10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-3-MOZHIYODU VILAYADU

  

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 3 

மொழியோடு விளையாடு

இளந்தமிழ் வழிகாட்டி

______________________________________________________________________________________________________

விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு

நூலின் பெயரைக் கண்டுபிடிக்க:-

 

வினா

குறிப்பு

விடுபட்டஎழுத்து

நூலின் பெயர்

____கு

பறவையிடம் இருப்பது

கு

திருக்குறள்

கு____தி

சிவப்பு நிறத்தில் இருக்கும்

குருதி

வா____

மன்னரிடம் இருப்பது

வாள்

____கா

தங்கைக்கு மூத்தவள்

க்கா

_____

அறிவின் மறுபெயர்

தி

பட_____

நீரில் செல்வது

படகு

 

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக

 

1

சிலை - சீலை

சிலை க்கு சீலை என எழுதினான்.

2.

தொடு - தோடு

தோடினைத் தொட்டுப் பார்த்தாள் கமலா

3

மடு - மாடு

மடுவில் மாடு நீர் குடித்தது.

4

மலை - மாலை

மலை மீது மாலையில் ஏறினான்

5

வளி - வாளி

வளியை வாளியால் அள்ள முடியாது

6

விடு - வீடு

விடு அவன் வீடு செல்லட்டும்

( அனைத்து சொற்களுக்கும் : ____ என்பதற்கு ____ என எழுதினான் )

எ.கா : சிலை என்பதற்கு சீலை என எழுதினான் 

 

அகராதியில் கண்டு பொருள் எழுதுக.

ஊண்

உணவு

ஊன்

தசை,உடம்பு

திணை

ஒழுக்கம்

தினை

சிறுதானிய வகை

அண்ணம்

மேல்வாய்

அன்னம்

சோறு,பறவை

வெல்லம்

கரும்பின் கட்டி

வெள்ளம்

நீர்ப்பெருக்கு

 

 காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

 

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

    என்னை எழுது என்று

சொன்னது இந்தக் காட்சி

      நாய் என் பசியைப் பற்றி எழுது என்றது

சிறுமி என் வறுமையைப்  பற்றி எழுது என்றாள்

      நான் எழுதுகிறேன் வறுமையிலும் பிறர்

பசிப்போக்குவதே சிறந்தப் பண்பு  என்று

 

செயல் திட்டம்

 

உணவு,விருந்து சார்ந்த பழமொழிகளையும், விழிப்புணர்வு தொடர்களையும் எழுதுக.

 

பழமொழி

விழிப்புணர்வுத் தொடர்

·                     நொறுங்கத் தின்றால் நூறு வயது

·                     அளவுக்குமீறினால் அமிர்தமும் நஞ்சு.

·                     விருந்தும் மருந்தும் மூன்று நாள்

·                     சத்து நிறைந்த உணவு நம் வாழ்வுக்கு முத்து

·                     சரிவிகித உணவு நலமான வாழ்வுக்கு உயர்வு

·                     துரித உணவு விரைவில் சாவு

 

 படிப்போம் ; பயன்படுத்துவோம்

 

Hospitality

விருந்தோம்பல்

Wealth

செல்வம்

Baby shower

வளைகாப்பு

House warming

புதுமனை புகுவிழா

Feast

விருந்து

 

நிற்க அதற்குத் தக

தம்பி.. உனக்குப் பிடிச்ச காய் சொல்லு ? “     -        கேரட்

பிடிச்ச பழம்?”                                              -        ஆப்பிள்”

பிடிச்ச காலை உணவு?                                 -        நூடுல்ஸ்

மத்தியானத்துக்கு                                     -        ஃப்ரைடு ரைஸ்

ராத்திரி….?”                                                  -        பீட்ஸா அல்லது பாஸ்தா”

  இது ஏதோ ஆங்கிலப்படத்தின் வசனம் அல்ல. “ சரியா சாப்பிட மாட்டேங்கிறான் டாக்டர் “ என்று என்னிடம் அழைத்து வரப்பட்ட ஒரு சிறுவனுடனான என் உரையாடல். ஒட்டு மொத்த இளைய தலைமுறையும் பாரம்பரிய உணவை விட்டு வேகமாக விலகிச் சென்றது எப்படி? இட்லியும், சாம்பார் சாதமும்.கத்திரிக்காய் பொரியலும் இனி காணாமல் போய்விடுமா? அதிர்ச்சியான பதில்.’ ஆம்’ காணாமல் போய்விடும்! உங்கள் குழந்தைகள்” ஆடு,மாடுகளைத் தவிர மனுஷங்க கூட கீரையைச் சாப்பிடுவாங்களா மம்மி? என எதிர்காலத்தில் கேட்கக்கூடும்.

மருத்துவர் கு.சிவராமனின் கருத்திற்கு சமூக அக்கறையுடனான உங்களின் பதில்

என்னவாக இருக்கும்?

 

                1.           நாகரிகம் கருதி நம் பாரம்பரிய உணவுகளைத் தவிர்த்தல் கூடாது.

                2.            நம் நாட்டிற்கு புழுங்கல் அரிசியே ஏற்றது.

                3.            பாரம்பரிய உணவுகளைத் தினமும் உட்கொள்ள வேண்டும்.

                4.            பாரம்பரிய உணவு மிகுந்த சக்தியைக் கொடுக்கும்.

                5.            பாரம்பரிய உணவுப்பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 

அறிவை விரிவு செய்


திருக்குறள் தெளிவுரை

வ.உ.சிதம்பரனார்

சிறுவர் நாடோடிக் கதைகள்

கி.ராஜ நாராயணன்

ஆறாம் திணை

மருத்துவர்.கு.சிவராமன்

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post