மாதிரிக்கடிதம்
கலைத்திருவிழாப் போட்டியில் மாநில அளவில்
முதல் பரிசு பெற்ற தோழியைப் பாராட்டிக் கடிதம் எழுதுதல்.
சேலம்
02-07-2025
அன்புள்ள
தோழி,
நானும் என் பெற்றோரும் நலம். அது போல நீயும்
உன் பெற்றோரும் நலமா?
பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்படும் கலைத்திருவிழாப்
போட்டியில் கிராமியப் பாடல் பிரிவில் மாநில அளவில் நீ முதல் பரிசு பெற்றுள்ளாய்
என்பதை அறிந்தேன். சிறு வயதில் இருந்தே உனக்கு இசையில் மிகுந்த ஈடுபாடு உண்டு என்பது
எனக்குத் தெரியும். நீ அடிக்கடி பாடல்களைப் பாடி பயிற்சி செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன்.
உனது முயற்சியும் முறையான பயிற்சியும் தான் உனக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளன.
உன்னை மனமார நான் பாராட்டுகிறேன். நீ இன்னும் பல பரிசுகளைப் பெற்று வாழ்வில் சிறக்க
வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு,
உன்
அன்புத் தோழி
ர.நந்தினி
உறைமேல்
முகவரி
ர. ஷர்மிளா,
5, பொன்னிநகர்,
ஈரோடு – 613007.
கடிதம் எழுதுக
விளையாட்டுப்போட்டியில்
வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.
7, பூங்கா நகர்,
விருதுநகர்-1
11-03-2025.
அன்புள்ள நண்பன்,
நலம் நலமறிய ஆவல். நீ .மாநில அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில்
முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக
அறிந்தேன்.மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நீ இதே போன்று பல
வெற்றிகளைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இப்படிக்கு,
உனது
நண்பன்
க. அருண்
பிரசாத்.
உறைமேல் முகவரி:
வே.தரணீஸ்வரன்,
12,ஏகாபுரம்,இடங்கணசாலை,
சேலம்-4
CLICK HERE TO PDF
CLICK HERE