9th-tamil-half yearly exam - 2024 - model question -1

 

மாதிரி அரையாண்டுத் தேர்வு – 2024

வினாத்தாள் - 1

 மொழிப்பாடம் – தமிழ்

வகுப்பு : 9

நேரம் : 3.00 மணி                                                                             மதிப்பெண் : 100

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

குறிப்புகள் :  I ) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.

                II) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                                   15×1=15

1. மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

) மறுமை              ஆ) பூவரசு மரம்               ) வளம்       ) பெரிய

2 பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று ________

அ) மாமல்லபுரம்       ஆ) பிள்ளையார்பட்டி  இ) திரிபுவனவீரேசுவரம்      ஈ) தாடிக்கொம்பு

 3. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?

அ) நுகர்தல்             ஆ) தொடு உணர்வு இ) கேட்டல்             ஈ) காணல்

4. நாளிகேரம் என்பதன் பொருள் __________

) செல்வம்            ஆ) முயற்சி            ) தென்னை         ) ஆலமரம்

5. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?

அ) தேசியத் திறனறித் தேர்வு                                      ஆ) ஊரகத் திறனறித் தேர்வு

 இ) தேசியத் திறனறி, கல்வி உதவித் தொகைத் தேர்வு   ஈ) மூன்றும் சரி

6. ஐந்து சால்புகளில் இரண்டு _____

அ) வானமும் நாணமும்                ஆ) நாணமும் இணக்கமும்

 இ) இணக்கமும் சுணக்கமும்        ஈ) இணக்கமும் பிணக்கமும்

7. திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை _____

அ) விலங்கு உருவங்கள்              ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்

இ) தெய்வ உருவங்கள்                ஈ) நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்

8. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும் பகுபத உறுப்பு _____

அ) பகுதி       ஆ) விகுதி             இ) இடைநிலை       ஈ) சந்தி

9. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?

அ) வருக்கை - இருக்கை   ஆ) புள் – தாவரம்

 இ) அள்ளல் – சேறு           ஈ) மடிவு – தொடக்கம்

10. இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படுபவர்_____

அ) ஜான் பென்னி குவிக்    ஆ) சர் ஆர்தர் காட்டன்      

இ) பிரான்சிஸ் எல்லீஸ்                   ஈ) ஹோக்கன்      

11 ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?

அ) நுகர்தல்             ஆ) தொடு உணர்வு இ) கேட்டல்            ஈ) காணல்

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

தோரண வீதியும் தோம்அறு கோட்டியும்

பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்

பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்;

காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்

பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின்;

12. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ. தமிழ்ஒளியின் கவிதைகள்       ஆ. புறநானூறு  இ. பெரியபுராணம்   ஈ. மணிமேகலை

13. இப்பாடலை இயற்றியவர்___________

அ. குடபுலவியனார்   ஆ. தமிழ்ஒளி    இ. சீத்தலைச் சாத்தனார்           ஈ. சமண முனிவர்கள்

14. ‘ கமுகு ‘ என்பதன் பொருள்__________

அ. வாழை               ஆ. பாக்கு               இ. செல்வம்               ஈ. கல்வி

15. வாழையும் வஞ்சியும் என்பதன் இலக்கணக் குறிப்பு

அ. உவமை            ஆ. உருவகம் இ. எண்ணும்மை               ஈ. வினைமுற்று

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 )

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                           4×2=8

(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. கிரேக்க மொழியில் சீரோகிராஃபி  என்றால் உலர் எழுத்து முறை.

ஆ. எட்டுத் தொகை நூல்களில் ஒன்று புறநானூறு.

17. கூவல் என்று அழைக்கப்படுவது எது?

18. கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துகளை எழுதுக. .

19. கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?

20. பட்டிமண்டபம், பட்டிமன்றம் – இரண்டும் ஒன்றா? விளக்கம் தருக.

21.  விடல் – என முடியும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                        5×2=10

22. பிழையை நீக்கி எழுதுக.

அ) பவளவிழிதான் பரிசு உரியவள்

ஆ) நல்ல தமிழுக்கு எழுதுவோம்

23. . இடிகுரல் , பெருங்கடல் – இலக்கணக் குறிப்புத் தருக.

24. மரபுப் பிழையை நீக்கி எழுதுக:

          அ) தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார்

          ஆ) கொடியிலுள்ள மலரை எடுத்து வா

25. கலைச்சொல் தருக.

          அ) Download            ஆ)  Excavation

26. அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.

1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் _______ ( திகழ் )

2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் _________ ( கலந்துகொள் )

27. செய்வினையைச் செயபாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

சொல்லுக்குள் சொல் தேடுக.

அ) கடையெழுவள்ளல்கள்  ஆ) எடுப்பார்கைப்பிள்ளை

28. பகுபத உறுப்பிலக்கணம் தருக:- நெறிப்படுத்தினர்

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                         2×3=6

29. ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?

30. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

31. பத்தியைப் படித்து பதில் தருக

        ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நூலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் கன்னிமாரா நூலகம். இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்குரியது திருவனந்தபுரம் நடுவண் நூலகம்.

அ) ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் எது?

ஆ) உலகளவில் தமிழ்நூல்கள் அதிகமுள்ள நூலகம் எது?

இ) இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் எது?

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.          2×3=6

              ( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

32. விதைக்காமலே முளைக்கும் விதைகள் -இத்தொடரின்வழிச் சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்துகளை விளக்குக.

33. அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்?

34. அ) “ தித்திக்கும் “ எனத் தொடங்கும்  பாடலை அடிமாறாமல்  எழுதுக   (அல்லது )

      ஆ) “காடெல்லாம் ” எனத் தொடங்கும்   பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                  2×3=6

35. பகுபதம் என்றால் யாது? அதன் வகைகள் யாவை?

36. துணைவினையின் பண்புகள் யாவை?

37. தன்வினை, பிறவினை – எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.

                                                        பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                     5×5=25

38. அ) பெரிய புராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக. ( அல்லது )

ஆ) தூது அனுப்பத் தமிழே சிறந்தது – தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக

39. உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின் “ கால் முளைத்த கதைகள் “ என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

( அல்லது )

ஆ. உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ்- தமிழ் -ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.

 



41. மொழிபெயர்க்க:-

1. Every flower is a soul blossoming in nature – Gerard De Nerval

2. Sunset is still my favourite colour, and rainbow is second - Mattie Stepanek

3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau

4. Just living is not enough… One must have sunshine, freedom, and a little flower – Hans Christian Anderson

42. அ நயம் பாராட்டுக.

திங்கள்முடி சூடுமலை

தென்றல்விளை யாடுமலை

தங்குபுயல் சூழுமலை

தமிழ்முனிவன் வாழுமலை

அங்கயற்கண் அம்மைதிரு

அருள்சுரந்து பொழிவதெனப்

பொங்கருவி தூங்குமலை

பொதியமலை என்மலையே - குமரகுருபரர்    ( அல்லது )

ஆ) என் பொறுப்புகள்…

அ) தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

ஆ) ஆசைப்படும் பொருட்களை முயன்று உழைத்து அவற்றை என்னுடைய பணத்தில் வாங்குவேன்.  இது போன்று ஐந்து செயல்பாடுகளை எழுதுக

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கண்டு, வரிசைப்  படுத்தி முறையான பத்தியாக்குக.

 1. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கே தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 2. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.

 3. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.

4. தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                           3×8=24

43. அ. அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து எழுதுக.   ( அல்லது )

ஆ) தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.

44. அ 'தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.    ( அல்லது )

சொற்கள் புலப்படுத்தும் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை வளரும் செல்வம் என்னும் உரையாடலில் உள்ள செய்திகளை தொகுத்து எழுதுக.

45. அ) பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழா நிகழ்ச்சிகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.     ( அல்லது )

ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

முன்னுரை – சுற்றுச்சூழல் – தூய்மையின் அவசியம் – நீர் தூய்மை – நிலத் தூய்மை -  காற்றுத்தூய்மை – சூழல் பாதுகாப்பு நம் பொறுப்பு – முடிவுரை

 

 click here 

ஆக்கம்

திரு.வெ.ராமகிருஷ்ணன் M.A.,B.ED.,D.TED.,

அரசு உயர்நிலைப் பள்ளி,

வளைய செட்டிப்பட்டி.

 

 

2 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post