10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-3- BIG QUESTION

  

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 3

நெடு  வினாக்கள்

இளந்தமிழ் வழிகாட்டி

----------------------------------------------------------------------------------------------------------------------------

 நெடுவினா


1. சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.


குறிப்புச் சட்டம்

முன்னுரை

விருந்தினர்

தமிழர் மரபு

தனித்து உண்ணாமை

அல்லிலும் விருந்து

இன்மையிலும் விருந்து

விருந்தை எதிர்கொள்ளுதல்

முடிவுரை

முன்னுரை:

        தமிழர் மரபில் உணவோடு உணர்வையும் குழைத்துச் செய்த சமையல் பண்பாட்டை

 வெளிப்படுத்தும் விருந்தாகிறது. சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பை

 இக்கட்டுரையில் காண்போம்.


விருந்தினர் :


Ø  விருந்தே புதுமை என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.


Ø  முன்பின் அறியாத புதியவர்களே விருந்தினர்.


தமிழர் மரபு:


Ø  இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்வது பொருட்டே என்கிறார் வள்ளுவர்.


Ø  விருந்தினரைப் போற்ற முடியாத நிலை எண்ணி கண்ணகி வருந்துவதாக


இளகோவடிகள் கூறியுள்ளார்.


Ø  முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்கும் நிலையை திருக்குறள் கூறுகிறது.


தனித்து உண்ணாமை :


Ø  விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக கருதப்படுகிறது.


Ø  அமிழ்தமே கிடைத்தாலும் தானே உண்ணாது பிறருக்கும் கொடுப்பது தமிழர்களின்


 பண்பாடு.

அல்லிலும் விருந்து :


Ø  நடு இரவில் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் இயல்பு தமிழருக்கு உண்டு.


Ø  ‘ அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்‘ என்கிறது நற்றிணை.


இன்மையிலும் விருந்து :


Ø  தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை


 விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி.


Ø  விருந்தினருக்கு பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழை


 பணையம் வைத்து விருந்தளித்தான் தலைவன்.


விருந்தை எதிர்கொள்ளும் தன்மை :


Ø  இல்லத்தில் பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன் உணவு உண்ண


 வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்னும் வழக்கம் இருந்தது.


முடிவுரை :


        காலமாற்றத்தால் புதியவர்களை அழைத்து இன்று விருந்து போற்றுவதில்லை. மாறாக


 உற்றார் உறவினர்கள், நண்பர்கள் இவர்களுக்கு மட்டும் விருந்து போற்றும் நிலை உள்ளது. 


சங்க காலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு போற்றத்தக்கதாக உள்ளது.


2. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக்


   கோபல்லபுரத்து மக்கள் கதைப் பகுதிக் கொண்டு விவரிக்க.


குறிப்புச் சட்டம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :


        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற மனித நேயம்

 விருந்தோம்பல். கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் என்னும் கதையில் வரும்

அன்னமய்யா என்னும் கிராமத்துக்காரரின் விருந்தோம்பலை இக்கட்டுரையில் வாயிலாக

 காணலாம்.


தேசாந்திரி:


Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.


Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வந்தான்


Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்


Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.


Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்


கருணை அன்னமய்யா:


Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.


Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக்


 கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.


Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.


முடிவுரை:

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து

 மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.


3. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற


   விவரித்து எழுதுக.


குறிப்புச் சட்டம்


வரவேற்பு

விருந்து உபசரிப்பு

நகர் வலம்

இரவு விருந்து

பிரியா விடை

வரவேற்பு :


Ø  என் இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக,வருக என மகிழ்ச்சியாக


 வரவேற்றேன்.

Ø  அவர்கள் அமர்வதற்கு இருக்கையை சுத்தப்படுத்திக் கொடுத்தேன்.


Ø  வந்தவர்களுக்கு முதலில் நீர் அருந்தத் தந்தேன்.


விருந்து உபசரிப்பு :


Ø  வந்தவர்களுக்கு கறியும், மீனும் வாங்கி வந்தேன்.


Ø  மாமிச உணவை வாழை இலையில் பரிமாறினேன்.


Ø  அவர்கள் உண்ணும் வரை அருகில் இருந்து பார்த்துப் பார்த்து கவனித்தேன்.


நகர்வலம் :


Ø  விருந்து முடித்து, எங்கள் ஊரின் சிறப்புகளைக் கூறினேன்.


Ø  ஊரின் சிறப்புமிக்க இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்றேன்.


இரவு விருந்து :


Ø  நகர்வலம் முடித்து, இரவு விருந்துக்குத் தேவையானவற்றை செய்தேன்.


Ø  இரவில் இரவு நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்து படைத்தேன்.


பிரியா விடை :


Ø  இரவு விருந்து முடித்து அவர்கள் தங்கள் ஊருக்குச்  செல்வதாகக் கூறினர்.


அவர்கள் கூடவே பேருந்து நிறுத்தம் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தேன்.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post