www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூன்
வாரம் : மூன்றாவது வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் -
2
தலைப்பு : தொகை நிலைத் தொடர்கள்
அறிமுகம் :
Ø
மாணவர்கள் அறிந்த தொகைச்
சொற்களை கரும்பலகையில் எழுதி அதன் விரியைக் கேட்டு ஆர்வமூட்டல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø தொகைநிலைகளின்
தன்மைக்கேற்பத் தொடர்களைப் புரிந்து கொண்டு பயன்படுத்துதல்.
Ø தொகைநிலைத் தொடர்களின் வகைகளை அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø தொகை என்பதனை கூறல்
Ø தொகைநிலைத் தொடர்களின் வகைகளை கூறல்
Ø ஒவ்வொரு தொகைநிலைத் தொடர்களின் உருபுகள் மறைந்து
வரும் விதம் கூறல்.
Ø தொகைநிலை தொடர்களை அறிந்து தொடர்களை பயன்படுத்தும்
திறன் வளர்த்தல்
கருத்துரு வரைபடம் :
தொகைநிலைத் தொடர்கள்!
விளக்கம் :
தொகை நிலைத் தொடர்கள்
·
தொகைநிலைத்
தொடர்கள் : உருபுகள் மறைந்து வருவது
·
ஆறு
வகைப்படும்
·
வேற்றுமைத்
தொகை - வேற்றுமை உருபுகள்
- உருபும் பயனும் உடன் தொக்க
தொகை
·
வினைத்தொகை
– காலம் கரந்த பெயரெச்சம்
·
பண்புத்
தொகை - மை விகுதி, பண்பு உருபுகள்
- இரு பெயரொட்டுப் பண்புத் தொகை
·
உவமைத்
தொகை – உவம உருபுகள்
·
உம்மைத்
தொகை – உம் உருபு
·
அன்மொழித்
தொகை – தொகைநிலை அல்லாத வேறுசொற்கள் மறைந்து வருதல்
·
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø தொகை என்பது பற்றி அறிதல்
Ø தொகைநிலைத் தொடர்களின் வகைகளை அறிதல்
Ø ஒவ்வொரு தொகைநிலைத் தொடர்களின் உறுப்புகளை அறிந்து
பயன்படுத்துதல்
மதிப்பீடு :
LOT :
Ø தொடர்
என்பது __________
Ø வேற்றுமை
உருபுகள் யாவை?
MOT :
Ø வேற்றுமைத்
தொகைப் பற்றிக் கூறுக
Ø
அன்மொழித்தொகைப்
பற்றிக் கூறுக
HOT
:
Ø அன்புச்செல்வன் திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக் கொண்டு இருந்தார். – தடித்தச்
சொல்லின் தொகைகளை வகைப்படுத்துக.
Ø இருபெயரொட்டு பண்புத் தொகை பற்றிக் கூறுக
கற்றல் விளைவுகள் : தொகை நிலைத் தொடர்கள்!
T1010
மொழியில் பொருள் வெளிப்பாட்டிற்கேற்ப பயன்படுத்தப்படும் தொகைநிலைகளின் தன்மைகளை அறிந்து
எழுதுதல்.
தொடர் பணி
:
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை