
பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 3
சிறு வினாக்கள்
இளந்தமிழ் வழிகாட்டி
______________________________________________________________________________________________________
சிறுவினா
1. ‘ இன்மையிலும் விருந்தோம்பல் ‘ குறித்துப் புறநானூற்றுப்
பாடல் தரும் செய்தியை எழுதுக.
Ø தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை
 விருந்தினருக்கு விருந்தளித்தாள்
தலைவி.
Ø விருந்தினருக்கு பொருள் தேவைப்பட்டதால் தன் பழைய வாளைப் பணையம்
 வைத்தான் தலைவன்.
Ø மறுநாளும் விருந்தினருக்கு பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச்
 சீறியாழை பணையம் வைத்து விருந்தளித்தான்
தலைவன்
2. வைத்தியநாதபுரி
முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை
   ஆடிய நயத்தை விளக்குக.
      வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாகச் செங்கீரை ஆடியபோது
Ø 
அவன் பாதங்களில்   கிண்கிணிகளோடு சிலம்புகளும்  சேர்ந்து ஆடுகின்றன . 
Ø இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள்
 ஆடுகின்றன
Ø 
நெற்றியில்
சுட்டிப் பதிந்தாடுகின்றன.
Ø 
காதுகளில்
குண்டலமும்,குழையும் அசைந்தாடுகின்றன
3. ‘ தனித்து உண்ணாமை ‘ என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின்
அடிப்படையாக
அமைந்தது. இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக
Ø  கால மாற்றத்தில் புதியவர்களை அழைத்து உணவிடுவது குறைந்தது.
Ø  விருந்து குறைந்ததால் சத்திரங்கள் பெருகின.
Ø  ஓரளவு தெரிந்தவர்களை மட்டுமே விருந்தினர்களாக ஏற்று விருந்தளித்தனர்.
Ø அடுத்து உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையே
 விருந்தினர்களாகப்
போற்றும் நிலைக்கு மாறியுள்ளனர்
4.மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி
மேற்கொண்டனர். சிலர்
  மதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில்
இருந்த வீட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தள்
  மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன.
அவற்றைப் பார்த்தபடியே வீடு சென்றேன்.
         பத்தியைப் படித்து தொகை நிலைத்
தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.
| 
   மார்கழித் திங்கள்  | 
  
   இருபெயரொட்டுப் பண்புத் தொகை  | 
 
| 
   நடைபயிற்சி மேற்கொண்டனர்  | 
  
   வேற்றுமைத் தொகை  | 
 
| 
   செங்காந்தள்  | 
  
   பண்புத் தொகை  | 
 
| 
   அதிகாலை நேரம்  | 
  
   இருபெயரொட்டுப் பண்புத் தொகை  | 
 
| 
   வீடு சென்றேன்  | 
  
   வேற்றுமைத் தொகை  |