மூன்றாம் திருப்புதல் தேர்வு-2024 பிப்ரவரி , திருவண்ணாமலை மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா
எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1. |
ஈ. பாடல், கேட்டவர் |
1 |
2. |
அ.கடல் நீர் ஆவியாகி மேகமாதல் |
1 |
3. |
ஆ. இன்மையிலும் விருந்து |
1 |
4. |
ஆ. இறைவனிடம்,
குலசேகராழ்வார் |
1 |
5. |
இ. அறியா
வினா , சுட்டு விடை |
1 |
6. |
இ. செய்குத்தம்பி
பாவலர் |
1 |
7. |
ஆ. மார்ஷல்
ஏ.நேசமணி |
1 |
8. |
அ. சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது |
1 |
9. |
ஈ. இலா |
1 |
10. |
ஈ. கரகாட்டத்தின்
வேறு பெயர்கள் யாவை? |
1 |
11. |
அ. காடு |
1 |
12. |
ஆ. சிலப்பதிகாரம் |
1 |
13. |
அ. எண்ணும்மை |
1 |
14. |
இ. நெய்பவர் |
1 |
15. |
ஈ. இளம்க்கோவடிகள் |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அ.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
17 |
இளம்பயிர்
வளர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்பே மழையின்றி வாடிக் காய்வது போல கருணையன் தாயை
இழந்து வாடினான். |
2 |
18 |
ஐம்பூதங்களும்,ஒன்றனுள் ஒன்று ஒடுங்கின.நீண்ட காலத்திற்குப் பிறகு உயிர்கள் உருவாகி வளரத்தொடங்கின. |
2 |
19 |
ஆற்றுப்படுத்தும் கூத்தன்,
வள்ளலைநாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து, யாம்
இவ்விடத்தேசென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம், நீயும்
அந்தவள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாகஎன்று கூறுதல் ஆற்றுப்படை. |
2 |
20 |
யாப்புக்கட்டுகளுக்கு அப்பாற்பட்டு
செய்யுளும்
, உரைநடையும் கலந்து எழுதப்பெறுவது
வசன கவிதை. |
2 |
21 |
குற்றம் இலனாய்க்
குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
அ. கீரிபாம்பு – உம்மைத்தொகை - நானும் அவனும் கீரியும் பாம்பும் போல இருப்போம். ஆ. முத்துப்பல் – உவமைத்தொகை - அவள் முத்துப்பற்களால் சிரித்தாள் |
2 |
23 |
அமர்ந்தான் – அமர்+த்(ந்)+த்+ஆன் அமர் – பகுதி , த் – சந்தி, ந் – விகாரம்
, த் – இறந்தகால இடைநிலை, ஆண்- ஆண்பால் விகுதி |
2 |
24 |
அ. சிறு பூனையும் சீறும்
ஆ. விடு அவன் வீடு செல்லட்டும் |
2 |
25 |
அ. சோற்றுக்கு ஒரு சோறு பதம் ஆ. மருந்தும் மூன்று
வேளை (அ) நாள் |
2 |
26 |
அ. விண்வெளிக்கதிர்கள் ஆ. அறிவாளர் |
2 |
27 |
முந்தைய நாள் பார்த்த அருச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய
ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்ததாக சேகர்
என்னிடம் கூறினான் |
2 |
28 |
அ. அழைப்பு மணி ஒலித்ததால் கயல்விழி கதவைத் திறந்தார்
ஆ. ஓடிக் கொண்டிருந்த மின் விசிறி சட்டென நின்றதும் அறையில் உள்ளவர்கள் பேச்சு
தடைபட்டது. |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
29 |
ü கல்வியே இவ்வுலகில் மிகச்சிறந்த செல்வமாகும். ü கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ü கல்லாதவரின் கண்கள் புண்களாகக் கருதப்படும். ü கல்வியே வாழ்க்கையைச் செம்மையாக்கும். |
3 |
30 |
அ. கலை, அழகியல், புதுமை ஆ. சிற்றூர் |
3 |
31 |
இடம்: இத்தொடர் ம.பொ.சி அவர்களின்
சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பொருள்: எங்கள் தலையை கொடுத்தாவது தலைநகரைக்
காப்பாற்றுவோம். விளக்கம்: ஆந்திர மாநிலம் பிரியும்போது,
சமயத்தில், செங்கல்வராயன்தலைமையில்
கூட்டப்பட்ட கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக்
காப்போம்” என்று முழங்கினார் |
3 |
பிரிவு-2 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü
நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான் ü
ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று நன்னனின்
நாட்டை அடைக. ü
அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள். ü
அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள் |
3 |
|
33 |
ü மண்ணின் மேல்பக்கம் ஈரமானது. ü பொன்னேரைத் தொழுது நிலத்தை உழுதனர். ü மண் புரண்டு, மழை பொழியும்; நாற்று நிமிர்ந்து வளரும் ü உழவர் நம்பிக்கையுடன் உழுவர். |
3 |
|
34 |
அ.
|
3 |
பிரிவு-3 2X3=6
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. |
||||||||||||||||||||||||||
35 |
ü அகவலோசை
பெற்று,ஈரசைச்சீர்
மிகுந்து வரும். ü ஆசிரியத்தளை
மிகுதியாகவும்,பிற
தளைகள் குறைவாகவும் வரும். ü மூன்றடி
முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில்
முடியும் |
3 |
||||||||||||||||||||||||
36 |
|
3 |
||||||||||||||||||||||||
37 |
தற்குறிப்பேற்ற அணி: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக்
கூறுவது தற்குறிப்பேற்ற அணி. சான்று: “ போருழந் தெடுத்த ஆரெயில்
நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட“ அணிப்பொருத்தம்: கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது, காற்றில்
அசைந்தது. இது இயல்பான நிகழ்வு என்றாலும், அக்கொடியானது கோவலன் கண்ணகியை,”மதுரை நகருக்குள் வரவேண்டாம்”எனக் கூறி, கையசைப்பதாகக் கம்பர் தனது குறிப்பை
ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று. |
3 |
பகுதி-4 5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||||
38 |
அ)
ü குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான் தன்
தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான் (அல்லது) ஆ) கருணையன் தனது தாயை நல்லடக்கம் செய்தான்: குழியினுள் அழகிய
மலர்ப்படுக்கையைப் பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய
தன் அன்னையின் உடலை மண் இட்டு மூடி அடக்கம் செய்தான். அதன்மேல்
மலர்களையும் தன் கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான். கருணையன் தாயை இழந்து வாடுதல்: இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த
வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான். கருணையனின் தவிப்பு: துணையைப் பிரிந்த பறவையைப் போல் நான்
இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு
நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான். பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன: கருணையன் இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார்.
அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது
போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும்,
வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன. |
5 |
||||||||||||
39 |
அ) தங்கைக்குக் கடிதம் மதுரை-1, 08-02-2024 அன்புள்ள தங்கைக்கு, உன் அன்பு அண்ணன் எழுதும் கடிதம். நான் இங்கு நலமாக உள்ளேன். உன்
நலத்தையும், அம்மா,அப்பா, தாத்தா, பாட்டி அனைவருடைய நலத்தையும் அறிய அவா.நீ
எவ்வாறு படிக்கிறாய்? படிப்பையும் விளையாட்டையும்
இருகண்களென நினைத்து, இரண்டிலும் கவனம்
செலுத்துக.திறன்பேசி அதிகமாகப் பயன்படுத்துவதாக அப்பா கூறினார்.திறன்பேசியினால்
நன்மையும் உண்டு;தீமையும் உண்டு. படிப்பிற்காக இணையத்தைப்
பயன்படுத்தும்போது, இலவசஇணைப்பு போல்,தேவையற்ற விளம்பரங்களும், காட்சிகளும் உன்னைக்
கவரும். அவற்றை விலக்கி விட்டு,படிப்பில் மட்டும் கவனம்
செலுத்தி, கல்வியில் உயர்நிலையை அடைய முயலவும். அப்பா
அம்மா சொல்வதைக் கேட்டு நல்ல பெண் என்று பெயர் எடுக்க வேண்டும். அடுத்த மாதம்
விடுமுறையில் வரும்போது நேரில் பேசலாம். இப்படிக்கு உன் அன்பு அண்ணன் த.தமிழ்நிலவன். உறைமேல் முகவரி: த.குறளமுது 10, தெற்குவீதி வேலூர்-1 ஆ) புகார் விண்ணப்பம் அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள், உணவு பாதுகாப்பு ஆணையம், சேலம் – 636001 ஐயா, பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் நேற்று சேலத்தில்
அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும்
இருந்தது.இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு
பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை
எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி. இணைப்பு:
1. விலை இரசீது – நகல்
தங்கள் உண்மையுள்ள, அ அ அ இடம் : சேலம் நாள் : 04-03-2021 உறை மேல் முகவரி:
பெறுநர் உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள், உணவு பாதுகாப்பு ஆணையம், சேலம் – 636001 |
5 |
||||||||||||
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||||
41 |
நூலக உறுப்பினர் படிவம் கிருஷ்ணகிரி மாவட்ட நூலக ஆணைக்குழு
உறுப்பினர் சேர்க்கை
அட்டை அட்டை
எண்: 1234
உறுப்பினர் எண்:
5678
1. பெயர் : க. புனிதா 2. தந்தை பெயர் : கண்ணன் 3. பிறந்த நாள் : 12-10-2009 4. வயது : 15 5. படிப்பு : பத்தாம் வகுப்பு 6. தொலைபேசி / அலைபேசி எண் : 9876543210 7. முகவரி : 23, பாரதி தெரு, கிருஷ்ணகிரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்) நான் கிருஷ்ணகிரி கிளை
நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ100
சந்தா தொகை ரூ20 ஆக மொத்தம் ரூ. 120 செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக்
கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன். இடம்: கிருஷ்ணகிரி நாள்: 05-03-2024 க. புனிதா
தங்கள் உண்மையுள்ள திரு
/ திருமதி / செல்வி / செல்வன்
க. புனிதா அவர்களை
எனக்கு நன்கு தெரியும் எனச் சான்று அளிக்கிறேன்.
பிணையாளர் கையொப்பம் அலுவலக
முத்திரை (பதவி மற்றும் அலுவலகம்) |
5 |
||||||||||||
42 |
அ)
ஆ) பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு
பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த
காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள்
காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது. |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) விளம்பரம்: சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம்
கிடையாது. ஆனால் இன்றளவிலோ வணிக
வளாகங்களும்,வணிகநிறுவனங்களும் பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்கின்றனர். பண்டமாற்று முறை: மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக
மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். ஆனால்
தற்போது உள்ள வணிக வளாகங்களில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அங்காடிகள்: சிலப்பதிகாரம் கூறும் மருவூர்ப்பாக்கத்தில், பலவிதமான வணிகர்களும் ஒரே இடத்தில் இருந்து
விற்பனை செய்தனர். ஆனால், இன்றைய சூழலில் அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில்
உள்ளன. பல தொழில் செய்வோர்: மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய
நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும் வாழ்ந்து
வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்
பலர் உள்ளனர். வணிக வளாகங்கள்: மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில்
நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது வானுயர் கட்டடங்களுக்கு இடம் பெயர்ந்து
உள்ளது (அல்லது) ஆ) தமிழ்ச்சொல்
வளம்: v தமிழ்மொழி
சொல்வளம் மிக்கது. v திராவிட
மொழிகளில் மூத்தது. v பல
மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை. v பிறமொழிச்சொல்லை
நீக்கினாலும் தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான
தேவை: v மொழிபெயர்ப்பிற்காக
பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். v தொழில்நுட்ப
உதவியுடன்
பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும். v மொழிபெயர்ப்பாளர்
அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச்
சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும். |
8 |
44 |
அ.
முன்னுரை: கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப்
பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று
கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார். இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா: அன்னமய்யா அங்கு இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். அன்னமய்யாவின் மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்: இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?”
என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். முடிவுரை: அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம்
கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும்
பொருத்தமுடையதே.. (அல்லது) ஆ.
மகளிர்நாள் விழா இடம் : பள்ளி கலையரங்கம். கலையரங்கத்தில்
ஆசிரியர்கள், மாணவர்கள் கூடுதல் தலைமையாசிரியரின் வரவேற்பு
- இதழாளர் கலையரசியின் சிறப்புரை - ஆசிரியர்களின் வாழ்த்துரை மாணவத் தலைவரின்
நன்றியுரை. திருத்தணி, 8
மார்ச் மார்ச் 8, 2019 திருத்தணியில் உள்ள இராதாகிருஷ்ணன் பள்ளிக் கலையரங்கத்தில் மகளிர் நாள் விழா கொண்டாடப்பட்டது. காலை 9.00 மணி அளவில் தொடங்கிய இவ்விழாவிற்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.
வள்ளிநாயகம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக
வந்திருந்த இதழாளர் திருமதி.கலையரசி அவர்கள் மகளிருக்கான உரிமைகள் பற்றியும்
சமுதாயத்தில் முன்னேறியுள்ள சில மாதரசிகளைப் பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.
பள்ளி மாணவர்கள் பல கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். தமிழ் ஆசிரியர் திருமதி.பாலா
அவர்கள் சிறப்பு விருந்தினரையும், ஆசிரியர்களையும்
வாழ்த்திப் பேசினார். பின்பு பள்ளியின் மாணவர் தலைவர் காமேஷ் நன்றியுரை
கூறினார். நிகழ்ச்சி காலை 11 மணியளவில், நாட்டுப்பண் முழங்க இனிதே நிறைவடைந்தது. |
8 |
45 |
அ. கொரோனா காலக் கதாநாயகர்கள் (அல்லது) ஆ) முன்னுரை: ”உள்ளம் கொள்ளை போனதே மக்கள் நிறைந்த பொடுட்காட்சியில்” குடும்பத்தினருடன் வெளியில் செல்வது யாருக்கு தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில்
கடந்த மாதம் எனது குடும்பத்தினருடன் அரசு பொருட்காட்சிக்குச் சென்றிருந்தேன்.
அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன். அறிவிப்பு: மகிழுந்தை வெளியில் நிறுத்தி விட்டு, நுழைவுச்
சீட்டைப் பெற்றுக்கொண்டு, உள்ளே சென்றோம். நுழைவாயிலின்
வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த அரங்குகள் எங்கெங்கே அமைக்கப்பட்டுள்ளன?
துறைசார்ந்த அரங்குகளின் திசை உள்ளிட்ட அனைத்தும்
ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அமைப்பு: ”அழகு நிறைந்த பொருட்காட்சி அதன் அரங்குகளே அதற்கு சாட்சி” பொருட்காட்சியின் தொடக்கத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த அறிவிப்பைக்
கேட்டு விட்டு, அனைவரும் உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில்
பொருட்காட்சியின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. அந்த
வரைபடம் பொருட்காட்சி அமைப்பை மக்களுக்கு எளிதில் விளக்குவதாக அமைந்திருந்தது.
மேலும் பொருட்காட்சியின் அமைப்பு கூட்ட நெரிசலை சமாளிக்கும் வண்ணம்
அமைக்கப்பட்டிருந்தது. சிறு அங்காடிகள்: ”மெல்ல மெல்ல இருண்டதே! பளிச்சிடும் விளக்குகள் பகல்போல்
காட்டுதே!” பொருட்காட்சியில் விளையாட்டு பொருள்கள், தின்பண்டங்கள்,
வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனங்கள்,
சமையல் கலன்கள், நெகிழிப் பொருட்கள்,
குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள்
மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அது
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. நிகழ்த்தப்பட்ட கலைகள்: ”சுற்றியது இராட்டினங்கள்
மட்டுமல்ல அதனோடு சேர்ந்து எங்கள்
மனங்களும்தான்” பொருட்காட்சியின் உள்ளே இருந்த பொழுதுபோக்கு அம்சங்களில்
குறிப்பிடத்தக்கது நிகழ்கலை ஆகும். அங்கே மயில் ஆட்டம், ஒயிலாட்டம்,
கரகாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட பலவகை
ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு
அது புதுவித அனுபவமாக இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் சிறுவர்களின் மனம் கவரும் வகையில்
பல விளையாட்டு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. பேச்சரங்கம்: இலக்கிய விரும்பிகளுக்கு விருந்தளிக்கும் வகையில், பொருட்காட்சியில் பேச்சரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில்
தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று
பேசிக்கொண்டிருந்தனர். பொருட்காட்சிக்கு வந்த மக்களில் பலர் மெய்மறந்து
பேச்சாளர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு நின்றனர். நாலும் என் குடும்பத்தினரும்
கூட பேச்சி அரங்கத்தில் அமர்ந்து பேச்சைக் கேட்டு விட்டு வந்தோம். அரசின் நலத்திட்டங்கள்: பொருட்காட்சிக்கு முத்தாய்ப்பாக அரசின் நலத்திட்டங்களை விளக்கும்
துறைவாரியான அரங்குகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தின.அந்த அரங்குகளில் அந்தந்த
துறைசார்ந்த வஊழியர்கள் அவர்களது பணிகளையும், மக்களுக்காக
அவர்கள் ஆற்றும் சேவைகளையும் விளக்கும் வகையில் அந்த அரங்குகளை அமைத்து
இருந்தனர். முடிவுரை: இறுதியாக எனக்குத் தேவையான சில பொருட்களை அங்காடிகளில் வாங்கிக் கொண்டு,
வெளியில் வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால்,
வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து,
மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில்
மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது. |
8 |
CLICK HERE TO GET PDF