சி,
கடலூர்
மாவட்டம்.
ஐயா,
பொருள் : எங்கள்
தெருவில் குப்பைத்தொட்டி அமைத்துத் தர வேண்டுதல் – சார்பு
வணக்கம். எங்கள் தெருவில் குப்பைத் தொட்டி
இல்லாததால் மக்கள், குப்பைகளை ஆங்காங்கே கொட்டிச் செல்கின்றனர். தெரு முழுவதும் குப்பைகள்
நிறைந்துள்ளன. அதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே, எங்கள் தெருவில் மட்கும் குப்பை, மட்காத குப்பைக்கு எனத் தனித் தனியாக குப்பைத்
தொட்டிகள் அமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
இப்படிக்கு,
தங்கள்
உண்மையுள்ள,
மு.அறிவரசன்.
சிறுமணற்குடி
03-07-2025
கடிதம்
எழுதுக.
இருப்பிடச் சான்று வேண்டி
வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.
அனுப்புநர்
ர.நந்தினி,
100, ஏகாபுரம்
இடங்கணசாலை,
சேலம் மாவட்டம்-637502.
பெறுநர்
வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
சேலம் மாவட்டம்-636001
ஐயா,
பொருள்: இருப்பிடச்சான்று வழங்கக் கோருதல்
சார்பு.
வணக்கம் . நான் மேற்கண்ட முகவரியில் 10 வருடங்களாக
வசித்து வருகிறேன்.எனது மேற்படிப்புச் சேர்க்கைக்காக இருப்பிடச்சான்று தேவைப்படுகிறது.
நான் அவ்விடத்தில் வசிப்பதற்கான சான்றுகளாக குடும்ப அட்டை நகலையும், ஆதார் அட்டை நகலையும்
இணைத்துள்ளேன்.எனவே எனக்கான இருப்பிடச்சான்று வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
ர.நந்தினி,
இடங்கணசாலை,
03-07-2025.