கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை
எழுதுக
நூலகம்
முன்னுரை
நூலகத்தின்
தேவை
வகைகள்
நூலகத்திலுள்ளவை
படிக்கும்
முறை
முடிவுரை
முன்னுரை:
“நூலகம் அறிவின் ஊற்று”
”வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்”
என்று கூறுகிறார் பேரறிஞர் அண்ணா. இக்கட்டுரையில் நூலகத்தின்
தேவை குறித்தும், அதன் வகைகள் குறித்தும், அதை நாம் எவ்வாறு
பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்தும் நாம் காண
இருக்கிறோம்.
நூலகத்தின்
தேவை:
“ சாதாரண மாணவர்களையும்
சாதனை மாணவர்களாக மாற்றுவது நூலகம்”
ஏழை மாணவர்களும், இளைஞர்களும் படிப்பதற்கு தேவையான நூல்களை
விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. சில நூல்களின் விலை மிகவும்
அதிகமாக
உள்ளது. நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது .
நூலகத்தின்
வகைகள்:
மாவட்ட மைய நூலகம், மாவட்ட கிளை நூலகம், ஊரக நூலகம், தனியார்
நூலகம், கல்லூரி நூலகம்,பள்ளி நூலகம், பல்கலைக்கழக நூலகம்,
நடமாடும் நூலகம், மின்நூலகம் என நூலகம்
பலவகைப்படும்.
நூலகத்தில்
உள்ளவை:
மொழி சார்ந்த நூல்கள், அறிவியல், வணிகம், நிர்வாகம், கதைகள், சட்டம்
போன்ற எண்ணற்ற பிரிவுகளின் அடிப்படையில் நூல்களானது நூலகத்தில்
இடம் பெற்றிருக்கும்.
படிக்கும் முறை:
நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாக படிப்பதற்காக
ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும் நூல்களைக்
குறிக்கும் சேதப்படுத்துவது படித்த முடித்தவுடன் மீண்டும் உரிய இடத்தில்
நூலை வைக்க வேண்டும்.
முடிவுரை:
“என்னை தலைகுனிந்து படித்தால்,
உன்னை நான்
தலை நிமிரச் செய்வேன்”
என்று புத்தகம் மனிதர்களைப் பார்த்துக் கூறுவதாக புகழ் பெற்ற தொடர்
உண்டு. நூலகமே என்றும் நிலையானது. அதன் மூலமே மனிதன் ஆழ்ந்த
அறிவைப் பெறமுடியும் என்பதை நாம் உணர வேண்டும்.