7th-tamil-2nd term - sa - exam - 2024 - model question -1

 

இரண்டாம் பருவம் – தொகுத்தறித் தேர்வு – 2024

7 -ஆம் வகுப்பு                              தமிழ்                                         

நேரம் : 2.00 மணி                                                                    மதிப்பெண் : 60

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:-                                                   5×1=5

1. கல்வியைப் போல் _____ செல்லாத செல்வம் வேறில்லை.

அ) விலையில்லாத ஆ) கேடில்லாத        இ) உயர்வில்லாத     ஈ) தவறில்லாத

2. கல்வியில்லாத நாடு ________ வீடு.

அ) விளக்கில்லாத    ஆ) பொருளில்லாத    இ) கதவில்லாத              ஈ) வாசலில்லாத

3. “ ஏறப் பரியாகும் “ என்னும் தொடரில் “பரி” என்பதன் பொருள்__________

அ) யானை              ஆ) குதிரை            இ) மான்       ஈ) மாடு

4. பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர்__________

அ) ஏழுத்து              ஆ) பாடு                    இ) படித்தல்           ஈ) நடி

5. தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம்_________ இருக்கக் கூடாது.

அ) சோம்பல்            ஆ) சுறுசுறுப்பு         இ) ஏழ்மை    ஈ) செல்வம்

ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக:-                                                                        5×1=5

6.  நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை __________ஆகும்.

7. மயிலும் மானும் வனத்திற்கு _________ தருகின்றன.

8. குகை ஓவியங்களில் வணணம் தீட்ட பயன்பட்ட பொருள்களில் ஒன்று _______.

9. மிளகாய் வற்றலின் _________ தும்மலை வரவழைக்கும்..

10. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது _____________

இ. பொருத்துக:-                                                                                                      4×1=4

1. வங்கம்                        பகல்

2. நீகான்                 -        கப்பல்

3. எல்                    -        கலங்கரை விளக்கம்

4. மாட ஒள்ளெரி      -        நாவாய் ஓட்டுபவன்

ஈ. ஏவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி                                                 6×2=12

15. ஓவியங்களின் வகைகள் யாவை?

16. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

17. நாவாயின் தோற்றம் எவ்வாறு இருந்ததாக அகநானூறு கூறுகிறது?

18. பாரதிதாசனின் மனத்தைக் கவர முயன்ற இயற்கைப் பொருட்கள் யாவை?

19. நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?

20. கல்விச்செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.

21. ஓரெழுத்து ஒருமொழி என்றால் என்ன?

22. தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை யாவை?

உ) எவையேனும்  இரண்டு  மட்டும் விடையளி                                                      2×3=6

23 கேலிச்சித்திரம் என்றால் என்ன?

24. விகாரம் என்பது யாது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

25. சிற்பங்களும் ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?

26. கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு எவ்வாறு விளக்குகிறது?

ஊ) அடிமாறாமல் எழுதுக                                                                          2+4=6

27.  ‘ இழுக்கு ‘ என முடியும்  குறளை எழுதுக.

28. அ) ‘ வைப்புழிக் ‘ எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக. ( அல்லது )

      ஆ) ‘ வானம் ஊன்றிய ‘ எனத் தொடங்கும் பாடலை எழுதுக.

எ) கடிதம் எழுதுக.                                                                                   1×5=5

29. உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத் தர வேண்டி நூலக ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

ஏ)  எவையேனும் ஒன்றனுக்கு விடையளி                                                        1×7=7

30. அ) ) பயணங்கள் பலவகை : முன்னுரை – பயணத்தின் தேவை – தரைவழிப் பயணம் – கடல்வழிப் பயணம் – வான்வழிப் பயணம் - முடிவுரை    ( அல்லது )

      ஆ) நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால், வள்ளுவர் கோட்டம் / திருவள்ளுவர் சிலை இடத்தைப் பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள்?

ஐ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி.                                                      5×2=10

31. இடைச்சொல் ‘ ஐ ‘ சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக.

          அ) வீடு கட்டினான்            ஆ) புல் தின்றது

32. பின் வரும் சொற்களை இரு பொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக..

          ஆறு

33. . கலைச்சொல் தருக:-

          அ) MODREN ART      ஆ) MORAL

34. பின்வரும் தொடர்களில் மூவிடப் பெயர்களை அடிக்கோடிடுக. அவற்றை வகைப்படுத்துக.

          உங்களோடு நானும் உணவு உண்ணலாமா?

35. சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக. ( நீ, அவர்கள், உன் )

          அ) ____________ வந்து கொண்டு இருக்கிறார்கள்.

          ஆ) ___________ என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?

 

CLICK HERE

 

 


1 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post