10th-tamil-half yearly exam - 2024 - model question -1

 


மாதிரி அரையாண்டு வினாத்தாள்-1 - 2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                   மதிப்பெண் : 100

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                             15×1=15


1. குயில்களின் கூவலிசை,புள்ளினங்களின் மேய்ச்சலும் இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்

அ) மொட்டின் வருகை                ஆ) வனத்தின் நடனம்

இ)  உயிர்ப்பின் ஏக்கம்                 ஈ) நீரின் சிலிர்ப்பு

2. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல்        -        1. மேற்கு

ஆ) கோடை            -        2. தெற்கு

இ) வாடை              -        3. கிழக்கு

ஈ) தென்றல்            -        4. வடக்கு

அ) 1,2,3,4               ஆ) 3,1,4,2              இ) 4,3,2,1               ஈ) 3,4,1,2

3. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது ___________________

அ) திருக்குறள்                 ஆ) புறநானூறு        இ) கம்பராமாயணம்  ஈ) சிலப்பதிகாரம்

4. கூற்று 1 : போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.

   கூற்று 2 : அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது

அ) கூற்று 1 சரி 2 தவறு               ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு

இ) கூற்று 1 தவறு 2 சரி                  ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி

5. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது ___

) இலையும்,சருகும்         ) தோகையும் சண்டும்    

) தாளும் ஓலையும்          ) சருகும் சண்டும்

6. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைத் தேர்க.

தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்ட் பிஸ்கட்டுகளை ஈக்வலாக வையுங்கள்.

அ) தங்க பிஸ்கட்டுகளைச் சரியாக ஆ) தங்கக் கட்டிகளை ஈக்வலாக

இ) தங்கக் கட்டிகளை ஈடாக                ஈ) தங்கக் கட்டிகளை முறையாக

7. மேன்மை தரும் அறம் என்பது______________________

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது           

ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது

ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

8. கட்டுரையைப் படித்து, ஆசிரியர் மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார் – இத்தொடரில் இடம் பெற்றுள்ள வேற்றுமை உருபுகள்

) ஐ, ஆல்             ) ஆல், கு           ) ஐ, கு                 ) இன், கு

9.பாடு இமிழ் பனிக்கடல் பருகி ‘ என்னும் முல்லைப் பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்           ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

இ) கடல் நீர் ஒலித்தல்                           ஈ) கடல் நீர் கொந்தளித்தல்

10. “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்        

இ) மருத்துவரிடம் நோயாளி          ஈ) நோயாளியிடம் மருத்துவர்

11 ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா? ‘ என்று நூலகரிடம் வினவுதல்

அ) அறிவினா          ஆ) கொளல் வினா      இ) அறியா வினா ஈ) ஏவல் வினா 

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

“ விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

கரு வளர் வானத்து இசையில் தோன்றி

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;

உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்

“12. இப்பாடல் இடம் பெற்ற மோனைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க

அ. கருவளர் – வானத்து                         ஆ. ஊழி - ஊழ்      

இ. விசும்பில் – கிளர்ந்த                         ஈ. இசையில் - ஊழியும்

13. இப்பாடல் இடம்பெற்ற நூல்

அ. முல்லைப்பாட்டு                     ஆ. பரிபாடல்

இ. நீதிவெண்பா                                   ஈ. திருக்குறள்

14. இப்பாடலின் ஆசிரியர் _______

அ. நப்பூதனார் ஆ. பூதஞ்சேந்தனார்   இ. கீரந்தையார்         ஈ. குலசேகராழ்வார்

15. விசும்பு,இசை,ஊழி – பாடலில் இச்சொற்கள் உணர்த்தும் பொருள்கள் முறையே______

அ. காற்று, முறை, கடல்                          ஆ. மேகம், இடி, ஆழம்

இ. வானம், பேரொலி, யுகம்                       ஈ. வானம், கற்று, காலம்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                  4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரமே திருக்குறளில் அமைந்திருக்கிறது.

ஆ. 1956ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது.

17. மெய்க்கீர்த்தி பாடுவதன் நோக்கம் யாது?

18. வசனகவிதை – குறிப்பு வரைக

19. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

20. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர்,உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

21.  தரும் – என முடியும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                               5×2=10

22. தண்ணீர் குடி,தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க..

23. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எடுத்துக்காட்டுடன் எழுதுக.


24. வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.
காமராசர் நகர் எங்கே இருக்கிறது?” “இந்த வழியாகச் செல்லுங்கள்.” – என்று விடையளிப்பது.
25. புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக

26. கொடுக்கப்பட்ட இரு சொற்களையும் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க

அ)  மலை – மாலை                     ஆ) விடு - வீடு

27. கலைச்சொல் தருக:-    அ. Emblem     ஆ)  Biotechnology 

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

கூட்டப்பெயர்களை எழுதுக :- அ) கல்      ஆ) பழம்

28. பின் வரும் தொடரில் உள்ள பிறமொழிச்சொற்களுக்குரிய தமிழ்ச் சொற்களை எழுதுக.

          நான் இந்த ஸ்கூலின் ஓல்டு ஸ்டூடண்ட்

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                2×3=6

29. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.

தமிழர்,போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.போரின் கொடுமையிலிருந்து பசு,பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

அ) போர் அறம் என்பது எதனைக் குறிக்கிறது?

ஆ) ஆவூர் மூழங்கிழாரின் போர் அறம் குறித்து குறிப்பிடுவது யாது?

இ) யாருக்கெல்லாம் தீங்கு வராத வண்ணம் போர் புரிய வேண்டும் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன?

30. ‘ புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது ‘இது போல் இளம் பயிர்வகை  மூன்றின் பெயர்களைத் தொடரில் அமைக்க.

31. . சங்க இலக்கியங்கள காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                   2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

33. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

34. “ அருளைப் பெருக்கி “ எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல்  எழுதுக

(அல்லது )

“ நவமணி “ எனத் தொடங்கி ‘ அழுவ போன்றே ‘ என முடியும்  பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                         2×3=6

35. வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

          கோலோடு நின்றான் இரவு

                இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

36. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது.வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது: தந்தை என்னிடம்,” இலச்சுமி கூப்பிடுகிறாள்,போய்ப் பார்” என்றார். “இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன்.துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து,”என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன்.என் தங்கை அங்கே வந்தாள்.அவளிடம்,” நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன்.அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.

இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.

37. கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக..

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                     5×5=25

38. அ) முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக  ( அல்லது )

பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடலின் நயத்தை விளக்குக.

39. மாநில அளவில் நடைபெற்ற “ மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்று பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.  ( அல்லது )

ஆ. பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.


41 வீட்டு எண் 14, வ.உ.சி தெரு, தஞ்சாவூரில் வசித்து வரும் மோகன் மகள் அனிதா தஞ்சாவூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் பாடப்பிரிவில் ஆங்கில வழியில் சேர விரும்புகிறார்.. தேர்வர் தன்னை அனிதாவாக கருதி கொடுக்கப்பட்ட படிவத்தை நிரப்புக.

42. அ) தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி; திறன் பேசியிலேயே  விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை; காணொளி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன். எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி. இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட நீங்கள் செய்யும் முயற்சிகளை பட்டியலிடுக.  ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க:-

The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா


பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல   காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்  தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

3. பெய்த மழைஇத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?

5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                   3×8=24

43. அ) தமிழின் சொல்வளம் பற்றியும், புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில்  பேசுவதற்கான  உரைக்குறிப்புகளை எழுதுக

( அல்லது )

ஆ) போராட்டக் கலைஞர் – பேச்சுக் கலைஞர் – நாடகக் கலைஞர் – திரைக் கலைஞர் – இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

44. அ அன்னமய்யா என்னும் பெயருக்கும், அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதைப் பகுதி கொண்டு விவரிக்க         ( அல்லது )

‘ கற்கை நன்றே கற்கை நன்றே

         பிச்சை புகினும் கற்கை நன்றே ‘

                   என்கிறது வெற்றிவேற்கை, மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றி உங்களின் கருத்துகளை விவரிக்கவும்

45. அ) குறிப்புகளைக் கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ் “ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

குறிப்புகள்: முன்னுரை – தமிழன்னையின் அணிகலன்கள் – தமிழ்ச்சான்றோர் – தமிழின் வளர்ச்சி – தமிழின் எதிர்காலம் – முடிவுரை              ( அல்லது )

ஆ) குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

மாணவன்கொக்கைப் போல,கோழியைப் போலஉப்பைப் போலஇருக்க வேண்டும்கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும்குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழிகண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும்ஆசிரியர் விளக்கம்மாணவன் மகிழ்ச்சி.

click here 

2 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post