10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-3-TOPPERS - BIG QUESTION

 

பத்தாம் வகுப்பு

தமிழ்

இயல் – 3

மீத்திற மாணவர்களுக்கான நெடுவினாக்கள்

நெடுவினாக்கள்

1. சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

விருந்தினர்

தமிழர் மரபு

தனித்து உண்ணாமை

அல்லிலும் விருந்து

இன்மையிலும் விருந்து

நிலத்திற்கேற்ற விருந்து

விருந்தை எதிர்கொள்ளுதல்

முடிவுரை

முன்னுரை:

        தமிழர் மரபில் உணவோடு உணர்வையும் குழைத்துச் செய்த சமையல் பண்பாட்டை வெளிப்படுத்தும் விருந்தாகிறது. சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பை இக்கட்டுரையில் காண்போம்.

விருந்தினர் :

Ø  விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர்.

Ø  விருந்தினர் வேறு, உறவினர் வேறு

Ø  விருந்தே புதுமை என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்

Ø  முன்பின் அறியாத புதியவர்களே விருந்தினர்.

தமிழர் மரபு:

Ø  இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்வது பொருட்டே என்கிறார் வள்ளுவர்.

Ø  விருந்தினரைப் போற்ற முடியாத நிலை எண்ணி கண்ணகி வருந்துவதாக இளகோவடிகள் கூறியுள்ளார்.

Ø  முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்கும் நிலையை திருக்குறள் கூறுகிறது.

Ø  கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.

Ø  செயங்கொண்டார் விருந்தினருக்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளார்.

தனித்து உண்ணாமை :

Ø  விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக தனித்து உண்ணாமை கருதப்படுகிறது.

Ø  அமிழ்தமே கிடைத்தாலும் தானே உண்ணாது பிறருக்கும் கொடுப்பது தமிழர்களின் பண்பாடு.

Ø  இத்தகையோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது என இளம்பெருவழுதி குறிப்பிட்டுள்ளார்.

அல்லிலும் விருந்து :

Ø  நடு இரவில் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் இயல்பு தமிழருக்கு உண்டு.

Ø  ‘ அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்‘ என்கிறது நற்றிணை.

இன்மையிலும் விருந்து :

Ø  தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி.

Ø  முந்தின நாள் விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த தன் பழைய வாளைப் பணையம் வைத்தான் தலைவன்.

Ø  மறுநாளும் விருந்தினருக்கு பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழை பணையம் வைத்து விருந்தளித்தான் தலைவன்.

நிலத்திற்கேற்ற விருந்து :

Ø  நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் உணவும் கொடுத்தனர் என்கிறது புறநானூறு.

விருந்தை எதிர்கொள்ளும் தன்மை :

Ø  இல்லத்தில் பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன் உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்னும் வழக்கம் இருந்தது.

முடிவுரை :

        காலமாற்றத்தால் புதியவர்களை அழைத்து இன்று விருந்து போற்றுவதில்லை. மாறாக உற்றார் உறவினர்கள், நண்பர்கள் இவர்களுக்கு மட்டும் விருந்து போற்றும் நிலை உள்ளது. சங்க காலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு போற்றத்தக்கதாக உள்ளது.

2. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள

பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப் பகுதிக் கொண்டு விவரிக்க.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

பெயர்ப்பொருத்தம்

முடிவுரை

 

முன்னுரை :

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல். கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் பசுமையாக இருக்கும். பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து விருந்தோம்பல். அப்படி நிகழும் ஒரு நிகழ்வை, கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் என்னும் கதையில் வரும் அன்னமய்யா என்னும் கிராமத்துக்காரரின் விருந்தோம்பலை இக்கட்டுரையில் வாயிலாக காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வந்தான்.

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்.

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  பசியால் வாடி நடக்க முடியாமல் தாடியும் அழுக்குச் சட்டையுமாய், பார்ப்பதற்கு முதியவர் போன்றி இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்.

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக் கொடுத்தார்.

Ø  எப்படிக் குடிப்பது என அவன் கேட்டான். சும்மா கடிச்சிக் குடிங்க என்று சொன்ன போதும், அமர வைத்து விருந்து உபசரித்தார் அன்னமய்யா.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

பெயர் பொருத்தம் :

Ø  வந்தவனுக்கு மன நிறைவோடு நீத்துபாகத்தைக் குடித்தவுடன்  அன்னமய்யாவுக்கு மன நிறைவு ஏற்பட்டது.

Ø  வந்தவன் தம்பீ உம் பெயரென்ன ?” என்று வினவினான்.

Ø  அன்னமய்யா “ என்று அவர் கூறியதும், வந்தவன் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தான்.

Ø  அவரின் செயல்பாடுக்கும், அவரின் பெயருக்கும் எவ்வளவு அழகான பெயர்ப் பொருத்தம் என நினைத்துக் கொண்டான்

முடிவுரை:

        தனியொருவருனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் – என பாரதி பாடினார். பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது. வந்தவரை விருந்தினராக எண்ணி அருகிலிருந்து உணவளித்த அன்னமய்யாவின்  செயலை அனைவரும் பின்பற்றினால் இவ்வுலகம் பசியில்லா உலகமாய் மாறும்.

3. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற

   விவரித்து எழுதுக.

குறிப்புச் சட்டம்

உறவினர்

வருகை

வரவேற்பு

விருந்து உபசரிப்பு

நகர் வலம்

இரவு விருந்து

பிரியா விடை

முடிவுரை

உறவினர் :

        நீண்ட நாட்களாக நாங்கள் பார்க்க எண்ணிய எங்கள் சித்தப்பாவின் குடும்பம் எங்கள் ஊர் மாரியம்மன் பண்டிகைக்கு ஊருக்கு வருவதாக அறிந்த நாங்கள் மிக மகிழ்ச்சி அடைந்தோம். அவர்களின் வருகையை நானும், என் குடும்ப உறுப்பினர் அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்தோம்.

வருகை:

        எங்கள் ஊரின் மாரியம்மன் பண்டிகையும் வந்தது. எங்கள் சித்தப்பாவும், அவர்களின் குடும்பமும் காலைப் பொழுதிலேயே வந்தார்கள். அவர்கள் வீட்டிற்கு வந்ததிலிருந்து அவர்கள் ஊருக்கு திரும்பி செல்லும் வரை நாங்கள் அவர்களை உபசரித்து அளித்த விதத்தை காணலாம்.

வரவேற்பு :

·         என் இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக, வருக என மகிழ்ச்சியாக வரவேற்றோம்.

·         அவர்களை மிகவும் அன்போடும், மகிழ்ச்சியோடும் வீட்டிற்குள் வருக எனக் கூறினோம்.

·         அவர்கள் அமர்வதற்கு இருக்கையை சுத்தப்படுத்திக் கொடுத்தோம்..

·         நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டதில் களைப்பு இருக்கும். ஆகையால் அவர்களை அமரவைத்து மின் விசிறியை சுழல விட்டோம்.

·         வந்தவர்களுக்கு முதலில் நீர் அருந்தத் தந்தோம்.

விசாரிப்பு :

·         உறவினர்களையும், அவர்களின் குடும்ப நலனையும் விசாரித்தோம்.

·         அவர்தம் தொழில், குழந்தைகளின் படிப்புகள் ஆகியவற்றிலும் அக்கறையுடன் உரையாடினோம்.

·         அவர்களின் வருகை எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்தது.

·         அடுத்ததாக அவர்களின் பசியினைப் போக்க அறுசுவை உணவினை தயார் செய்ய ஆயத்தமானோம்.

விருந்து உபசரிப்பு :10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-2-TOPPERS - BIG QUESTION

·         வந்தவர்களுக்கு கறியும், மீனும் வாங்கி வந்தோம்.

·         மாமிச உணவை வாழை இலையில் பரிமாறினோம்.

·         அவர்கள் உண்ணும் வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து கவனித்தோம்.

·         உணவு பரிமாறும் விதத்தை அறிந்து உறவினர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறினோம்.

நகர்வலம் :

·         விருந்து முடித்து, எங்கள் ஊரின் சிறப்புகளைக் கூறினோம்

·         ஊரின் சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று அவற்றை உறவினர்களோடு கண்டு களித்தோம்.

·         ஊரில் மாரியம்மன் பண்டிக்கை கொண்டாடும் விதம் மற்றும் பழக்கத்தை உறவினர்களுக்கு எடுத்துக் கூறினோம்.

இரவு விருந்து :

·         நகர்வலம் முடித்து, இரவு விருந்துக்குத் தேவையானவற்றை செய்தோம்.

·         இரவில் இரவு நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்து படைத்தோம்.

·         உணவு உண்ட பின் எங்கள் ஊர் பற்றி அவர்கள் நினைப்பதைப் பற்றியும், இதே போன்று அவர்களின் ஊரில் உள்ள சிறப்பு மிகு இடங்களின் பெருமைகளையும் கேட்டு கலந்துரையாடினோம்.

பிரியா விடை :

·         இரவு விருந்து முடித்து அவர்கள் தங்கள் ஊருக்குச்  செல்வதாகக் கூறினர்.

·         அவர்களின் வருகை எவ்வளவு மகிழ்ச்சி அளித்ததோ அந்தளவு வருத்தம் அடைந்தது மனம். அவர்களின் பிரிவினை மனம் ஏற்க சற்று கால அவகாசம் எடுத்துக் கொண்டது.

·         அடுத்த முறை பள்ளி விடுமுறை நாளில் நாங்களும் வந்து உறவுகளை புதுப்பித்துக் கொள்கிறோம் எனக் கூறினோம்.

·         எங்களுக்கு  பிரிய மனமில்லாமல் அவர்கள் கூடவே பேருந்து நிறுத்தம் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தோம்.

முடிவுரை :

        இன்றைய காலச் சூழ்நிலையில் உறவுகள் தனித்தனியாக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது. வேலை பளுவும் ஒருவருக்கொருவரை அன்பு பாராட்ட மறுக்கிறது. இந்த உலகில் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒரு அன்பு உறவால் இணைக்கப்பட்டுகிறது. அந்த உறவுகளை மதித்து, அவர்களுக்கு காசிக்காண்டம் கூறிய வழிகளைப் பின்பற்றி விருந்தோம்பலை மேற்கொண்ட விதம் எங்களுக்கு மன நிறைவை தருகிறது.

CLICK HERE 

Top of Form

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post