6th-tamil-2nd term sa- exam - 2024 - model question -1

 

மாதிரி இரண்டாம் பருவம் – தொகுத்தறித் தேர்வு-1 – 2024

6 -ஆம் வகுப்பு                              தமிழ்                                         

நேரம் : 2.00 மணி                                                                    மதிப்பெண் : 60

பிரிவு - I

அ. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                       8×1=8

1. பிறரிடம் நான் _______ பேசுவேன்

அ) கடுஞ்சொல்                 ஆ) இன்சொல்        இ) வன்சொல்         ஈ) கொடுஞ்சொல்

2. போர்க்களத்தில் வெளிப்படும் குணம்----------

அ) மகிழ்ச்சி ஆ) துன்பம் இ) வீரம்       ஈ) அழுகை

3. வீட்டுப் பயன்பாட்டிற்கு பொருள் வாங்குவோர்____________

அ) நுகர்வோர்                    ஆ) தொழிலாளி                இ) முதலீட்டாளர்     ஈ) நெசவாளி

4. நானிலம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______________

அ) நா+னிலம்                     ஆ) நான்கு + நிலம்            இ) நா + நிலம்          ஈ) நான் + நிலம்

5. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண _____________ தரும்.

அ) அயர்வு   ஆ) கனவு    இ) துன்பம்   ஈ) சோர்வு

6. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் …………………

அ) மறைந்த          ஆ) நிறைந்த         இ) குறைந்த         ஈ) தோன்றிய

7. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது --------- ஆகும்.

அ) வம்பு       ஆ) அமைதி          இ) அடக்கம்           ஈ) பொறை

8. நிலையான செல்வம்________________

அ) தங்கம்                         ஆ) பணம்               இ) ஊக்கம்             ஈ) ஏக்கம்

ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக                                                                 3×1=3

9. . காமராசரைக் கல்விகண் திறந்தவர் என மனதாரப் பாராட்டியவர் _____________

10. மாணவர் பிறர்__________ நடக்கக் கூடாது.

11. . விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _________ கட்டுவர்.

இ) பொருத்துக.                                                                                      4×1=4

12. விடிவெள்ளி      -        பஞ்சுமெத்தை

13. மணல்               -        ஊஞ்சல்

14. புயல்                  -        போர்வை

15. பனிமூட்டம்        -        விளக்கு

ஈ) எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளி:-                                    6×2=12

16. போகி பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

17. சிறு வணிகப் பொருட்கள் யாவை?

18. நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது?

19. இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் ஊக்கம்

அசைவுஇலா உடையான் உழை.

20. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?

21. தமிழன் எதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்?

22. ஆக்கம் யாரிடம் வழிகேட்டு செல்லும்?

உ) எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளி:-                                 3×3=9

23. ஆசாரக் கோவை கூறும் எட்டு வித்துக்கள் யாவை?

24. தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை எவ்வாறு உருவாக்கினான்?

25. நாட்டுப்புற இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்கள் என்று கூறக் காரணம் என்ன?

26. காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?

27. பழந்தமிழர் ஏற்றுமதி இறக்குமதி செய்த பொருள்கள் யாவை?

ஊ. அடிமாறாமல் எழுதுக                                                                           4+2=6

28.” மன்னனும்“ எனத் தொடங்கும் பாடலை எழுதுக. (அல்லது )

      “ பாயும்புயல்” எனத் தொடங்கும் நாட்டுப்புறப் பாடலை எழுதுக.

29. சொல்……என முடியும் திருக்குறளை எழுதுக.

எ. ஏதேனும் ஒன்றனுக்கு  விடையளி:-                                                                 1×7=7

30. அ) அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப்  சுருக்கி எழுதுக ( அல்லது )

ஆ) உழைப்பே மூலதனம் என்ற கதையை சுருக்கி எழுதுக.

ஏ) ஏதேனும் ஒன்றனுக்கு  விடையளி:-                                                                  1×7=7

31. பிறந்த நாள் பரிசு அனுப்பிய மாமாவுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுக  ( அல்லது )

32. காமராசர் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

ஐ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                      4×1=4

33.  அந்த, இந்த என்னும் சுட்டுச்சொற்களை அமைத்துத் தொடர்கள் எழுதுக.

          1. சட்டை என்னுடையது.  2.  வழியே என் வீட்டிற்குச் செல்லலாம்

34. பின் வரும் சொற்களைத் திருத்தி எழுதுக

          அ) தெண்றல்          ஆ) நன்ரி.

35. கலைச்சொல் தருக.

          அ) Education          ஆ) Sculptures

36. பின்வரும் நவமணிகளை அகரவரிசைப்படுத்தி எழுதுக.

 நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து, புஷ்பராகம், மரகதம்


1 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post