மாதிரி பொதுத் தேர்வு - 2024
மெல்லக் கற்போர் சிறப்பு வினாத்தாள்
- 1
பத்தாம் வகுப்பு – தமிழ்
நேரம்
: 1.30 மணி
மதிப்பெண் : 50
குறிப்புகள் :
(i) இவ்வினாத்தாள்
ஐந்து பகுதிகளைக் கொண்டது.
(ii)
மெல்லக் கற்போர்க்கான வினாக்கள் அடங்கிய வினாத்தாள்.
(iii)
இந்த வினாத்தாளில் வினாக்கள் சரியான முறையில் இடம் பெற்றிருக்காது.
(iv)
மெல்லக் கற்போர் விடையளிக்கக்கூடிய வினாக்கள் மட்டும் அந்த வினா எண்ணிலேயே
வழங்கப்பட்டுள்ளது.
பகுதி – 1
அறிவுரை : குறியீட்டுடன்
விடையினையும் சேர்த்து எழுதவும். 1
× 15 = 15
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக:-
1.உலகமே வறுமையுற்றாலும்
கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்
அ) உதியன்;சேரலாதன் ஆ) அதியன்;பெருஞ்சாத்தன்
இ) பேகன் ; கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி
2. எய்துவர் எய்தாப்
பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு
அ)
கூவிளம் தேமா மலர் ஆ) கூவிளம் புளிமா நாள்
இ) தேமா புளிமா காசு ஈ) புளிமா தேமா
பிறப்பு
3.மரபுத் தொடருக்கான
பொருளைத் தேர்க. “ கண்ணும் கருத்தும் “
அ) வேகப்படுத்துதல் ஆ)
கற்பனை செய்தல்
இ) முழு ஈடுபாட்டுடன் செய்தல் ஈ) ஆற்றில்
இறங்குதல்
4. “ பிரிந்தன புள்ளின் கானில்
பெரிதழுது
இரங்கித் தேம்ப -
பாடலடிகளில் அடிக்கோடிட்ட சொற்களின் பொருளைத் தெரிவு செய்க
அ) கிளை, துளை ஆ) நிலம்,வாட இ) காடு,வாட ஈ) காடு, நிலம்
5. பெயரெச்சத் தொடரை
தேர்க.
அ) இனியன் கவிஞர் ஆ) குயில் கூவியது
இ) அன்பால் கட்டினார் ஈ)
கேட்ட பாடல்
6. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
அ) துலா ஆ)
சீலா இ) குலா ஈ) இலா
7. நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு
கெடும் – சீர்மோனைச் சொற்களைத் தேர்க
அ) நாடி - முறைசெய்யா ஆ) நாள்தொறும் - மன்னவன்
இ) நாள்தொறும் - முறை ஈ) நாள்தொறும் - நாடி
அ) ஆறில்லா ஊருக்கு - 1. சோற்றுக்கு ஒரு சோறு பதம்
ஆ) உப்பில்லாப் பண்டம் - 2. நூறு வயது
இ) நொறுங்க தின்றால் - 3. குப்பையிலே
ஈ) ஒரு பானை - 4. அழகு பாழ்
அ) அ-4. ஆ-1, இ-3,
ஈ-2 ஆ) அ-4, ஆ-3, இ-2,
ஈ-1
இ) அ-2, ஆ-4, இ-1,
ஈ-3 ஈ) அ-3, ஆ-1, இ-4,
ஈ-2
9.‘ தன் நாட்டு மக்களுக்குத்
தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ என்னும் மெய்கீர்த்தித்
தொடர் உணர்த்தும் பொருள்-
அ) மேம்பட்ட நிருவாகத்திறன்
பெற்றவர் ஆ) மிகுந்த செல்வம் உடையவர்
இ) பண்பட்ட மனித நேயம் ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்
10. சிரித்துப் பேசினார் – இத்தொடருக்குரிய அடுக்குத் தொடரை
தேர்க.
அ) சிரித்துக் கொண்டே
பேசினார் ஆ) சிரிப்பதால் பேசினார்
இ) சிரித்துச் சிரித்துப்
பேசினார் ஈ) சிரிப்புடன் பேசினார்
11. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன்
காரணம்___
அ) நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல் ஈ)
கோட்டையை முற்றுகையிடல்
பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15)
விடையளிக்க:-
“ எமது உயிர் – நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு
நன்றாக வீசு,
சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே
பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே
மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம்
நின்று வீசிக் கொண்டிரு
உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்
உன்னை வழிபடுகின்றோம்”
12) இப்பாடலை இயற்றியவர்
அ) பாரதிதாசன் ஆ) பாரதியார் இ) வைரமுத்து ஈ) சுரதா
13) ‘ லயத்துடன் ‘ – பொருள் தருக.
அ) சீராக ஆ) வேகமாக இ) அழுத்தமாக ஈ) மெதுவாக
14. சீர் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
அ) நெருப்பு - தருமாறு ஆ) அவித்துவிடாதே – மடித்துவிடாதே
இ) பாட்டுகிறோம் - கூறுகிறோம் ஈ) சக்தி – குறைந்து
15) பாடலில் உள்ள இயைபுச் சொற்களை எழுதுக
அ) நெருப்பு - நீடித்து ஆ) அதனை - அவித்து
இ) பாட்டுகள் – பாடுகிறோம் ஈ) பாடுகிறோம் - கூறுகிறோம்
பகுதி - 2
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்க:- 4×2=8
16. விடைக்கேற்ற வினா
அமைக்க:-
அ) ஒருவர் தம் குறையைச் சொல்வதைக் கேட்டவுடனேயே உதவி செய்பவர்
சான்றோர்.
ஆ) பிறமொழி இலக்கியங்களை அறிந்து கொள்ள மொழிபெயர்ப்பு உதவுகிறது.
21. பண்என்னாம் என்னும் தொடங்கும்
குறளை எழுதுக.
22. கலைச்சொல் தருக:- அ) STORM ஆ)
PHILOSOPHER
24. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-
அ. சிலை – சீலை ஆ. தொடு – தோடு
பகுதி - 3
31. பத்தியைப் படித்து
வினாக்களுக்கு விடையளிக்க:- 1×3=3
தமிழ்நாடு
எத்துணைப் பொருள் வளமுடையதென்பது அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். பிற
நாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும் சில வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக
கோதுமையை எடுத்துக் கொள்ளின் அதில் சம்பாக் கோதுமை, குண்டுக் கோதுமை, வாற்கோதுமை முதலிய
சில வகைகளேயுண்டு. ஆனால் தமிழ்நாட்டில் நெல்லிலோ. செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும்,
பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா,
குண்டுச் சம்பா, குதிரை வாலிச் சம்பா, சிறுமணிச் சம்பா, சீரகச் சம்பா முதலிய அறுபது
உள்வகைகள் உள்ளன.
அ) தமிழ்நாடு பொருள்
வளமுடையது என்பது எதனால் விளங்கும்?
ஆ) கோதுமையின் வகைகளைக்
குறிப்பிடுக.
இ) தமிழ்நாட்டின்
நெல்லின் வகைகளை எழுதுக.
36. தீவக அணியை விளக்கி, அதன் வகைகளைக் கூறுக. 1×3=3
37.தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே 1×3=3
வேளாண்மை என்னும்
செருக்கு – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு
தருக..
பகுதி - 4
39.
கடிதம் எழுதுக:- 1×5=5
அ) புதிததாகத் திறன்பேசி வாங்கியிருக்கும் தங்கைக்குத் திறன்பேசியின்
பயன்பாடு குறித்த அறிவுரைகளைக் கூறிக் கடிதம் எழுதுக. ( அல்லது )
ஆ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ‘ உழவுத் தொழிலுக்கு
வந்தனை செய்வோம்’ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக்
கடிதம் எழுதுக.
40. காட்சியைக்
கண்டு கவினுற எழுதுக:- 1×4=4
41. படிவம் நிரப்புக:- 1×4=4
அறிவழகனின் 16 வயது மகன் முகிலன், சேலம் மாவட்டத்தில் காமராஜர்
நகர், பாரதியார் தெருவில், 51ம் இலக்க
எண்ணில் வசித்து வருகிறார். தந்தையிடம் ரூ 200 பெற்றுக் கொண்டு அவர் அங்குள்ள மைய நூலகத்தில் உறுப்பினராக சேர விரும்புகிறார். தேர்வர் தம்மை அன்பழகனாக கருதி
உரிய படிவத்தை நிரப்புக
பகுதி - 5
ஊ ) பின் வரும் வினாவிற்கு
ஒரு பக்க அளவில் விடையளிக்க:- 1×5=5
45.அ) குறிப்புகளைக் கொண்டு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னும் தலைப்பில்
கட்டுரை ஒன்று எழுதுக.
முன்னுரை –. நிலம்,நீர் மாசு – காற்று, வளி மாசு – சுற்றுச்சூழல் மாசும்
மனித குலத்திற்கான கேடும் – விழிப்புணர்வு - முடிவுரை ( அல்லது )
ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக்
“ போதை இல்லாப் புது உலகைப் படைப்போம் “ என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – பரவலான போதைப் பழக்கம் – போதைப் பழக்கத்திற்கான
காரணங்கள் – போதைப் பழக்கத்தின் விளைவுகள் – விடுபடும் வழிமுறைகள் – விழிப்புணர்வு
பரப்புரைகள் – நமது கடமைகள் - முடிவுரை
வினாத்தாள் தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி,
கோரணம்பட்டி, சேலம்
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
மேலும் பல்வேறு கற்றல் வளங்கள்
பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி
மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம்
வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று
அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக்
கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும்.
வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866
என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்
வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய 10 விநாடிகள் காத்திருக்கவும்
எங்கள்
குழுவில் இணைய:-
WHATSAPP TELEGRAM FACE
BOOK GROUP
TELEGRAM LINK : https://t.me/thamizhvithai
FACE BOOK LINK : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share