10th-tamil-half yearly exam - 2024 - model question -2

 

மாதிரி அரையாண்டு வினாத்தாள்-2 - 2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                   மதிப்பெண் : 100

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                             15×1=15

1. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்

அ) நாட்டைக் கைப்பற்றல்   ஆ) ஆநிரை கவர்தல்        

இ) வலிமையை நிலைநாட்டல்        ஈ) கோட்டையை முற்றுகையிடல்

2. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர்___________

அ) இகந்தால் என்மனம் இறந்துவிடாது   ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்  ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

3. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்கு பொருந்தும் வாய்ப்பாடு எது?

அ) கூவிளம் தேமா மலர்               ஆ) கூவிளம் புளிமா நாள்   

இ) தேமா புளிமா காசு          ஈ) புளிமா தேமா பிறப்பு

4. மெத்த வணிகலன் ‘ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது  __

அ) வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

ஈ) வணிக கப்பல்களும் அணிகலன்களும்

5. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்

) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

) அறிவியல் முன்னேற்றம்         ) வெளிநாட்டு முதலீடுகள்

6. மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ‘ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே –

அ) திருப்பதியும்,திருத்தணியும்                 ஆ) திருத்தணியும்,திருப்பதியும்

இ) திருப்பதியும் திருச்செந்தூரும்  ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்

7. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான் கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது. இத்தொடருக்கான வினா எது?

அ) தூக்கு மேடை நாடகத்தில் நடித்தவர் யார்?

ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ) தூக்கு மேடை என்பது திரைப்படமா? நாடகமா?

ஈ) யாருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது?

8. நீலச்சட்டை பேசினார் – இத்தொடரில் “ நீலச்சட்டை“என்னும் சொல்லுக்கான தொகையின் வகையைத் தேர்க.

அ) பண்புத்தொகை           ஆ) உவமைத்தொகை               

இ) அன்மொழித்தொகை    ஈ) உம்மைத்தொகை

9 பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள்________

அ) துலா       ஆ) சீலா        இ) குலா       ஈ) இலா

10 அருந்துணை என்பதைப் பிரித்தால் _______________

அ) அருமை + துணை                 ஆ) அரு + துணை  

இ) அருமை + இணை                 ஈ) அரு + இணை

11 சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருவூர்ப்பாக்கம் அமைந்துள்ள நகரம்.

) மதுரை             ) புகார்                ) வஞ்சி                ) முசிறி

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

“ செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின் பெருமை

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரை விரிக்கும்?

முத்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்

விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும் “

12) ‘ எந்தமிழ்நா’ என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:

அ) எந் + தமிழ் + நா            ஆ) எந்த + தமிழ் + நா        

இ) எம் + தமிழ் + நா            ஈ) எந்தம் + தமிழ் + நா

13) ‘ செந்தமிழ் ‘ என்பது:

அ) பண்புத்தொகை           ஆ) வினைத்தொகை        

இ) உவமைத்தொகை        ஈ) உம்மைத்தொகை

14. ‘ உள்ளுயிரே’ என்று கவிஞர் யாரை அழைக்கிறார்?

அ) தம் தாயை ஆ) தமிழ் மொழியை     இ) தாய் நாட்டை  ஈ) தம் குழந்தையை

15) “ வேறார் புகழுரையும் “ – இத்தொடரில் ‘ வேறார் ‘ என்பது.

அ) தமிழர்      ஆ) சான்றோர்    இ) வேற்று மொழியினர்  ஈ) புலவர்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                  4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. தமிழ்த்தென்றல் திரு.வி.க.போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் தமிழ்த்திரு. இரா. இளங்குமரனார்

ஆ. சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர் செய்குதம்பிப் பாவலர்

17. குறிப்பு வரைக : அவையம்

18. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

19. பூவின் நிலைகளை குறிக்கும் பெயர்களை எழுதுக.

20. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர்,உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

21.  பல்லார் – எனத் தொடங்கும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                               5×2=10

22. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? – ஆகிய தொடர்களில் எழுவாயுடன் பயனிலைகள் யாவை?

23. மரபுத் தொடரைப் பொருத்தமான  தொடரில் அமைத்து எழுதுக

அ) மனக்கோட்டை            ஆ) ஆறப்போடுதல்

24. தொடரில் விடுபட்ட சொற்கள் குறிக்கும் வண்ணங்களின் பெயர்களை எழுதுக.

கண்ணுக்கு குளுமையாக இருக்கும் ________ புல்வெளிகளில் கதிரவனின் _____ வெயில் பரவிக் கிடக்கிறது.

25. . சந்தக் கவிதையில் வந்த பிழையைத் திருத்துக.

     “ தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை

          தேரும் சிலப்பதி காறமதை

       ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்

          ஓதி யுனர்ந்தின் புருவோமே”

26. பகுபத உறுப்பிலக்கணம் தருக : அமர்ந்தான்

27. கலைச்சொல் தருக:-    அ. Emblem     ஆ)  Biotechnology

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக.

குறிப்பு :- எதிர்மறையாக மாற்றுக   அ) மீளாத்துயர்         ஆ) பார்த்த படம்

28. பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                2×3=6

29. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.

தமக்கே உரிய தனிநடையால் தமிழரை மேடை நாடகங்களின் பக்கம் ஈர்த்தார் கலைஞர். அவர் எழுதிய ‘ பழநியப்பன் ‘ என்னும் முதல் நாடகம், 1944 ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப் பூ உட்பட பல நாடகங்களை எழுதினார். தான் எழுதிய ‘ தூக்கு மேடை ‘ என்னும் நாடகத்தில் நடிகர் எம்.ஆர்.இராதாவின் வேண்டுகோளுக்காக மாணவர் தலைவராக கருணாநிதி நடித்தார். அந்நாடகத்திற்கான பாராட்டு விழாவில் தான் அவருக்கு ‘ கலைஞர்’ என்னும் சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது.

அ) கலைஞர் எழுதிய முதல் நாடகம் எது?

ஆ) கலைஞர் எழுதிய நாடகங்கள் யாவை?

இ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எந்த நாடகத்திற்கான பாராட்டு விழாவில் வழங்கப்பட்டது?

30. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் “ – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

31. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசைகளிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்….. முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றி பேசுகிறது.” இன்றைய சூழலில் நான் “ நீர்  தன்னைப் பற்றிப் பேசுவதாக உங்களுடைய கற்பனையில்  மூன்று கருத்துகளை எழுதுக

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                   2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. கம்பராமாயணம் – நூற்குறிப்பு வரைக

33. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்குக.

34. “ தூசும் துகிரும் “ எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல்  எழுதுக   (அல்லது )

“ செம்பொன் “ எனத் தொடங்கும் ‘ என முடியும்  பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                         2×3=6

35 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

     பண்பும் பயனும் அது – இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்கி எழுதுக.

36‘ கண்ணே கண்ணுறங்கு!

    காலையில் நீயெழும்பு!

    மாமழை பெய்கையிலே

    மாம்பூவே கண்ணுறங்கு!

    பாடினேன் தாலாட்டு!

    ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

37. உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்

     கல்லார் அறிவிலா தார்   -  இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.

- இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                     5×5=25

38. அ) தமிழர் மருத்துவ முறைக்கும், நவீன மருத்துவ முறைக்கும் உள்ள தொடர்பு குறித்து விவரித்து எழுதுக         ( அல்லது )

ஆ வள்ளுவம் சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

39. . பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.  ( அல்லது )

ஆ. உங்கள் பகுதியில் ஏற்பட்ட கடும்புயலில் சாய்ந்துவிட்ட மரங்களை அகற்றியும், பழுது அடைந்த சாலைகளைச் சீரமைத்தும், மின் கம்பங்களைச் சரி செய்தும் தருமாறு மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதுக

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.



41 அமுதன் தன் தந்தை மாணிக்கமணி அவர்களிடம் நூலகத்தில் உறுப்பினராக வேண்டினான். அவரும் அமுதனிடம் 200/- ரூபாயும், 15. காந்தி தெரு, குமாரபாளையம்,நீலகிரி மாவட்டம் என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார். கிளை நூலகத்திற்கு சென்ற அமுதனாக, தேர்வர் தன்னைக் கருதி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

42. அ) அரசால் நிறுவப்படும் கட்டடங்களிலும் சிலைகளிலும் நிறுவியர் பெயர்,நிறுவப்பட்ட காலம், நோக்கம் சார்ந்த பிற செய்திகளும் தாங்கிய கல்வெட்டுகளைப் பார்த்திருப்பீர்கள்.இவை  போண்று  நீவிர் கண்ட பல்வேறு பழமையான நினைவுச் சின்ங்களைப் பாதுகாத்துப் பராமரித்துக் காக்கும் வழிமுறைகள் ஐந்தினைப் பட்டியலிடுக..

  ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க:-

Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient Tamils.

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

          மேற்கு என்பதற்குக் குடக்கு என்னும் பெயருமுண்டு. மேற்கிலிருந்து வீசும் போது நான் கோடை எனப்படுகிறேன். மேற்கிலிருந்து அதிக வலிமையோடு வீசுகிறேன். வறண்ட நிலப்பகுதியில் இருந்து வீசுவதால் வெப்பக் காற்றாகிறேன். வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு. வடக்கிலிருந்து வீசும் போது நான் வாடை காற்று எனப்படுகிறேன். நான் பனிப் பகுதியிலிருந்து வீசுவதால் மிகவும் குளிர்ச்சியான ஊதைக் காற்று எனவும் அழைக்கப்படுகிறேன்.

(i). மேற்கிலிருந்து வீசும் காற்று யாது?

(ii). ஊதைக் காற்று என்று அழைப்பதேன்?

(iii). மேற்கு என்பதன் மற்றொரு பெயர் என்ன?

(iv) வாடை என்பது எத்திசையைக் குறிக்கிறது?

(v)  இப்பத்திக்கு ஏற்ற தலைப்பினை தருக.

 

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                   3×8=24

43. அ) காற்று பேசியதைப் போல, நிலம் பேசுவதாக எழுதுக.     ( அல்லது )

ஆ) கருணையன் தாய் மறைவுக்கு வீரமாமுனிவர் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.     

44. அ ) அழகிரிசாமியின்ஒருவன் இருக்கிறான்சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக.     ( அல்லது )

‘ பாய்ச்சல் ‘ கதையில் அழகு தன்னை மறந்து ஆடியதைப் போன்று உங்கள் தெருக்களில் நீங்கள் கண்டு மகிழ்ந்த பகல் வேடக் கலைஞரைக் குறித்து அழகுற விளக்கி எழுதுக.

45. அஅ) மனித நேயமிக்க ஆளுமை ஒருவருக்கு குறிப்புகளைப் பயன்படுத்தி நினைவிதழ் ஒன்று உருவாக்குக.

முன்னுரை – என் இளமைப் பருவம் – விடுதலைப் போராட்டத்தில் நான் – பொது நலமே தன்னலம் – எளிமையே அறம் – நாட்டின் முன்னேற்றமே நோக்கம் – எளியோரின் அன்பே சொத்து – முடிவுரை           ( அல்லது )

ஆ) அ) பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை / கட்டுரை / சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக

          குறிப்பு :  நூலின் தலைப்பு – நூலின் மையப்பொருள் – மொழிநடை- வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் – நூல் கட்டமைப்பு - சிறப்புக்கூறு – நூல் ஆசிரியர்.

1 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post