மாதிரி
இரண்டாம் இடைத் தேர்வு – 2024
10 -ஆம் வகுப்பு தமிழ் இயல் : 7,8,9
நேரம் :
1.30 மணி மதிப்பெண் : 50
அ. அனைத்து
வினாக்களுக்கும் விடையளி:- 5×1=5
1. ‘ தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக
இருந்த அரசன்’ என்னும் மெய்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்-
அ) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர் ஆ) மிகுந்த செல்வம் உடையவர்
இ) பண்பட்ட மனித நேயம் ஈ)
நெறியோடு நின்று காவல் காப்பவர்
2. தமிழினத்தை ஒன்றுப்படுத்தும் இலக்கியமாக மா.பொ.சி கருதியது
----
அ) திருக்குறள் ஆ) புறநானூறு
இ) கம்பராமாயணம்
ஈ) சிலப்பதிகாரம்
3. ’ வீட்டைத் துடைத்து சாயம் அடித்தல் ‘ – இவ்வடிகள்
குறிப்பிடுவது ---
அ) காலம் மாறுவதை ஆ)
வீட்டைத் துடைப்பதை
இ) இடையறாது அறப்பணி செய்தலை ஈ) வண்ணம் பூசுவதை
4. .”
நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமில்லை “ – யாருடைய வரிகள் இவை?
அ.
கம்பர் ஆ, இளங்கோ
இ. பாரதிதாசன் ஈ. கண்ணதாசன்
5. வாய்மையே மழைநீராக – இத்தொடரில்
வெளிப்படும் அணி ___
அ) உவமை ஆ)
தற்குறிப்பேற்றம் இ)
உருவகம் ஈ)
தீவகம்
ஆ. பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு
விடையளிக்க:- 4×1=4
பூக்கையைக் குவித்துப் பூவே
புரிவோடு காக்கென்று
அம்பூஞ்
சேக்கையைப் பரப்பி இங்கண்
திருந்திய அறத்தை
யாவும்
யாக்கையைப் பிணித்தென்று ஆக
இனிதிலுள் அடக்கி
வாய்ந்த
ஆக்கையை அடக்கி பூவோடு
அழுங்கணீர்
பொழிந்தான் மீதே
6. இப்பாடல் இடம் பெற்ற மோனைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க
அ.
பூக்கை – குவித்து ஆ.
சேக்கை - இங்கண்
இ.
யாக்கை – ஆக்கை ஈ.
பூக்கை - பூவே
7. இப்பாடல் இடம்பெற்ற நூல்
அ.
முல்லைப்பாட்டு ஆ. பரிபாடல் இ.
நீதிவெண்பா ஈ. தேம்பாவணி
8. இப்பாடலின் ஆசிரியர் _______
அ.
நப்பூதனார் ஆ. வீரமாமுனிவர் இ. கீரந்தையார் ஈ. குலசேகராழ்வார்
9. சேக்கை என்பதன் பொருள்_____
அ.
உடல் ஆ. மலர் இ.
படுக்கை ஈ.
காடு
இ. எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்க. 7×2=14
10. மெய்க்கீர்த்தி
பாடப்படுவதன் நோக்கம் யாது?
11.
பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர்,உமணர் – சிலப்பதிகாரம் காட்டும்
இவ்வணிகர்கள் யாவர்?
12. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
13. குறிப்பு வரைக:- அவையம்
14.
காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
15.
‘ கொள்வோர் கொள்க;குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை
உடம்பு தொடாது’
அ) அடியெதுகையை எடுத்தெழுதுக..
ஆ) இலக்கணக் குறிப்பு தருக:- கொள்க, குரைக்க
16.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும்
அது. – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?
17.
மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.
அ) மனக்கோட்டை ஆ) கண்ணும் கருத்தும்
18.
பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.
அ) வரப் போகிறேன் ஆ) இல்லாமல் இருக்கிறது
19.
கலைச்சொல் அறிக:- அ) Guild ஆ) Renaissance
ஈ.
மனப்பாடப் பகுதி 1×4=4
20. “ மாற்றம் “ எனத் தொடங்கும் காலக்கணிதப் பாடல்
உ) ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:- 2×3=6
21. “
தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
22.
வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை
– இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.
23
. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
ஊ) ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:- 2×5=10
24. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு
வந்தனை செய்வோம் “ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக்
கடிதம் எழுதுக.
25. கருணையன் தாய் மறைவுக்கு வீரமாமுனிவர் பூக்கள் போன்ற
உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
26. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
எ)
ஏதேனும் ஒன்றனுக்கு விரிவாக விடையளி 1×7=7
27.
அ) அழகிரிசாமியின் “ ஒருவன்
இருக்கிறான்
“ சிறுகதையில்
மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக. ( அல்லது )
ஆ)
நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின்
முன்னேற்றத்தில் மாணவர்பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் “
மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்
“ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
CLICK HERE TO GET PDF
Important question paper
ReplyDelete