தமிழால் வாழும் நாம் !
தமிழுக்காகவே வாழ்வோம் !
தமிழகத் தமிழாசிரியர்
கழகம்.
பல்லவன் சாலை, வித்யா
நகர்,
சேலம் மாவட்டம்.
அன்புடையீர்,
01-09-2024
அன்று காஞ்சிபுரத்தில் தமிழகத் தமிழாசிரியர்
கழகத்தின் மாநிலச் செயற்குழு மற்றும் பொதுக் குழு நடைபெற்றது. அதில் சேலம் மாவட்டத்
தமிழகத் தமிழாசிரியர் கழகத்திற்கு மாவட்ட அளவில் தலைவர், செயலர், பொருளாளர் மற்றும்
மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள் பதவிக்கு புதிததாக தேர்ந்தெடுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட
அளவிலான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்வதற்கு திருவள்ளுவர் ஆண்டு 2055 புரட்டாசி
-1, வருகிற 17-09-2024 செவ்வாய் கிழமை காலை 10.30 மணிக்கு
சேலம் பல்லவன் சாலை, அண்ணா
நுழைவாயில், தமிழகத் தமிழாசிரியர் கழகத்தில்
தமிழ்த்திரு.ப.தமிழ்ச்செல்வன்-த.ஆ.அ.மே.நி.ப.மணியனூர், மாநில இணைச்
செயலாளர் த.த.ஆ.கழகம்,
தமிழ்த்திரு.க.சம்பத், த.ஆ, அ.உ.நி.ப.கொண்டப்ப நாயக்கன்பட்டி மாநிலத்
துணைத் தலைவர், த.த.ஆ.கழகம் அவர்கள் முன்னிலையில்
மாவட்டத் தலைவர், செயலாளர், பொருளாளர், அமைப்புச் செயலாளர், தேர்வுக்குழு செயலர், மற்றும்
மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிட விருப்பமுள்ள சேலம் மாவட்டத்
தமிழகத் தமிழாசிரியர் கழக உறுப்பினர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
அனைவரும் வருக!