10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-4-TOPPERS - BIG QUESTION

 

பத்தாம் வகுப்பு

தமிழ்

இயல் – 4

மீத்திற மாணவர்களுக்கான நெடுவினாக்கள்

நெடுவினாக்கள்

1. இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் விளக்குக.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மன்னனும் இடைக்காடனும்

இறைவனிடம் முறையிடல்

இறைவன் நீங்குதல்

மன்னன் வேண்டுகோள்

இறைவன் கூற்று

புலவனுக்குச் சிறப்பு செய்தல்

பாண்டியன் தன் தவறை உணர்தல்

முடிவுரை

முன்னுரை :

        கபிலரின் நண்பர் இடைக்காடனாரை மன்னன் இகழ்ந்ததன் பொருட்டு இறைவன் புலவனின் குரலுக்குச் செவி சாய்த்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

மன்னனும் இடைக்காடனும்

·         குசேல பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் கல்வியறிவு மிக்கவன்.

·         கலைகளை முழுவதும் உணர்ந்தவர் கபிலரின் அன்பு நண்பர் புலவர் இடைக்காடனார்.

·         குலேசபாண்டியனின் கல்வி அறிவு மிக்கவன் என்பதை கற்றோர் கூறக் கேட்டு புலவர் இடைக்காடனார் மன்னனின் அவைக்கு வருகைப்புரிந்தார்.

·         மன்னன் பொருட்செல்வதோடு கல்விச்செல்வமும் உடையவன் என்பதனை அறிந்து சொற்சுவை நிரம்பிய பாடலை இடைக்காடனார் பாடினார்.

·         மன்னன் சிறிதேனும் சுவைத்து தலை அசைக்காமல் புலமையை அவமதித்தான்

·         இடைக்காடனார் மன்னனின் செயலுக்கு வருத்தமடைந்து அவையை விட்டு   வெளியேறி கடம்பவன இறைவனிடம் முறையிடச் சென்றார்.

இறைவனிடம் முறையிடல்

·         இடைக்காடனார் இறைவன் திருமுன் விழுந்து வணங்கினார்.

·         தமிழறியும் பெருமானே! அடியார்க்கு நல்நிதி போன்றவனே! திருஆலவாயிலில் உறையும் இறைவனே என இறைவனை வணங்கி நிற்கிறார்.

·         பாண்டியன், பொருட்செல்வதோடு கல்விச்செல்வமும் உடையவன் என்பதனை அறிந்து சொற்சுவை நிரம்பிய பாடலைப் பாடினேன். அவனோ சிறிதேனும் சுவைத்து தலை அசைக்காமல் புலமையை அவமதித்தான்.

·         மன்னன் தன்னை இகழவில்லை. உன் இடப்புறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும், சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான் என சினத்துடன் கூறிச் சென்றார்.

·         புலவரின் சொல் வேற்படை போல் இறைவனின் திருச்செவியில் விழுந்தது.

இறைவன் நீங்குதல்

·         இறைவன் புலவன் இடைக்காடனுக்கும், அவரின் நண்பர் கபிலருக்கும் மனமகிழ்ச்சியை உண்டாக்க நினைத்தார்.

·         இறைவன் தம்முடைய இலிங்க வடிவத்தை மறைத்து உமாதேவியாரோடும் திருக்கோவிலை விட்டு வெளியேறினார்.

·         நேர் வடக்கே வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோவிலை ஆக்கி அங்குச் சென்று இருந்தார்.

மன்னன் வேண்டுகோள் :

·         கோவிலை விட்டு இறைவன் நீங்கியதை அறிந்த மன்னன், தன் தவறு யாது என அறிய இறைவனிடம் பின்வருமாறு வேண்டி நின்றான்.

·         இறைவனே, என்னால், என் படைகளால், என் பகைவரால், கள்வரால், விலங்குகளால் தங்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டதா?

·         மறையவர் நல் ஒழுக்கத்தில் குறைந்தனரோ?

·         தவமும் தருமமும் சுருங்கியதோ? இல்லறமும், துறவறமும் தத்தம் நெறியிலிருந்து தவறினவோ?

·         எனது தந்தையே!  யான் அறியேன் என பாண்டியன் வேண்டி நின்றான்.

இறைவன் கூற்று :

·         அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு  ஒரு போதும் நீங்க மாட்டோம்.

·         இடைக்கானார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர  குற்றம் உன்னிடம் இல்லை.

·         இடைக்கானார் மீது கொண்ட அன்பினால் இவ்வாறு இங்கு வந்தோம் என பாண்டியனிடம் இறைவன் கூறினார்.

பாண்டியன் தன் தவறை உணர்தல் :

·         வானத்திலிருந்து ஒலித்த இறைவனின் சொற்கேட்டுப் பாண்டிய மன்னன், மேலான பரம் பொருளோ, புண்ணியனே என வேண்டினான்.

·         சிறியவர்கள் குற்றம் பொறுப்பது பெரியவருக்குப் பெருமை அல்லவா? என தன் குற்றத்தைப் பொறுக்க வேண்டினான்.

புலவனுக்குச் சிறப்பு செய்தல்

·         மன்னனது மாளிகை அழகு நிரம்பியது.

·         மலர்களால் தொடுத்த மாலை பூரண கும்பம் கொடி ஆகியவற்றால் ஒப்பனை செய்யப்பட்டது.

·         அங்கு புலவர்கள் சூழ அறிவை அணிகலன்களாகப் பூண்ட இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து பொன் இருக்கையில் விதிப்படி அமர்த்தினான்.

·         புண்ணிய வடிவான புலவர்களே, நான் இடைக்காடனாருக்குச் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று பணிந்து வணங்கினான்.

Ø  புலவர்களும், “ மன்னா, நீ கூறிய அமுதம் போன்ற குளிர்ந்த சொல்லால் எங்களின் சினமான தீ தணிந்தது” என்றனர்.

Ø  இறைவன் சொல் கேட்டு இடைக்காடனுக்கு மன்னன் இவ்வாறாக சிறப்பு செய்தான்

முடிவுரை :

        இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்ததன் காரணமாக இறைவன் புலவனின் குரலுக்குச் செவிசாய்த்தார்,

2 ‘ கற்கை நன்றே கற்கை நன்றே

   பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மேரிஜேன்

பருத்திச் செடியும், மேரியும்

உனக்கு படிக்கத் தெரியாது

புதிய நம்பிக்கை

கல்வி

உதவிக்கரம்

மேல்படிப்பு

முடிவுரை

முன்னுரை :

        வரலாற்றில் மனிதர்கள் வருகிறார்கள்; சிலர் வரலாறாகவே இருக்கிறார்கள்; கல்வி அறிவற்ற இருட் சமூகத்தில் ஒற்றைச் சுடராக வந்து ஓராயிரம் சுடர்களை ஏற்றுகிறார்கள். மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மேரிஜேன்:

Ø  சாம்பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரிஜேன்.

Ø  பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள்.

Ø  மேரி மிகவும் சுறுசுறுப்பான பெண்.

Ø  தனது பிள்ளைகளில் மேரிஜேன் மிகவும் வித்தியாசமான பெண்ணாக இருக்கிறாள் என்பதைப் பற்றி அவளின் தந்தை  எண்ணிக் கொண்டார்.

பருத்திச் செடியும், மேரியும்:

·         பருத்திச் செடிகள் வளர்வதற்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறது என தனக்குத்தானே பேசிக் கொள்வாள்.

·         பருத்திச்செடியில் அரும்புகின்ற முதல் பூ மொட்டைப் பார்க்கிற முதல் ஆளாக தானே இருக்க வேண்டும் என்ற விருப்பம் தான் அது.

·         முதல் பூவை மேரி பார்த்து விட்டாள். ஒரு கணம் திகைத்தாள்.

·         நான் தான் முதலில் பார்த்தேன் என்று கத்தினாள்.

உனக்கு படிக்கத் தெரியாது :

·         மறுநாள், காலை அம்மா பாட்ஸி துவைத்துத் தேய்த்த துணிகள் நிரம்பிய கனத்த கூடையைத் தலையில் தூக்கிக் கொண்டார்.

·         மேரி பாட்ஸியுடன் வெள்ளை முதலாளி பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள்.

·         கருப்பின மனிதர்களுக்கு முன்புற வாசலில் அனுமதி கிடையாது. பின் பக்கமாக சென்றனர்.

·         மேரி வெளியில் நின்று இருந்தாள். சற்று தூரத்தில் தெரியும் சிறிய வீட்டை மேரி கண்டாள். அது வெள்ளை குழந்தைகள் விளையாடுவதற்கு கட்டப்பட்டது,

·         ஹலோ மேரி! உள்ளே வர விரும்புகிறாயா?” ஒரு வெள்ளைச் சிறுமி கேட்டாள்.

·         தயக்கத்தை ஆவள் வென்றது. மெதுவாக மேரி வீட்டினுள் நுழைந்தாள்.

·         வீட்டினுள் விளையாடியடிபடி சுற்றி வந்தபோது ஓர் ஓரத்தில் கிடந்த சிறிய மேசையும், ஒரு பொருளும் மேரியின் கவனத்தை ஈர்த்தது.

·         அது பைண்டிங் செய்யப்பட்ட புத்தகம்.மேலட்டை ஓவியத்தையும் அச்சிடப்பட்ட புத்தகத் தலைப்பையும் பார்த்து ஆர்வமுற்ற மேரி அதைத் தன் கையில் எடுத்துக் கொண்டாள்.

·         “ புத்தகத்தை என்னிடம் கொடு! நீ இதை எடுக்கக் கூடாது! உன்னால் படிக்க முடியாது..! என்று பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடுங்கினாள்.

·         மேரி மனம் துவண்டாள்.

·         நட்புணர்வு அற்ற அந்த இடத்திலிருந்து உடனே வெளியேறினாள். கண்ணீர் பொங்கியது. மேரி மனம் கசந்தாள்.

புதிய நம்பிக்கை

·         மேரிக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.

·         நான் படிக்க வேண்டும். வாசிக்கக் கற்றுக் கொள்ளப் போகிறேன், நான் எழுதப் படிக்க போகிறேன் என தனக்குத் தானே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டாள்.

·         தனது தந்தையிடம் “ நான் பள்ளிக்கூடத்திற்குப் போக முடியுமாப்பா? நான் படிக்கணும் அப்பா… எழுதப் படிக்கத் தெரிந்து கொள்ளணும்..ன்னு விரும்புகிறேன் “ என்றாள்.

·         சாம் மெக்லியோட், “ நமக்கென்று பள்ளிக்கூடம் கிடையாதேம்மா!” வருத்தத்துடன் கூறினார்.

·         ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர்உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும்.

·         நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வர வேண்டும்” எனக் கூறினார்.

·         மேரிக்குப் புதிய நம்பிக்கை பிறந்தது.

கல்வி

·         மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றாள்.

·         சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

·         அதில் இந்தப் பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது.

உதவிக்கரம்

·         மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி.

·         அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார்.

·         அவள் மேல் படிப்புக்காக டவுனுக்குச் செல்கிறாள்.

மேல்படிப்பு

·         மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக வழியனுப்ப இரயில் நிலையத்தில் அவளது கிராமமே திரண்டு வந்தது.

·         மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்திற்கு வந்தார்.

முடிவுரை

        எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம்.

3. தமிழின் இலக்கிய வளம்கல்வி மொழிபிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்அறிவியல் கருத்துகள்பிறதுறைக் கருத்துகள்தமிழுக்குச் செழுமை  

மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டுசெம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலைஎன்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக

குறிப்புச்சட்டம்

தமிழின் இலக்கிய வளம்

கல்வி மொழி

பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்

அறிவியல் கருத்துகள்

பிறதுறைக் கருத்துகள்

தமிழுக்குச் செழுமை

தமிழின் இலக்கிய வளம்

        சங்க காலத்திலிருந்தே தமிழகத்தார் வாழ்வியலையும், சிந்தனையையும் மொழியாக வடிவமைத்துத் தரும் தன்மை தமிழின் சிறப்பாகும். சங்க இலக்கியங்கள் தமிழின் தொன்மையை விளக்கும் முதற்கட்ட இலக்கியமாகும்.
திருக்குறள், புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை போன்றவை சமூகக் கருத்துகள், மனித உணர்வுகள், அரசியல் நெறிகள், காதல், போர்வீரம், இயற்கை என பலவற்றையும் விளக்குகின்றன

கல்வி மொழி :

        மொழிபெயர்ப்பை கல்வி ஆக்குவதன் மூலம் தமிழ்மொழியின் பெருமைகளை பிற மொழியினரும், பிறமொழியின் சிறப்புகளை தமிழ் மொழியிலும் அறிந்து கொள்ள முடிகிறது.   உலகின் உயர்ந்த நூல்கள் தமிழில் கிடைக்கும் பொழுது, தமிழில் கல்வியும் செழிக்கிறது. மொழிபெயர்ப்பு செயல்பாடு தமிழ் மொழியின் சக்தியையும் பரப்பையும் வளர்க்கிறது.  இது தமிழ் கல்வி மட்டுமல்ல, தமிழரின் அடையாளமாகவும் உருவெடுக்கிறது.

பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்:

·         பிறமொழிகளின் இலக்கியங்களை அறிந்துக் கொள்ளவும், புதிய படைப்புகளை உருவாக்கவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.

·         தாகூர் கீதாஞ்சலி நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தப் பின் தான் நோபல் பரிசு கிடைத்தது.

·           பிறமொழிகளில் உள்ள பல இலக்கியங்கள், மனிதனின் உணர்வுகள், சிந்தனைகள், தத்துவங்கள், கலாசாரங்கள் ஆகியவற்றை மெருகூட்டிய வடிவத்தில் தந்து வருகின்றன.

அறிவியல் கருத்துகள்

·         மொழிபெயர்ப்பு அறிவியல் சார்ந்த துறையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. Tele என்ற ஆங்கிலச் சொல் தொலை என்பதைக் குறிக்கும். இதன் அடிப்படையில் Telephone – Telescope – தொலைபேசி, தொலைநோக்கி என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பிறதுறைக் கருத்துகள் :

·         கல்வி, இலக்கியம், மருத்துவம் மட்டுமல்லாது பிற துறைகளும் மொழிப்பெயர்ப்பின் மூலம் வளர்ச்சி அடைந்துள்ளது.

·         தமிழ், ஒரு செம்மொழியாக மட்டுமல்லாது, பல துறைகளின் ஆழமான கருத்துகளை தாங்கும் சக்தி வாய்ந்த மொழியாகவும் உயர்ந்துவர வேண்டும். இதற்காக பிற மொழிகளில் உள்ள வரலாறு, மனையியல், அறச்சாஸ்திரம், அறிவியல், தத்துவம், சமூகவியல், அறிவியல் நாகரிக வளர்ச்சி, சுகாதாரம், மருத்துவம் போன்ற துறைகளில் உள்ள நூல்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஆய்வறிக்கைகள் போன்றவற்றை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.

தமிழுக்குச் செழுமை:

Ø  பிற மொழிகளின் கருத்துகள் தமிழில் கிடைத்தால், தமிழ் மாணவர்களுக்கு மற்ற மொழிகளைப் படிக்கத் தேவையில்லாமல் தாய்மொழியில் பயிற்சி கிடைக்கும்.

Ø  புதிய சொல்லாக்கம், பதிகை மொழிகள், பகுத்தறிவு அடிப்படையிலான கல்வி வளர்ச்சி ஏற்படுகிறது.

Ø  தமிழ் மொழி, சுயமாக பல துறைகளின் வழிகாட்டும் கல்வி மொழியாக மாறும்.

Top of Form

CLICK HERE



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post