9TH-TAMIL-2ND MID-TERM-2024-25 - QUESTION PAPER- 1

 

இரண்டாம் இடைத் தேர்வு – 2024

9 -ஆம் வகுப்பு                              தமிழ்                                          இயல் : 5 , 6

நேரம் : 1.30 மணி                                                                    மதிப்பெண் : 50

I) . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:-                                                   6×1=6

1. சரியான கூற்றினைத் தெரிவு செய்க.

 அ) ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை.

ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு.

 இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.

 1. , இ சரி; அ தவறு         2. , , சரி; ஆ தவறு

3. மூன்றும் சரி                  4. மூன்றும் தவறு

2. ’பொதுவர்கள் பொலிஉறப் போர்அடித்திடும்’ நிலப் பகுதி ____

அ) குறிஞ்சி   ஆ) நெய்தல் இ) முல்லை   ஈ) பாலை

3 . மரவேர் என்பது ________ புணர்ச்சி

அ) இயல்பு     ஆ) திரிதல்    இ) தோன்றல்          ஈ) கெடுதல்

4. திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை _____

அ) விலங்கு உருவங்கள்              ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்

இ) தெய்வ உருவங்கள்                ஈ) நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்

5. அவ்வை இல்லம் தொடங்கப்பட்ட ஆண்டு______

அ) 1929       ஆ) 1930      இ) 1931        ஈ) 1932

6. பல்லவர் காலச் சிற்பங்களுக்கு எடுத்துக்காட்டு_______

அ) மாமல்லபுரம்       ஆ) பிள்ளையார்பட்டி   இ) தஞ்சை பெரிய கோவில்        ஈ) திருநாதர் குன்று

பகுதி – 2 பிரிவு – 1

II) எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும்.                                              3×2=6

( வினா எண் 11 கட்டாய வினா )

7. தலைவியின் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது?

8. இசைத்தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?

9. சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?

10. இறக்கும் வரை உள்ள நோய் எது?

11. “ சுழன்றும் “ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                               3×2=6                     

12. இடிகுரல், பெருங்கடல் – இலக்கணக் குறிப்புத் தருக.

13.  புணர்ச்சி எத்தனை வகைப்படும்? அவை யாவை?

14. இடைச் சொற்களைக் கொண்டு தொடர்களை இணைக்க.

     . அலுவலர் வந்தார்; அனைவரும் பதற்றம் அடைந்தனர்.

ஆ. சுடர்க்கொடி பாடினாள்; மாலன் பாடினான்.

15. கலைச் சொல் தருக.

          அ)  Social Reformer                                ஆ) Treasury

16. மொழி பெயர்க்க :-

அ. Strengthen the body.                   ஆ. Love your food

பகுதி – 3 பிரிவு – 1

III) எவையேணும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                           3×3=9

17. குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.

18. மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளை குறிப்பிடுக.

19. . நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?

20. ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக.

21. கைபிடி, கைப்பிடி – சொற்களின் பொருள் வேறுபாடுகளையும் அவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக.

பிரிவு – 2

 அடிபிறழாமல் எழுதுக.                                                                                  1×3=3

22. பூவாது காய்க்கும் …….. எனத் தொடங்கும் சிறுபஞ்ச மூலம் பாடல் ( அல்லது )

     கல்லிடைப் பிறந்த…… எனத் தொடங்கும் இராவண காவியப் பாடல்

பகுதி – 4  

IV) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி.                                   2×4=8

23. பத்தியில் இடம்பெற்றுள்ள இயல்பு புணர்ச்சிகளையும் விகாரப் புணர்ச்சிகளையும் எடுத்தெழுதுக.

காஞ்சி கைலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் முழுவதும் சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது. அதேபோன்று காஞ்சி வைகுந்தப்பெ ருமாள் கோவிலிலும் பல்லவர்காலச் சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. இங்குத் தெய்வச்சிற்பங்கள் மட்டுமல்லாது பிற சிற்பங்களும் கோவில் உட்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர்காலக் குடைவரைக் கோவில்களின் நுழைவுவாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பதுபோன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன.

24. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


 

 

 

 

 




25.  என்னை மகிழச் செய்த பணிகள்…

          (எ.கா ) அ. இக்கட்டான நேரத்தில் தம்பிக்கு உதவியதற்காக அப்பாவிடம் பாராட்டுப் பெற்றேன்.

ஆ)___________________       இ)___________________

ஈ)___________________         உ)____________________

பகுதி – 5  

V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி.                                  2×6=12

26. நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்துச் செய்திகளை விவரிக்க.

27. தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.

28. உங்கள் பள்ளி நூலகத்திற்கு தமிழ் -தமிழ் – ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.


CLICK HERE TO GET PDF

CLICK HERE

 

 


1 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post