8th-tamil-half yearly exam - 2024 - model question -1


மாதிரி அரையாண்டுத் தேர்வு-1- 2024

 மொழிப்பாடம் – தமிழ்

வகுப்பு : 8

நேரம் :  2.30 மணி                                                                    மதிப்பெண் : 100

பகுதி – I

I ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                          10×1=10

1. பள்ளிக்குச் சென்று கல்வி  _____ சிறப்பு.

அ) பயிலுதல்          ஆ) பார்த்தல்           இ) கேட்டல்            ஈ) பாடுதல்

2. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____.

அ) இ,        ஆ) உ,              இ) எ,                  ஈ) அ,

3. சமையலறையில் செலவிடும் நேரம் ________ செலவிடும் நேரமாகும்.

அ) சுவைக்காக        ஆ) சிக்கனத்திற்காக          இ) நல்வாழ்வுக்காக           ஈ) உணவுக்காக

4. வெங்கரி – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ.வெம்+கரி           ஆ. வெம்மை + கரி            இ. வெண் + கரி                 ஈ. வெங் + கரி

5. . ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் _____.

அ) தொல்காப்பியம்    ஆ.அகநானூறு             இ. புறநானூறு                        ஈ) சிலப்பதிகாரம்

6. இந்த-------முழுவதும் போற்றும்படி வாழவதே சிறந்த வாழ்வு.

அ) வையம்   ஆ) வானம்  ) ஆழி   ஈ) கானகம்

7. விகாரப் புணர்ச்சி _____ வகைப்படும்.

அ) 3                      ஆ)          இ) 2                      ஈ) ஐந்து

8. கற்றவருக்கு அழகு தருவது ________.

அ) தங்கம்               ஆ) வெள்ளி            இ) வைரம்              ஈ) கல்வி

9. புகழாலும் பழியாலும் அறியப்படுவது _______

அ. அடக்கமுடைமை       ஆ. நாணுடைமை   இ. நடுவுநிலைமை         ஈ. பொருளுடைமை

10. கண்ணா வா! என்பத்  _____ த் தொடர்

அ) எழுவாய்            ஆ) விளி                இ) வேற்றுமை                  ஈ) வினைமுற்று

II) கோடிட்ட இடங்களை நிரப்புக:-                                                                   5×1=5

11. மாங்கனி நகரம் – என அழைக்கப்படும் நகரம் ______.

12. கலப்பில்  _____ உண்டென்பது இயற்கை நுட்பம்.

13. ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றஇடம் _____

14.மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும்

15. நீலகேசி கூறும் நோயின் வகைகள் ___________.

III) பொருத்துக:-                                                                                    4×1=4

16. யாணர்                                   – பாரியினது தேர்

17. ஆறாம் வேற்றுமை                   - தலையால் வணங்கினான்

18. இயற்கை ஓவியம்                     - புது வருவாய்

19. மூன்றாம் வேற்றுமை               - பத்துப்பாட்டு

பகுதி – II

IV) அடிபிறழாமல் எழுதுக:-                                                                        3 + 2 = 5

20. அ) “ வாழ்க நிரந்தரம்____ எனத் தொடங்கும்பாடலை அடிமாறாமல் எழுதுக. ( அல்லது )

ஆ) “கற்றோருக்கு “ எனத் தொடங்கும்  பாடலை அடிமாறாமல் எழுதுக.

21, “ விடல் “  என முடியும் திருக்குறளை எழுதுக

பகுதி – III

V) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                          5×2=10

22) கலிங்கவீரர்கள் எவ்வாறு அஞ்சி ஓடினர்?

23. பகத்சிங் கண்ட கனவு யாது?

24. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?

25. பகைவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை யாது?

26. அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகளாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?

27. பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?

28.  மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?

29. தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?

VI) எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                             4×2=8

30. தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?

31. தமிழ் எண்களை எழுதுக.

அ) உலக இயற்கை நாள் அக்டோபர் 3 -___  ஆ) . உலக ஈர நில நாள் பிப்ரவரி 2- ___

32. முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.

33. மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?

34. இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

35. கலைச்சொல் தருக: அ) dyeing           ஆ) victory

VII) எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                3×3=9

36. மூங்கிலால் செய்யப்படும் பொருட்கள் குறித்து எழுதுக.

37. எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.

38. ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?

39. முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.

40. பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?

41. நோயின் வகைகள், அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?

பகுதி – IV

VIII) அனைத்து வினாக்களுக்கும்  விடையளிக்கவும்.                                                  5×5=25

42. அ) நோய்கள் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை? ( அல்லது )

ஆ) நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

43. அ) விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.  ( அல்லது )

ஆ) உங்கள் பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரை அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையருக்கு விண்ணப்பம் வரைக.

44. ரியான இணைச்சொற்களை இட்டு நிரப்புக.

(மேடுபள்ளம், ஈடுஇணை, கல்விகேள்வி, போற்றிப்புகழப்பட, வாழ்வுதாழ்வு, ஆடிஅசைந்து )

1. சான்றோர் எனப்படுபவர் __________களில் சிறந்தவர் ஆவர்.

2. ஆற்று வெள்ளம் __________ பாராமல் ஓடியது.

3. இசைக்கலைஞர்கள் __________ வேண்டியவர்கள்.

4. தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு __________ இல்லை

5. திருவிழாவில் யானை  __________ வந்தது46. தொடரில் அமைத்து எழுதுக.

45. வட்டத்தில் உள்ள பழமொழிகள் ஐந்தினை கண்டு எழுதுக.



46. எனது பொறுப்புகள்,

          1. நாள் தோறும் ஒரு திருக்குறக் கற்பேன்

          2. அனைவரிடமும் அன்பு கொண்டு வாழ்வேன்.

இது போன்று ஐந்து பொறுப்புகளை எழுதுக.

                                                        பகுதி -V

IX) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                   3×8=24

47. அ)  எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.  ( அல்லது )

      ஆ) தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

48 . அ வெட்டுக்கிளியும் சருகு மானும் – கதையைச் சுருக்கி எழுதுக. ( அல்லது )

      ஆ. “அறிவுசால் ஔவையார் - என்னும் நாடகத்தைச் சிறுகதைவடிவில் சுருக்கமாக எழுதுக.

49. அ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

     முன்னுரை – நூலகத்தின் தேவை – வகைகள் – நூலகத்திலுள்ளவை – படிக்கும் முறை – முடிவுரை ( அல்லது )

      ஆ) கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக.

முன்னுரை – நாட்டின் வளர்ச்சி – இளைஞர்களின் சிறப்புகள் – இளைஞர்களின் பங்கு - முடிவுரை

.

 click here 

ஆக்கம்

திரு.வெ.ராமகிருஷ்ணன் M.A.,B.ED.,D.TED.,

சேலம்.

 

1 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post