பத்தாம்
வகுப்பு
தமிழ்
இயல்
– 6
மீத்திற
மாணவர்களுக்கான நெடுவினாக்கள்
நெடுவினாக்கள்
1. நாட்டு விழாக்கள் – விடுதலைப்
போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில்
மாணவர்பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு
பக்க அளவில் “ மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்
“ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்
குறிப்புச்
சட்டம் |
முன்னுரை |
நாட்டுவிழாக்கள் |
விடுதலைப் போராட்ட வரலாறு |
நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு |
முடிவுரை |
முன்னுரை:
“இன்று ஏடு கற்போரே நாளை நாடு காப்போர் ஆதல்,
இளமை அறிவோடு இயைபின் நடப்பதெல்லாம் நாட்டிற்கு நன்றேயாம்”
என்ற
பாவேந்தரின் வாய்மொழிக்கேற்ப, எதிர்காலத்தில்
நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் உரிய நற்பண்புகளை மாணவர்கள் இளமை முதலே பெற வேண்டும். இத்தகைய நற்பண்புகளைப் பெற்று மாணவர்கள் சிறந்து
விளங்க நாட்டுவிழாக்கள் துணைபுரிகின்றன. அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நாட்டு விழாக்கள்:
நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள எண்ணற்ற
நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும்,
குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும்
சிறந்தவையாகும்.
நமது
நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து வந்த ஆங்கிலேயர்கள் நமது நாட்டை
விட்டுச்சென்ற நாள் விடுதலைநாள் விழாவாக ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய
நாட்டிற்காக தனியான சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு முழுமையான மக்களாட்சி
அரசியலமைப்பு பெற்ற நாளை குடியரசுநாள் விழாவாக ஜனவரி 26இல்
கொண்டாடுகிறோம்.
விடுதலைப் போராட்ட வரலாறு:
”தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?
இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்” - பாரதியார்
பதினைந்தாம் நூற்றாண்டு
காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில்
நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,
வணிகம்செய்ய வந்த ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் பெரும் பான்மையான சிற்றரசுகளைக் கைப்பற்றி நாட்டை ஆளத் தொடங்கினர். இது பல இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது. எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக
போராடத் தூண்டினர்.
எண்ணற்றோர் சுதந்திரப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். கொடிகாத்த குமரன், தீரன்சின்னமலை, வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுப்பிரமணிய சிவா, மருதுபாண்டியர்கள் பகத்சிங்,
பால கங்காதர திலகர், நேதாஜி ஆகியோர் அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்களது
கடுமையான போராட்டத்தாலும், தியாகத்தாலும் இந்தியா 1947
ஆகஸ்ட் 15 இல் விடுதலை பெற்றது.
நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு:
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே!
அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து மடிந்ததும் இந்நாடே”
நாட்டுக்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன.
இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாய உணர்வுடன்
வளர்ந்தால்தான் நாடு வளம் பெறும். துன்பத்தில் மற்றவர்க்கு
உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை,
சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை
மூடப்பழக்கங்கள், ஊழல் ஆகியவற்றிற்கு
எதிராகக் குரல் கொடுத்தல் ஆகிய பண்புகளை மாணவர்கள்
பெற்றிருத்தல் சிறப்பு.
மாணவப் பருவமும், நாட்டுப்
பற்றும்:
மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள்
தங்களை சாரண சாரணியர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய பசுமைப்படை எனப்
பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
மரம் நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு,
சாலை விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்
மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில் மாணவர்கள் கட்டாயம் ஈடுபட
வேண்டும். கல்வியறிவில் முக்கியத்துவத்தைப் பொது மக்களுக்கு
உணர்த்த வேண்டும். மேலும், காந்தி
பிறந்த தினம், ஆசிரியர் தினம், குழந்தைகள்
தினம், கொடி நாள், விடுதலை நாள்,
வழிபாட்டு நாள் போன்ற விழாக்களைத் தாமே முன்னின்று நடத்திட வேண்டும்.
முடிவுரை:
“பாரத நாடு
பழம்பெரும் நாடு: நீரதன் புதல்வர் இந்நினை வகற்றாதீர்”
என்ற மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க, நாட்டின்
வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது. மாணவர்
நாட்டு முன்னேற்றத்தில் இணைந்து செயல்பட்டால், நாடும்
முன்னேறும் வீடு முன்னேறும், புதிய இந்தியா உருவாகும்.
2. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க
வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக:-
விற்பனை பொருட்கள்:
மருவூர்ப்பாக்கத்து
வணிகவீதிகளில் கீழ் வரும் பொருட்கள் ,
இன்றைய வணிக வீதிகள் மற்றும் அங்காடிகளிலும் விற்பனையாகிறது.
·
வண்ணக்குழம்பு, சுண்ணப் பொடிகள்
·
குளிர்ச்சி பொருந்திய சந்தனம், பூ வகைகள்,
ஊதுவத்தி, அகில் போன்ற நறுமணப்பொருள்கள்
·
பொன், மணி, முத்து, பவளம்
·
தானிய
வகைகள் , உப்பு, வெற்றிலை
·
வெண்கலம், செம்புப்
பாத்திரம்,
·
மரப்பொருட்கள்.
இரும்புப் பொருட்கள் இன்றைய வணிக
வளாகத்திலும் விற்கப்படுகின்றன.
விற்பனை உத்திகள் :
சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும்
வணிகத்திற்கு விளம்பரம் கிடையாது. சிலப் பொருட்களை கூவிக்
கூவி விற்பர். சிலவற்றை கூறாக அடுக்கி வைத்து அழகாக காட்சியளிக்கும் படி வைத்து
விற்பனை செய்தனர். இதனால் பொருட்களின் விலை நியாயமாகவும், தரமாகவும்
இருந்தது.
இன்றளவிலோ வணிக
வளாகங்களும், வணிக நிறுவனங்களும் பெரும் பொருட்செலவில்
விளம்பரம் செய்கின்றனர். புகழ் பெற்ற நடிகர், நடிகைகளைக் கொண்டு விளம்பரம் உருவாக்கி அவற்றை பல்வேறு தளங்களில்
பதிவிட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொருட்களின் விலை கூடுதலாக இருக்கிறது.
அதே சமயம் விலை குறைத்து கொடுத்தால் பொருள் தரமற்றதாக உள்ளது.
பண்டமாற்று முறை:
மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு
பொருளுக்கு இணையாக மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். உப்புக்கு நெல் கொடுக்கப்பட்டது. தங்களிடம் அதிகமாக இருந்த பொருளைக்
கொண்டு வேறு பொருளை வாங்க முடிந்தது.
ஆனால் தற்போது உள்ள வணிக
வளாகங்களில்
பணம் கொடுக்க வேண்டியுள்ளது.
பண்டமாற்று இன்று எங்கும்
ஏற்றுக் கொள்ளப்படவில்லை. உற்பத்தியாகும் பொருட்கள் இடைத்தரகர் மூலம் கொண்டு
வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் பணம் மட்டுமே இங்கு முக்கியத்துவம் கொடுத்து
விற்பனை நடைபெறுகிறது.
அங்காடிகள்:
சிலப்பதிகாரம் கூறும் மருவூர்ப்பாக்கத்தில்,
பலவிதமான வணிகர்களும் ஒரே இடத்தில்
இருந்து விற்பனை செய்தனர். மேலும் ஒவ்வொரு தெருவிலும்
குறிப்பிட்ட பொருளை விற்பனை செய்யும் நிகழ்வும் இருந்ததைக் காண முடிகிறது.
இன்றைய சூழலில் அனைத்தையும்
விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன. மேலும் பலப் பொருட்களை விற்பனை செய்யும் ஓர் அங்காடிகளும் உள்ளன. இந்த
பல்பொருள் அங்காடியில் வேண்டிய பொருட்களை வாடிக்கையாளரே தேர்வு செய்யும் முறை
உள்ளது. இவற்றை எல்லாம் கண்காணிக்க கண்காணிப்பு கேமிராக்கள் ஆங்காங்கு
வைக்கப்பட்டுள்ளது.
பல தொழில் செய்வோர்:
மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை
நெய்யக்கூடிய நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும்,
தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும் வாழ்ந்து
வந்தனர். இவர்கள் நேரடியாகவே மக்களுக்கு தங்களால் இயன்ற
சேவைகள் செய்து வருமானம் பெற்று வந்தனர்.
இன்றளவிலும்
அத்தொழிலைச் செய்வோர் பலர் உள்ளனர். ஆனால் இவர்கள் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யாமல், பெரிய பெரிய தொழில் அதிபர்கள், இடைத்தரகர்கள் மூலம்
தங்களின் பொருட்களை மொத்தமாக கொடுத்து விற்பனை செய்து விடுகின்றனர். இதனால்
இவர்கள் தங்களின் பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்ய இயலாத நிலை
ஏற்படுகிறது.
வணிக வளாகங்கள்:
மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள்
தெருக்களில் காற்றோட்டமான சூழலில் நடைபெற்றன. குறிப்பிட்ட
இடங்களை தேர்வு செய்து அங்கும் பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.
தற்போதைய
சூழலில்
வணிகமானது வானுயர் கட்டடங்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளது.
இன்றும் சிற்றூர்களில் வாரச் சந்தைகள் மூலம் மக்களுக்கு பொருட்கள் விற்பனை
செய்யப்படுகிறது.
சுருக்கமான ஒப்பீடு;
மருவூர்ப்பாக்க வணிக வீதி |
இக்கால வணிக வளாகங்கள் |
தானியக் கடைத் தெருக்கள் |
தனித்தனி அங்காடிகள் |
நேரடி வணிகம் |
நேரடியான விற்பனை இல்லை |
இலாப நோக்கமற்றது |
இலாபம் மட்டுமே முக்கியம் |
கலப்படம் இல்லாதது |
கலப்படம் கலந்துள்ளது |
தரம் உண்டு.விலை குறைவு |
தரம் குறைவு,விலை அதிகம் |
இடைத்தரகர்கள் இல்லை |
இடைத்தரகர்கள் உண்டு |
உற்பத்தியாளர் ,வாடிக்கையாளர் நேரடித் தொடர்பு |
நேரடி தொடர்பு இல்லை |
3. எம்.எஸ்.சுப்புலட்சுமி,
பால சரஸ்வதி, ராஜம் கிருஷ்ணன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்,
சின்னப்பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள்
குறித்து எழுதுக.
குறிப்புச்சட்டம் |
முன்னுரை |
எம்.எஸ்.சுப்புலட்சுமி |
பால சரஸ்வதி |
ராஜம் கிருஷ்ணன் |
கிருஷ்ணம்மாள்
ஜெகநாதன் |
சின்னப்பிள்ளை |
முடிவுரை |
முன்னுரை
:
உலகம் பரந்து
விரிந்த திடல்; அதில் ஆடுவாரும் உள்ளனர். பாடுவாரும் உள்ளனர். பிற
திறமைகளைக் காட்டுவோரும் உள்ளனர். இதில் வெற்றிப்பெற்றவர்கள் மிகுதி. இதனையே ஆளுமை
என்கிறோம்.ஆளுமை மிக்க பெண்களில் சிலரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி :
v ஐ.நா
அவையில் செவ்வியல் இசையைப் பாடியவர்.
v இசைப்பேரரசி
என்று நேரு பெருமகனரால் அழைக்கப்பட்டவர்.
v ‘
இரகுபதி இராகவ இராஜாராம் ‘ காந்தியடிகளை சந்தித்த போது பாடினார்.
v 1954
இல் ஹெலன் கெல்லரால் பாராட்டப்பட்டவர்
v 1963
-இங்கிலாந்திலும், 1966 இல் -ஐ.நா அவையிலும் பாடினார்
v 1974
– இல் மகசேசே விருது
பால சரஸ்வதி
:
v
ஐரோப்பா, அமெரிக்கா முதலிய வெளிநாடுகளில் நடன நிகழ்ச்சிகள்
நடத்தியவர்.
v
‘ கிழக்கு மேற்கு சந்திப்பு ‘ நிகழ்வில் இந்தியாவின் சார்பாக
கலந்து கொண்டு நடனம் ஆடியவர்.
v
பரத நாட்டியக் கலையை உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தார்.
இராஜம் கிருஷ்ணன்
:
v
கற்பனையாக எழுதாமல் களத்திற்கு சென்று மக்களிடம் செய்திகளைத்
திரட்டி எழுதுபவர்.
v
“ கரிப்பு மணிகள் “ – தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின்
உவர்ப்பு வாழ்க்கையை எழுதினார்.
v
“ குறிஞ்சித் தேன்” – நீலகரி, படுகர் இன மக்களின்
வாழ்வியல் மாற்றங்களைக் குறித்து எழுதினார்.
v
“ அலைவாய் கரையில் “ – கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்.
v
“ கூட்டுக் குஞ்சுகள் “ – குழந்தைத் தொழிலாளர்களைப்
பற்றி எழுதினார்.
கிருஷ்ணம்மாள்
ஜெகந்நாதன் :
v
மதுரையின் முதல் பட்டதாரிப் பெண்.
v
காந்தியடிகளுடனும், வினோபா பாவேயுடன் பணியாற்றியவர்.
v
இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கு பெற்றவர்.
v
“ உழுபவருக்கே நில உரிமை இயக்கம் “ தொடங்கி
வேளாணமை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறுபணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தவர்.
சின்னப்பிள்ளை
:
v
பெண்கள் குழுவை ஆரம்பித்தவர்.
v
பெண்கள் குழு மூலம் நடவு, அறுவடை, களையெடுப்பு போன்ற வேலைகளைச்
செய்து, வருகிற பணத்தை சரிசமமாக பிரித்துக் கொடுத்தவர்.
v
வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சேர்த்து வேலையைக்
கொடுத்து, அவர்கள் குடும்பத்துக்கு உதவியாக இருந்தவர்.
v
சுனாமி பாதிப்பு வந்த போது ஊரெல்லாம் சென்று மீட்புப் பணிகளை
செய்தவர்.
v
மாண்புமிகு முதன்மை அமைச்சரால் பெண் ஆற்றல் விருது பெற்றவர்.
முடிவுரை
:
பெண்கள்
நாட்டின் கண்கள் என்பது போல நாம் அனைவரும் பெண் குழந்தைகளை பேணி பாதுகாத்து
வளர்க்க வேண்டும். அவர்களை ஆற்றல் கொண்டவர்களாக மாற்ற இந்த சமுதாயம் அவர்களுக்கு
தேவையான உதவியும் பயிற்சியும் செய்ய வேண்டும். இன்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை.
இனி வரும் காலங்களிலும் பெண்களுக்கு தேவையான அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கி,
இந்த உலகை சக்தி மிகுந்ததாக மாற்ற அனைவரும் உறுதி எடுப்போம்.
4. நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.
இடம்
– பள்ளிக்
கலையரங்கம் நாள்
-08.03.2019
கலையரங்கத்தில் ஆசிரியர்கள்,மாணவர்கள்
கூடுதல்
– தலைமையாசிரியரின்
வரவேற்பு
– இதழாளர்
கலையரசியின் சிறப்புரை
– ஆசிரியர்களின்
வாழ்த்துரை
– மாணவத்
தலைவரின் நன்றியுரை.
மகளிர்
நாள் விழா
அறிக்கை
அரசு
உயர்நிலைப் பள்ளி, சேலம் மாவட்டத்தில் 08-03-2019
பள்ளி கலையரங்கத்தில் மகளிர் நாள் விழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
மாங்கனிக்கு புகழ்பெற்ற எங்கள் சேலம் மாவட்டத்தில் இதழாளர் கலையரசி அவர்கள்
தலைமையில், தலைமையாசிரியர் முன்னிலையில் மகளிர் நாள் விழா
நடைபெற்றது.
காலை 10.00 மணியளவில் பள்ளியின் கலையரங்கத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களும்
ஒருவர் பின் ஒருவராக வரிசையாக அமைதியான முறையில் கலையரங்கத்தில் அந்தந்த வகுப்புக்கென
ஒதுக்கப்பட்ட இடத்தில் மாணவர்கள் தனியாகவும், மாணவிகள்
தனியாகவும் அமர்ந்தோம். எங்களோடு எங்களை பின் தொடர்ந்து அந்ததந்த வகுப்பு
ஆசிரியர்களும் வருகைப் புரிந்து அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில்
அமர்ந்தனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் சிறப்பு விருந்தினராக
வந்திருந்த இதழாளர் கலையரசி அவர்களையும், ஆசிரியர்களையும்,
கல்வி அதிகாரிகளையும், பெற்றோர்களையும், பெற்றோர்
ஆசிரியக் கழகத் தலைவர், துணைத்தலைவர், மற்றும்
மாணவ மாணவியரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசும்,
பொன்னாடையும் வழங்கப்பட்டது.
நிகழ்வின் முக்கிய அம்சமான இதழாளர் கலையரசி அவர்களின்
சிறப்புரை ஆற்றினார்.அவர் தனது உரையில்…
·
பெண்களுக்கான உரிமை
o
ஆண்களுக்கு நிகரான உரிமைகள்.
o
எல்லோரும் சமமாக மதிக்கப்பட வேண்டியதன் அவசியம்
·
பெண்களுக்கான சட்டம்
o பெண்கள்
பாதுகாப்புச் சட்டம்
o பெண்களுக்கு
சொத்தில் சம உரிமைச் சட்டம்
o பெண்களுக்கு
எதிரான பாலியியல் வன்கொடுமைச் சட்டம்
·
இந்தியாவின் சாதனைப் பெண்கள்
o முத்துலெட்சுமி
ரெட்டு
o சாவித்திரி
பாய் பூலே
o ஜான்சி
ராணி
·
சாதனை பெண்களின் சாதனைகள்
o
பெண்கள் விண்வெளிக்கு சென்ற சாதனை
o
அன்பால் விருது வென்ற பெண்களின் சாதனை
என அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும் விதமாக அமைந்தது
சிறப்புரை.
தொடர்ந்து ஒவ்வொரு ஆசிரியர்களும் பெண்களை எப்படி
பாதுகாக்க வேண்டும்?, அவர்களை எப்படி போற்ற வேண்டும்? பெண்கள்
எவ்வாறு சமூகத்தில் நடந்துக் கொள்ள வேண்டும்? பெண்களும்
சாதிக்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளது எனக் கூறி வாழ்த்துரை கூறினார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து பெண்களை போற்றும் நாடகம்,
பேச்சு, பாடல், மாறுவேடம் என மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்திக்
காட்டி பரிசுப் பெற்றனர்.
இறுதி நிகழ்வாக தமிழ் மன்றத்தின் மாணவத்தலைவன் அவர்கள்
மூலம் நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றியுரை கூறப்பட்டது.