10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-2-2 MARK

 

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 2

குறு  வினாக்கள்

இளந்தமிழ் வழிகாட்டி

------------------------------------------------------------------------------------------------------------------------

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

1. நமக்கு உயிர் காற்று

  காற்றுக்கு வரம் மரம்மரங்களை

  வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் இது போன்று உலகக் காற்று நாள்

   விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.


        •  மரம் வளர்ப்போம்; காற்றின் பயன் அறிவோம்
        • மரம் நடுவோம்; காற்றை பெறுவோம்

2. ‘ எழுது என்றாள் ‘ என்பது விரைவு காரணமாக. ‘ எழுது எழுது என்றாள்’ என அடுக்குத்

     தொடரானது,’ சிரித்துப் பேசினார் ‘ என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?


உவப்பின் காரணமாக , “ சிரித்து சிரித்துப் பேசினார் “ என அடுக்குத் தொடராகும்.


3. கட்டுரை படித்த – இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித்

    தொடரை விரித்து எழுதுக.


கட்டுரையைப் படித்த மாணவன்.


4.மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும்

    நிகழ்வுகளை எழுதுக.


        மேகங்களின் துணிச்சல் : முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கிறது.

        மேகங்களின் கருணை  : தாகங்கள் தீர்க்கிறது.

 

5. தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?


  • கிழக்கு – கொண்டல்
  • மேற்கு  - கோடை
  • வடக்கு – வாடை
  • தெற்கு – தென்றல்

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post