8TH-TAMIL-2ND MID-TERM-2024-25 - QUESTION PAPER- 1

 

மாதிரி இரண்டாம் இடைத் தேர்வு – 2024

8 -ஆம் வகுப்பு                              தமிழ்                                  இயல் : 5,6  

நேரம் : 1.30 மணி                                                                    மதிப்பெண் : 50

I) . அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                       5×1=5

1. பாலாடை’ - இச்சொல்லுக்குரிய புணர்ச்சி _____

அ) இயல்பு     ஆ) தோன்றல்          இ) திரிதல்               ஈ) கெடுதல்  

2. மறைபொருளைக் காத்தல் ____________ எனப்படும்.

அ) சிறை                ஆ) அறை              இ) கறை                ஈ) நிறை

3 என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ________ பெருகிற்று

அ. காரி                  ஆ. ஓரி                   இ. வாரி        ஈ. பாரி

4. ஆன்பொருநை என அழைக்கப்படும் ஆறு____________

) காவிரி               ) பவானி             ) நொய்யல்           ) அமராவதி

5. முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்_____.

அ) முழவுதிர ஆ) முழவுதிரை      இ) முழவதிர           ) முழவுஅதிர

II).கோடிட்ட இடத்தை நிரப்புக :-                                                                    3×1=3

6. விகாரப் புணர்ச்சி _____ வகைப்படும்.

7. பின்னலாடை நகரமாக _ _ _ _ விளங்குகிறது.

8. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் _____.

III). பொருத்துக.                                                                                          4×1/2=2

9. மட்பாண்டம்         - தோன்றல் விகாரம்

10. மரவேர்               - இயல்புப் புணர்ச்சி

11. மணிமுடி             - கெடுதல் விகாரம்

12. கடைத்தெரு       - திரிதல் விகாரம்

IV).அடிமாறாமல் எழுதுக:-                                                                            3+2=5

13. “ ஆற்றுதல்  “ எனத் தொடங்கும் பாடறிந்து ஒழுகுதல் “  பாடலை எழுதுக.

14. அறிந்து – என முடியும் திருக்குறளை எழுதுக.

V). எவையேனும் ஐந்து  வினாக்களுக்கு மட்டும் விடையளி:-                                  5×2=10

15. முறை, பொறை என்பவற்றுக்குக் கலித்தொகைகூறும் விளக்கம் யாது?

16. பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை?

17. சிறந்தஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?

18. பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத் தேவையானது யாது?

19. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? அவை யாவை?

20. மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?

21. கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் யாவை?

VI). எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி.                                   2×3=6

22. தொகை நிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

23. கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?

24. திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?

VII). எவையேனும் இரண்டு வினாவிற்கு விடையளி:-                                             2×2=4

25. கலைச் சொற்களை எழுதுக: அ) FLUTE         ஆ) THREAD

26. சரியான இணைச்சொற்களை இட்டு நிரப்புக.

                   ( ஈடுஇணை, கல்விகேள்வி, மேடுபள்ளம்,ஆடியசைந்து )

          அ. சான்றோர் எனப்படுபவர் __________ களில் சிறந்தவர் ஆவர்.

ஆ. ஆற்று வெள்ளம் __________ பாராமல் ஓடியது.

27. பின்வரும் மரபுத்தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக

          அ) வாழையடி வாழை        ஆ) முதலைக்கண்ணீர்     

VIII). அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                        3×5=5

28. அ, கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம் குறித்து எழுதுக  அல்லது )

      ஆ. தமிழக கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.

29. அ) காற்றுக் கருவிகள் குறித்து செய்திகளைத் தொகுத்து எழுதுக  ( அல்லது )

    ஆ) கைவினைக்கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து     

           எழுதுக.

30. அ) இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணம்ப்பம் எழுதுக     (அல்லது )

      ஆ) காலம் உடன் வரும்' - கதையைச் சுருக்கி எழுதுக.

 

 

CLICK HERE TO GET PDF


CLICK HERE


2 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post