10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-3 -2 MARK

  

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 3 

குறு  வினாக்கள்

இளந்தமிழ் வழிகாட்டி
----------------------------------------------------------------------------------------------------------------------------

அனைத்து வினாக்களுக்கும் விடையளி


1. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.


Ø  வருக, வணக்கம்


Ø  வாருங்கள்.


Ø  அமருங்கள், நலமா?


Ø  நீர் அருந்துங்கள்


    2. ‘ தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக்


குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவிஎன்பது இலக்கியச்


செய்தி.விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக்


குறிப்பிடுக.


Ø  விருந்தோம்பலுக்கு செல்வம் இன்றையாமையாதது இல்லை.


Ø  விருந்து கொடுக்க வேண்டும் என்ற மனநிலை இருந்தால் போதும்


3. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி


    பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?


சிலம்பு,கிண்கிணி

காலில் அணிவன

அரைஞாண்

இடையில் அணிவது

சுட்டி

நெற்றியில் அணிவது

குண்டலம், குழை

காதில் அணிவன

சூழி

தலையில் அணிவது

 

4. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர்


 குறிப்பிட்டுள்ளார். – அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத் தொகையாக மாற்றி எழுதுக.


கல்வியும் செல்வமும்

கல்வி செல்வம்

விருந்தும் ஈகையும்

விருந்து ஈகை

 

5. தண்ணீர் குடி , தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக்


    கண்டறிந்து விரித்து எழுதுக

         

தண்ணீர் குடி

இரண்டாம் வேற்றுமைத் தொகை

முகில் தண்ணீரைக் குடித்தான்

தயிர்க்குடம்

இரண்டாம் வேற்றுமை உருபும் உடன் தொக்கத் தொகையும்

அமுதா தயிர்க்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள்


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post