பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 2
சிறு வினாக்கள்
இளந்தமிழ் வழிகாட்டி
______________________________________________________________________________________________________
 சிறுவினா  
1. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும்
நான், இலக்கியத்தில் நான்,
   முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்… முதலிய தலைப்புகளில்
காற்று தன்னைப்பற்றி பேசுகிறது.
   இவ்வாறு “ நீர் “ தன்னைப் பற்றிப் பேசினால்….
உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை
எழுதுக.
- மழையாக நான்
 
- ஆறு,கடல்,குளமாக நான்
 
- உயிரினங்களின் ஜீவ ஊற்றாக நான்
 
- இலக்கியத்தில் நான்
 
- இயற்கை வளத்தில் என் பங்கு
 
2. உயிர்கள் உருவாகி
வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி
அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
- பருபொருள்கள் சிதறும்படி பெருவெடிப்பு நிகழ்ந்தது.
 
- நெருப்பு பந்து போல புவி உருவாகியது.
 
- பூமி குளிரும்படி தொடர்ந்து மழை பொழிந்தது.
 
- தொடர் மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.
 
- பின் உயிர்கள் உருவாகி வளர்வதற்கு ஏற்ற சூழல் உருவானது.
 
3. வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம்
சுற்றுச்சூழல் பற்றிய பாடலைப் பாடிக் காட்டினார். 
    இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப்பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து
    ஆசிரியர் சிறுவினாக்களைக்
கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி
    வாருங்கள். நன்றாக எழுதுபவருக்குப்
பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார். – 
    வண்ணமிட்ட சொற்களுக்கான தொகாநிலைத் தொடர்களைக்
கண்டறிக.
| 
   வண்ணமிட்ட
  சொற்கள்  | 
  
  
   தொகாநிலைத் தொடர்கள்  | 
  
 
| 
   பாடிக் காட்டினார்  | 
  
  
   வினையெச்சத் தொடர்  | 
  
 
| 
   கேட்டுப் பாடினர்  | 
  
  
   வினையெச்சத் தொடர்  | 
  
 
| 
   கேட்ட பாடல்  | 
  
  
   பெயரெச்சத் தொடர்  | 
  
 
| 
   சிறுவினாக்களைக் கேட்டார்  | 
  
  
   இரண்டாம் வேற்றுமை தொகா நிலைத் தொடர்  | 
  
 
| 
   எழுதுபவருக்குப் பரிசு  | 
  
  
   நான்காம் வேற்றுமை தொகா நிலைத் தொடர்  | 
  
 
