www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஆகஸ்ட்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 6
தலைப்பு : அகப்பொருள் இலக்கணம்
அறிமுகம் :
Ø
மக்கள்
வாழும் நிலப்பகுதியினைக் குறிக்கும் படங்களைக் காட்டி ஆயத்தப்படுத்துதல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.
நோக்கம் :
Ø
தமிழரின்
அகப்பொருள் இலக்கணம் அறிதல், இயற்கையுடன் ஒன்றிணைந்த வாழ்க்கை முறைகளைப் புரிந்து கொள்ளுதல்.
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø அன்பின் ஐந்தினை பற்றிக்
கூறல்
Ø அகப்பொருள் கூறும்
முதற் பொருளை அன்றாட வாழ்வியலுடன் தொடர்புப்படுத்துதல்.
Ø ஆண்டின் கூறுகளைக்கூறி
அவற்றை முதற்பொருளோடு ஒப்பிடல்.
Ø நாளின் கூறுகளைக்கூறி அவற்றை முதற்பொருளோடு ஒப்பிடல்.
கருத்துரு வரைபடம் :
அகப்பொருள் இலக்கணம்
விளக்கம் :
அகப்பொருள் இலக்கணம்
o
முதற்
பொருள் – நிலம்,பொழுது
o
நிலம்
– குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை
o
பொழுது
– சிறு பொழுது, பெரும் பொழுது
o
பெரும்பொழுது
– ஓர் ஆண்டின் ஆறு கூறுகள்
o
சிறு
பொழுது – ஒரு நாளின் ஆறு கூறுகள்
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø மாணவர்கள்
பிழையின்றி வாசித்தல்
Ø சிறு
சிறு வாக்கியங்களை வாசித்தல்
Ø சீர்
பிரித்து வாசித்தல்
Ø இலக்கணத்தின் பொதுவான கூறுகளை அறிதல்
Ø அன்பின் ஐந்திணைகள் பற்றி அறிதல்
Ø பெரும்பொழுதின் கூறுகளை
அறிதல்
Ø சிறு பொழுதின் கூறுகளை
அறிதல்
Ø கருபொருள் பற்றியவற்றை
அட்டவணை வாயிலாக அறிதல்.
மதிப்பீடு :
LOT :
Ø ஐவகை
நிலங்கள் யாவை?
Ø முதற்பொருள்
என்பது ____________
MOT :
Ø பெரும்பொழுதின்
கூறுகள் யாவை?
Ø சிறு பொழுதின் கூறுகள் யாவை?
HOT
:
Ø திணையும்
அதற்குரிய பொழுதுகளையும் கூறுக.
Ø பண்டைத்
தமிழரின் திணைநிலை வாழ்க்கை முறையையும், இன்றைய தமிழரின் திணைநிலை வாழ்க்கை முறையையும்
ஒப்பிட்டுக் கூறுக
கற்றல் விளைவுகள் : அகப்பொருள் இலக்கணம்
T1032 தமிழரின் அகப்பொருள் இலக்கணத்தை அறிதலின்
வாயிலாக, இயற்கையுடன் ஒன்றியிருந்த பண்டைய மக்களின் வாழ்க்கைமுறையைப் புரிந்துகொள்ளுதல்.
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை