பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 2
மொழியோடு விளையாடு
இளந்தமிழ் வழிகாட்டி
______________________________________________________________________________________________________
சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க
முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும். |
நறுமணம் |
பழைமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும் |
புதுமை |
இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை. |
காற்று |
நான்கெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும். |
விண்மீன் |
ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம் |
காடு |
நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை
எடுத்தெழுதுக.
1. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது.வானம் இருண்டது.வாடைக் காற்று வீசியது. -
காற்றின் பாடல்
2. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது ; அச்செடியை வரவேற்கும்
விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன. - மொட்டின் வருகை,
3. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல் ; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து
நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று
மலர்களில் அமர்கின்றன. - மிதக்கும் வாசம்
4. இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின்
இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும் ; கசகசத்த
உயிரினங்கள். - உயிர்ப்பின் ஏக்கம்
5. நின்று விட்ட மழை தரும் குளிர் ; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும்
மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம். - நீரின் சிலிர்ப்பு
6. குயில்களின் கூவலிசை புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும், இலைகளின்
அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம். - வனத்தின் நடனம்
( வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின் ஏக்கம், நீரின் சிலிர்ப்பு)
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி காற்று என் தேவையை பற்றி எழுது என்றது மனிதன் என் தவிப்பைப் பற்றி எழுது என்றான் நான் எழுதுகிறேன் காற்றே நம் சுவாசம் என்று |
|
செயல் திட்டம்
தூய்மையான காற்றைப் பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து
எழுதுக.
Ø மரங்களை வளர்க்க வேண்டும்.
Ø காடுகளை அழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
Ø காடுகளைப் பாதுகாக்க வேண்டும்.
Ø தொழிற்சாலையிலிருந்து வரும் புகைகளைக் கட்டுப்படுத்த
வேண்டும்.
Ø குப்பைகள், நெகிழிகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அகராதியில் காண்க:-
அகன்ற தீபம் |
|
ஆர்கலி |
கடல்,மழை |
கட்புள் |
விழித்திருக்கும் பறவை |
கொடுவாய் |
பழிச்சொல்,வாளின் வளைந்த வாய் |
திருவில் |
வானவில் |
நிற்க அதற்குத்
தக
வானொலி அறிவிப்பு....
புதிய புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவில் மையம்
கொண்டுள்ளது.இன்று இரவு சென்னைக்கும்
நெல்லூருக்கும் இடையே கரையைக்
கடக்கும் என்று சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
மேற்கண்ட அறிவிப்பைக்
கேட்ட நீங்கள்,உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும்
காப்பாற்றும் வகையில்
செய்யும் செயல்களை வரிசைப்படுத்துக.
Ø தேவையான உணவுப்பொருட்களைப் பாதுகாப்பான இடத்தில்
வைத்துக்கொள்வேன்.
Ø குடிநீரைச்
சேமித்து வைத்துக்கொள்வேன்.
Ø உணவைச் சிக்கனமாக
பயன்படுத்துவேன்.
Ø நீரைச் சிக்கனமாகப்
பயன்படுத்துவேன்.
Ø வானொலியில்
தரும் தகவல்களைக் கேட்டு, அதன்படி
நடப்பேன்.
படிப்போம்; பயன்படுத்துவோம்
புயல் |
|
Tornado |
சூறாவளி |
Tempest |
பெருங்காற்று |
LandBreeze |
நிலக்காற்று |
Sea Breeze |
கடற்காற்று |
Whirlwind |
சுழல்காற்று |
அறிவை விரிவு செய்
குயில் பாட்டு |
பாரதியார் |
அதோ அந்தப் பறவை
போல |
ச. முகமது அலி |
உலகின் மிகச் சிறிய
தவளை |
எஸ்.இராமகிருஷ்ணன் |
பணி வாய்ப்பு தன் விவரப் பட்டியல் நிரப்புதல்
1. பெயர் : இரா.கனிஷ்
2. பாலினம் : ஆண்
3. பிறந்த நாள் மற்றும் வயது : 04-12-2000 - 25
4. தேசிய இனம் : இந்தியன்
5. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் : வெ.ராமகிருஷ்ணன்
6. வீட்டு முகவரி : 99/1,ஆசிரியர் காலணி,
தாதகாப்பட்டி, சேலம் -
636006
7. தொலை பேசி / அலைபேசி எண் : 866&&&&&&&
8. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் : 490
9. தாய்மொழி : தமிழ்
10. பயின்ற மொழிகள் : தமிழ், ஆங்கிலம்
11. தட்டச்சு : தமிழ், ஆங்கிலம் – மேல்நிலை
12. கணினி : எம்.சி.ஏ
மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் உண்மையென உறுதி கூறுகிறேன். தங்கள்
நிறுவனத்தில் ____கணினி பயிற்றுநர்____ பணியினைத் தந்தால் என் பணியைச் சிறப்பாகவும்
உண்மையாகவும் செய்வேன் என உறுதியளிக்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள ,
இரா.கனிஷ்.
உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி
பொதுநூலத்துறை இயக்குநர் அவர்களுக்குக்
கடிதம் வரைக.
அனுப்புநர்
செ.தமிழரசன்,
50, அன்னை இல்லம்,
காந்தி தெரு, பூம்பாறை,
திண்டுக்கல் மாவட்டம் –
625001.
பெறுநர்
பொது நூலக இயக்குநர் அவர்கள்,
தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,
சென்னை – 600 002.
ஐயா,
பொருள் : நூலக வசதி வேண்டுதல் – சார்பு
வணக்கம். எங்கள் கிராமத்தில் 1000 குடும்பங்களும், 2800 மக்களும் வசித்து
வருகின்றனர். எங்கள் கிராமத்தில் உயர்கல்வி முடித்து அரசு போட்டித் தேர்வுகளுக்கு
படிப்பவர்கள் அதிகமானோர் உள்ளனர். தேர்விற்கு படிப்பதற்கு எங்கள் ஊரில் நூலகம் இல்லை.
எனவே எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்திட ஆவன செய்யுமாறு தங்களைப்
பணிவுடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
தங்கள்
உண்மையுள்ள,
உறைமேல் முகவரி
பெறுநர்
பொது நூலக இயக்குநர் அவர்கள்,
தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,
சென்னை – 600 002.