.jpeg)
அனைவருக்கும் வணக்கம். வருகின்ற டிசம்பர் 9ம் தேதி 6 முதல் 12 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வு ஆரம்பமாக உள்ளது. மாணவர்கள் அனைவரும் தங்களை அரையாண்டுத் தேர்வுக்கு முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு வழிகாட்டுவதற்காக தமிழ்விதை வலைதளமானது தமிழ் பாடத்திற்கு ஒவ்வொரு வகுப்பிற்கும் 2 மாதிரி வினாத்தாளினை தயார் செய்து பதிவேற்றம் செய்து வருகிறோம். அதனைக் கொண்டு நீங்கள் நல்ல முறையில் பயிற்சி செய்து தமிழ் பாடத்தில் அதிக பட்ச மதிப்பெண் பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.
வினாத்தாளினை பதிவேற்றம் செய்வதோடு, அரையாண்டுத் தேர்வில் நாம் எவ்வாறு வினாத்தாளுக்கு விடையளிக்க வேண்டும், அரையாண்டுத் தேர்வுக்கு நம்மை எவ்வாறு தயார்ப்படுத்திக் கொள்வது என உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விடையளிக்க ஏதுவாக இணைய வகுப்பும் நடத்தி வருகிறோம்.
அந்த வகையில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தமிழ்ப்பாடத்தில் அரையாண்டுத் தேர்வில் சிறப்பாக செயல்படவும், நேர மேலாண்மையை எவ்வாறு கையாள்வது? வினாக்களுக்கு எவ்வாறு சிறந்த முறையில் விடையளித்து அதிகபட்ச மதிப்பெண் பெறுவது என்பது போன்ற உங்களின் எண்ணங்களுக்கு விடையளிக்க வருகிறோம்.
தவறாது இணையுங்கள் இணைய வகுப்பில்.
ZOOM மூலம் நான் உங்களிடம் இன்று ( 30-11-24 ) மாலை உரையாடப் போகிறேன். மாணவர்களே உங்களுக்கான சந்தேகங்கள் இருந்தால் எழுதி வையுங்கள். நான் அதற்கான பதில் கொடுக்கிறேன். நீங்கள் இந்த இணைய வகுப்பினை YOUTUBE LIVE STREAM மூலமாக பார்க்கலாம். மேலும் என்னோடு இணைந்து உரையாற்ற சந்தேகங்களை வினவ ZOOM APP மூலம் இணையுங்கள்.
உங்களுக்கான YOUTUBE LINK மற்றும் ZOOM ID AND PASSWORD LINK பெற கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்தவும்.