10TH-TAMIL-SLOW LEARNER - SPECIAL QUESTION- 2

  

மாதிரி பொதுத் தேர்வு - 2024

மெல்லக் கற்போர் சிறப்பு வினாத்தாள் - 2

பத்தாம் வகுப்பு – தமிழ்

நேரம் : 1.30 மணி                                                                                     மதிப்பெண் : 50



குறிப்புகள் :

   (i)  இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

   (ii) மெல்லக் கற்போர்க்கான வினாக்கள் அடங்கிய வினாத்தாள்.

   (iii) இந்த வினாத்தாளில் வினாக்கள் சரியான முறையில் இடம் பெற்றிருக்காது.

   (iv) மெல்லக் கற்போர் விடையளிக்கக்கூடிய வினாக்கள் மட்டும் அந்த வினா எண்ணிலேயே   

      வழங்கப்பட்டுள்ளது.

பகுதி – 1

அறிவுரை : குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                       1 × 15 = 15

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:-                                

1. உயிரைவிடச் சிறப்பாக பேணிக் காக்கப்படும் – பொருளுக்கேற்ற திருக்குறள் அடியைத் தேர்க

) நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று      ) ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை              

) உயிரினும் ஓம்பப் படும்                     ) எய்துவர் எய்தாப் பழி

2. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ________

) குலை வகை ஆ) மணிவகை இ) கொழுந்து வகை ஈ) இலை வகை

3 ஜப்பான் உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயரைத் தேர்ந்தெடுக்க.

அ) இலா       ஆ) பெப்பர்    இ) வேர்டுஸ்மித்       ஈ) வாட்சன்

4. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் _______

அ) முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்               ஆ) குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்  

இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்             ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்

5. ‘ மொழி ஞாயிறு ‘ – என்றழைக்கப்படுபவர் யார்?

அ) தமிழழகனார்      ஆ) கம்பர்      இ) தேவநேயப் பாவாணர்              ஈ) வைரமுத்து

6. கலையின் கணவனாகவும்,சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்- ஜெயகாந்தனின் இக்க்கூற்றிலிருந்து நாம் புரிந்துக் கொள்வது_____________

அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.

7. ‘ சாகும் போது தமிழ் படித்துச் சாக வேண்டும்     - என்றன்

    சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் ‘ – என்று கூறியவர்..

) திரு.வி.க    ) க.சச்சிதானந்தன்                ) நம்பூதனார்           ) தனிநாயக அடிகள்

8. தமிழனத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மா.பொ.சி. கருதியது ___________

அ) திருக்குறள்                 ஆ) புறநானூறு        இ) கம்பராமாயணம்            ஈ) சிலப்பதிகாரம்

9“ கத்துங் குயிலோசை – சற்றே வந்த

  காதிற் படவேணும் “ – பாரதியார்.   - இப்பாடலடியில் இடம் பெற்றுள்ள வழுவமைதி

அ) திணை வழுவமைதி               ஆ) பால் வழுவமைதி

இ) மரபு வழுவமைதி                    ஈ) கால வழுவமைதி

10. குலசேகர ஆழ்வார் “ வித்துவகோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.

    பூனையார் பால் சோற்றைக் கண்டதும் விரைந்து வருகிறார். – ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதிகள் முறையே-

அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி          ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி

11. “ நாற்றிசையும் செல்லாத நாடில்லை” “ ஐந்துசால்பு ஊன்றிய தூண்” – இந்தச் செய்யுள் அடிகளில் இடம்பெற்றுள்ள எண்ணுப்பெயர்களையும் அவற்றிற்கான தமிழ் எண்களையும் தேர்க.

) நான்கு , ஐந்து – ௪ ,௫               ) மூன்று, நான்கு – ௩ , ௪

) ஐந்து , ஏழு – ௫ , ௭                   ) நான்கு , ஆறு – ,

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

"ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ

வேழ நெடும்படை கண்டு நடுங்கிடும் வில்லாளோ

தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல் அன்றோ

ஏழமை வேட னிறந்தில னென்றெனை யேசாரோ"

12. இப்பாடல் இடம் பெற்ற நூல்

(அ) தேம்பாவணி  (ஆ) பெருமாள் திருமொழி  (இ) கம்பராமாயணம்   (ஈ) சிலப்பதிகாரம்

13. இப்பாடலின் ஆசிரியர்

(அ) இளங்கோவடிகள்  (ஆ) செய்கு தம்பி பாவலர் (இ) கம்பர்      ஈ) வீரமாமுனிவர்

14. நெடுந்திரை – இலக்கணக் குறிப்பு தருக.

(அ) உவமைத் தொகை  (ஆ) பண்புத் தொகை   (இ)  உம்மைத் தொகை  (ஈ) வினைத்தொகை

15. இப்பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக

(அ) நெடுந்திரை – போவாரோ        (ஆ) நெடுந்திரை – நெடும்படை

  (இ) தோழமை – ஏழமை                (ஈ) போவாரோ - வில்லாளோ

பகுதி - 2

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:-                                                   4×2=8

16. விடைக்கேற்ற வினா அமைக்க:-

அ) தமிழ்த்தென்றல் திரு.வி.க.போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் தமிழ்த்திரு. இரா. இளங்குமரனார்.

ஆ) ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்கவேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர்.

21. ‘ வினை ‘ என முடியும்  திருக்குறளை எழுதுக.

22. கலைச்சொல் தருக:- அ) DISCUSSION         ஆ) EMBLEM

24. தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.

அ) கொஞ்சம் அதிகம்                  ஆ) மறக்க நினைக்கிறேன்

பகுதி - 3

31. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-                                         1×3=3

சங்கப்பாடல்களின் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் அரசர்களை முதன்மைப்படுத்தியே கூறப்பட்டுள்ளன. அரசன் செங்கோல் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்று பல பாடல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப் பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது. அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று இலக்கியங்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அரசன் அறநெறியில் ஆட்சி செய்வதற்கு அமைச்சரும் உதவினர் என்றும் பாடப்பட்டுள்ளது.

அ) அரசன் எதனைப் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும்?

ஆ) அரசனின் அறநெறி ஆட்சிக்கு யார் உதவினர்?

இ) அரசனின் கடமையாக இலக்கியங்களில் சொல்லப்பட்டிருப்பதைக் குறிப்பிடுக.

36. .“ வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்                                                      1×3=3

      கோலொடு நின்றான் இரவு“  - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

37. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ                                                1×3=3

        டைந்துடன் மாண்ட தமைச்சு   – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.

பகுதி - 4

39. கடிதம் எழுதுக:-                                                                                           1×5=5

அ)  உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக 

( அல்லது )

ஆ) பள்ளித் திடலில் கிடைத்த பணப் பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-                                                   1×4=4



41. படிவம் நிரப்புக:-                                                                                              1×4=4

தமிழழகனின் மகன் இனியன் இளங்கலை தமிழ் பட்டம் முடித்துள்ளார். அவர் தட்டச்சு பிரிவில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் மேல்நிலை வகுப்பு முடித்துள்ளார். கணினியில் எம்.எஸ்.ஆபிஸ் முடித்துள்ளார். அவர் தமிழ் வாரப்பத்திரிக்கையில் தட்டச்சர் பணி வேண்டி விண்ணபிக்கிறார். தேர்வர் தன்னை இனியனாக நினைத்து உரிய பரிவத்தை நிரப்புக.

பகுதி - 5

ஊ ) பின் வரும் வினாவிற்கு ஒரு பக்க அளவில் விடையளிக்க:-                          1×5=5

45.அ) குறிப்புகளைக் கொண்டு பொருட்காட்சிக்குச் சென்ற நிகழ்வைக் கட்டுரையாக எழுதுக.

முன்னுரை - பொருட்காட்சி வகைகள் சென்னையில் அரசு பொருட்காட்சி துறை அரங்குகள் பொழுதுபோக்கு விற்பனை - பொருட்காட்சியால் விளையும் நன்மைகள்-  முடிவுரை   ( அல்லது )

ஆ) குறிப்புகளைக் கொண்டு, ‘மக்கள் பணியே மகத்தான பணி ‘ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.

முன்னுரை – தமிழகம் தந்த தவப்புதல்வர் – நாட்டுப்பற்று – மொழிப்பற்று – பொதுவாழ்வில் தூய்மை – எளிமை – மக்கள் பணியே மகத்தான பணி – முடிவுரை


வினாத்தாள் தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி, சேலம்

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய 10 விநாடிகள் காத்திருக்கவும்

எங்கள் குழுவில் இணைய:-

WHATSAPP                           TELEGRAM                   FACE BOOK GROUP


நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post