10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 9 - DEMPAVANI

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      நவம்பர்

வாரம்              :        இரண்டாம் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 9

தலைப்பு          :      தேம்பாவணி


அறிமுகம்                   :

Ø  உனக்குத் தெரிந்த சமயங்களின் பெயர்களையும், அவற்றின் புனித நூல்களின் பெயர்களையும் கேட்டறிந்து அதன் மூலமாகப் பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø  ஓர் ஆளுமையை மையமிட்ட கருத்துகளைத் தொகுத்து முறைப்படுத்திச் சீர்மையுடன் இதழ் வடிவில் வெளிப்படுத்தும் திறன் பெறுதல்

 ஆசிரியர் குறிப்பு          :

Ø  பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

Ø  வீரமாமுனிவர் பற்றி அறிமுகம் செய்தல்

Ø  தேம்பாவணி பற்றி கூறல்

Ø  பாடல்களை சீர்ப்பிரித்து வாசித்துக் காட்டி, மாணவர்களையும் வாசிக்க வைத்தல்.

Ø  மனப்பாடப்பாடலை மனனம் செய்யும் திறன் வளர்த்தல்

கருத்துரு வரைபடம்              :

தேம்பாவணி

விளக்கம்    :

            தேம்பாவணி

·       சாதாரண உயிரினங்களின் துயரத்தைப் பகிர்ந்துக் கொள்ளும் மனிதம்

·       தேமாவணி – நூற் குறிப்பு

·       தேம்பா + அணி = தேம்பாவணி – வாடாத மாலை

·       தேன் + பா + அணி – தேம்பாவணி – தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு

·       ஆசிரியர் : வீரமாமுனிவர்

·       இயற் பெயர் : கான்சுடான்சு சோசப் பெசுகி

·       எழுதிய நூல்கள் : சதுரகராதி, தொன்னூல் விளக்கம், சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குரு கதைகள்,மொழிபெயர்ப்பு நூல்கள்

·       இஸ்மத் சன்னியாசி – தூய துறவி

·       கருணையன் தாயார் எலிசபெத் அவர்களுடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார்.

·       அச்சூழலில் அவரின் தாயார் இறந்து விட கருணையன் அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்கு கொள்கிறது

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  மாணவர்கள் சரளமாக வாசிக்க வைத்தல்

Ø  வீரமாமுனிவர் பற்றி அறிதல்

Ø  தேம்பாவணி பற்றி அறிதல்

Ø  பாடலினை சீர் பிரித்து வாசித்தல்

Ø  புதிய சொற்களுக்கான பொருள் அறிதல்

Ø  பாடலின் தொடை நயங்களை உணர்தல்

Ø  பாடலின் மையக்கருத்தினை அறிந்து வாழ்வியல் சூழலோடு ஒப்பிடல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  தேம்பாவணியை இயற்றியவர் யார்?

Ø  கருணையன் என்பவர் யார்?

                MOT :

Ø  கருணையன் எதற்காக வருந்துகிறார்?

Ø  எவையெல்லாம் அறியேன் என கருணையன் கூறுகிறார்?

                HOT :

Ø கருணையன் துன்பத்தை இயற்கை எவ்வாறு காணுகிறது என்பதனை தேம்பாவணி கூறுகிறது?

Ø மற்றவர்கள் இழப்பிற்கு நீங்கள் எவ்வாறு வருந்துவீர்கள்?

கற்றல் விளைவுகள்                  :         தேம்பாவணி

T1047 மனித மாண்புகளையும் விழுமியங்களையும் உட்பொருளாகக் கொண்ட பிற்காலக் காப்பிய இலக்கியத்தைப் படித்தல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post