10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-1-MOZHIYAI ALVOM

   

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 1

மொழியை ஆள்வோம்

______________________________________________________________________________________________________

மொழி பெயர்ப்பு

1.If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela

விடை : ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறதுநெல்சன் மண்டேலா

2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown

விடை: மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும்ரீடா மேக் ப்ரெளன்

சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக

தேணிலே ஊரிய செந்தமிழின்சுவை

தேரும் சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும்நிதம்

ஓதி யுனர்ந்தின் புருவோமே

 கவிமணி தேசிக விநாயகனார்

 

தேனிலே ஊறிய செந்தமிழின்சுவை

தேறும் சிலப்பதி காமதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும்நிதம்

ஓதி யுர்ந்தின் புறுவோமே

 கவிமணி தேசிக விநாயகனார்

 

கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

( குவியல், குலை,மந்தை,கட்டு )  

சொல்

கூட்டப்பெயர்

சொல்

கூட்டப்பெயர்

கல்

கற்குவியல்

புல்

புற்கட்டு

பழம்

பழக்குலை

ஆடு

ஆட்டுமந்தை

 

வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.

1.கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார்.அவரை அழைத்து வாருங்கள்.

விடை: கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.

2. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

விடை: ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3. நேற்று என்னைச் சந்தித்தார்.அவர் என் நண்பர்.

விடை: நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

4.பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்.

விடை: பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய  வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.

1. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப் போல,இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.

விடை:       பூமியில் வாழும் மானிடர்களில் சிலர் பழமிருக்கக் காய் உண்ணுதலைப் போல,இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.

2. வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.

விடை:       வள்ளல் குமணன் ஏழ்மையால் வாடிவந்த கவிஞனுக்குத் தனது தலையைத் தந்து மங்காப் பாராட்டுப் பெற்றான்.

3. நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு,அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.

விடை:          நளனும் அவனது மனைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு,அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயில் போல மகிழ்ச்சி கொண்டனர்.

4. சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.

விடை:       பூங்காவில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேன் உண்டன.

5. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

விடை:       ஆவைப்போல் அமைதியும் வேங்கைபோல் வீரமும் களிற்றைப் போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

கட்டுரை எழுதுக

குமரிக் கடல்முனையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர்

திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில் சேர்

கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி

பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி

அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்தாப் புலவர்கள்.

இக்கருத்தைக் கருவாகக் கொண்டு ‘ சான்றோர் வளர்த்த தமிழ் ‘ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

 சான்றோர் வளர்த்த தமிழ்

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

தமிழின் தொன்மை

சான்றோர்களின் தமிழ்ப்பணி

தமிழின் சிறப்பு

முடிவுரை

முன்னுரை:

குமரிக் கடல்முனையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர்

திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில் சேர்

கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி

பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி

அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்தாப் புலவர்கள். இக்கருத்தை கருவாகக் கொண்டு

சான்றோர் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரையைக் காண்போம்.

தமிழின் தொன்மை:

v  தமிழின் தொன்மையைக் கருதி கம்பர் என்றுமுள தென்தமிழ் என்றார்.

v  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்.

சான்றோர்களின் தமிழ்ப்பணி:

v  ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார்.

v  வீரமாமுனிவர் தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார்

v  தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

தமிழின் சிறப்புகள்:

v  தமிழ் இனிமையான மொழி. பல இலக்கிய, இலக்கணங்களைக் கொண்ட மொழி.

v  இயல், இசை, நாடகம் என முத்தமிழ் உடையது.

v  தமிழ் மூன்று சங்கங்களைக் கண்டு வளர்ந்தது.

முடிவுரை:

     குமரிக் கடல்முனையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்தாப் புலவர்கள். இக்கருத்தை கருவாகக் கொண்டு சான்றோர் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரையைக் கண்டோம்.

கொடுக்கப்பட்டுள்ள பாடலைப் படித்து நயம் பாராட்டுக

( கவிதையில் உள்ள திரண்ட கருத்து, பொருள் நயம், சொல்நயம், சந்த நயம், தொடை நயம், அணி நயம் ஆகியவை இடம் பெற வேண்டும். )

தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே

          தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே

ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

          உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே

வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே

          மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே

தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே

          தழைத்தினி தோங்குவதாய் தண்டமிழ் மொழியே                         -கா.நமச்சிவாயர்

 

திரண்ட கருத்து :

தமிழ் தேனைவிட இனிமையானது. தென்னாடு பொருள் கொள்கிறது. உடலில் ஒளிவிடும் உயர் மொழி. உணர்வுக்கு உணர்வாய் விளங்குவது.வானத்தை விட உயர்ந்த வண்டமிழ் மொழியே. கண்களாக விளங்கும் மொழி.தானாகவே சிறப்புற்று விளங்குவது. இனியும் தழைத்தோங்குவது.

பொருள் நயம் :

தமிழ்மொழியின் சிறப்புகளை மிகவும்  உயர்வாகக் கூறியுள்ளார். இரு கண்களாக

விளங்குகிறது என உயர்வுபடக் கூறியுள்ளார்.

சொல் நயம் :

        தேன், ஊன், வான் ஆகியவற்றை விட தமிழ்மொழி சிறப்பு வாய்ந்தது என பொருள்

நயம் உள்ளபடி கவிதையின் ஆசிரியர் எழுதியுள்ளார்.

சந்த நயம் :

        இந்த கவிதை இனிய சந்த நயத்தில் பாடும் படி அகவலோசையில் அமைந்துள்ளது.

மோனை நயம் :

தேனினும் – தென்னாடு  னினும் – ணர்வினும் ( சீர் மோனை )

எதுகை நயம் :

தேனினும்னினும்    வானினும்தானி ( அடி எதுகை )

இயைபு நயம் :      

மொழியே மொழியே

அணி நயம் :

தமிழை மிக உயர்வாக கூறியுள்ளதால் உயர்வு நவிற்சி அணி வந்துள்ளது.


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post